“இந்த ஆட்சியைப் பற்றி குறை சொல்ல எதுவும் கிடைக்காததால்…” – இபிஎஸ்ஸுக்கு முதல்வர் ஸ்டாலின் பதில்

சென்னை: “எடப்பாடி பழனிசாமிக்கு இந்த ஆட்சியை பற்றி குறை சொல்ல எதுவும் கிடைக்கவில்லை. அதனால், திரும்ப திரும்ப அரைத்த மாவை அரைப்பது போல் இப்படி குறை கூறுகிறார். அதற்கு நான் பதில் சொல்லி என் தரத்தை தாழ்த்திக் கொள்ள விரும்பவில்லை,” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (மே 27) கொளத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத் துறை சார்பில் 22.61 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மூன்று மூத்த … Read more

ஜம்மு காஷ்மீரின் சுற்றுலா மீண்டும் மீண்டும் அரசியலில் சிக்குகிறது: உமர் அப்துல்லா

பஹல்காம்: “சுற்றுலா என்பது மோதல்களுக்கு இடமில்லாத ஒரு செயலாக இருக்க வேண்டும். மீண்டும் மீண்டும் ஜம்மு காஷ்மீரின் சுற்றுலா அரசியலில் சிக்குகிறது. ஜம்மு காஷ்மீர் எதிர்கொள்ளும் சூழ்நிலையிலிருந்து சுற்றுலாத் துறை தனிமைப்படுத்தப்படுவதை எனது அரசு உறுதி செய்யும்” என்று அம்மாநில முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு தெற்கு காஷ்மீரின் பஹல்காமில் ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா இன்று அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தினார். இதனைத் தொடர்ந்து பேசிய அவர், “சுற்றுலா என்பது மோதல்களுக்கு … Read more

16 வயது சிறுவனை 'கணவர்' என்று கூறும் 35 வயது பெண்.. டெல்லியில் நடந்தது என்ன?

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் 16 வயது சிறுவனை கணவர் என கூறி உள்ளது அனைவரின் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

திருந்தாத ஜெயம் ரவி! கோர்ட் சொல்லியும் வெளியிட்ட பதிவு..என்ன சொல்லியிருக்காரு?

Jayam Ravi Legal Notice To Remove Controversial Contents : பிரபல நடிகர் ரவி மோகன் என்கிற ஜெயம் ரவி, கடைசியாக ஒரே ஒரு அறிவிப்பை மட்டும் இணையத்தில் தற்போது வெளியிட்டிருக்கிறார். இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.

முக கவசம் கட்டாயம் இல்லை : மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர்

புதுச்சேரி நாடெங்கும் கொரோனா பரவி வரும் நிலையில் முக்க்கவசம் அணிவது கட்டாயமில்லை என மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் கூறியுள்ளார். வரும் ஜுன் 21 ஆம் தேதி சர்வதேச யோகா தின விழா கொண்டாடப்பட உள்ள நிலையில் அதன் 25 நாள் முன்னோட்ட நிகழ்ச்சி மத்திய ஆயுஷ் அமைச்சகம் சார்பில் புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள காந்தி திடலில் நடைபெற்றது. மத்திய ஆயுஷ் மற்றும் சுகாதாரத்துறை இணையமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ், துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் … Read more

குடிபோதையில் தகராறு; பணம் தர மறுத்த தந்தையை கொடூரமாக கொலை செய்த இளைஞர்

தென்காசி மாவட்டம், குருவிகுளம் அருகேயுள்ள மலையான்குளம் கிராமத்தைச் சேர்ந்த செல்லையா. இவர், அப்பகுதியில் விவசாயம் செய்து வருகிறார். இவரது மனைவி பழனியம்மாள். இவர், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இவர்களுக்கு கந்தசாமி, கணேசன், முருகையா ஆகிய மூன்று மகன்களும் சண்முகத்தாய் என்ற மகளும் உள்ளனர். கைது செய்யப்பட்ட கணேசன். அனைவருக்கும் திருமணமாகி உள்ளூரிலேயே வசித்து வருகின்றனர். மூத்த மகனான கந்தசாமியுடன் செல்லையா வசித்து வந்தார். கடந்த ஆண்டு செல்லையா, அவருக்குச் சொந்தமான நெல் வயலை … Read more

கனமழை காரணமாக முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்வு!

குமுளி: நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, முல்லைப் பெரியாறு அணையில் ஒரே நாளில் 3 அடி அளவுக்கு நீர்மட்டம் உயர்ந்துள்ளது. தென்மேற்குப் பருவமழை இந்த ஆண்டு வழக்கத்தை விட முன்னதாகவே தொடங்கி விட்டது. இதனால் கடந்த ஒரு வாரமாக தமிழக – கேரள எல்லையில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் அணைக்கான நீர் வரத்து பல மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த 23-ம் தேதி … Read more

பெங்களூருவில் வரலாறு காணாத மழை: கர்நாடகாவுக்கு 5 நாட்கள் ரெட் அலர்ட்!

பெங்களூரு: கர்நாடகாவின் கடலோர பகுதிகளுக்கு அடுத்து வரும் 5 நாட்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை (ரெட் அலர்ட்) விடுத்துள்ளது. பெலகாவியில் சுவர் இடிந்து விழுந்ததில் மூன்று வயது சிறுமி உயிரிழந்தார். இதனிடையே, பெங்களூருவில் வரலாறு காணாத மழைப் பொழிவு பதிவாகியுள்ளது. தென்மேற்கு பருவமழை கர்நாடகாவில் தீவிரமடைந்துள்ள நிலையில், திங்கள்கிழமை தொடர்ந்து மூன்றாவது நாளாக கனமழை பெய்ததால் பல்வேறு மாவட்டங்களில் நிலச்சரிவுகள் மற்றும் வெள்ளப்பெருக்கால் போக்குவரத்து பாதிப்புகள் ஏற்பட்டது. கடலோர கர்நாடகாவுக்கு … Read more

லிவர்பூல் வெற்றிப் பேரணியில் கொடூரம்: கூட்டத்துக்குள் தாறுமாறாக ஓடிய வாகனம் மோதி 50 பேர் காயம்

லண்டன்: இங்கிலாந்தில், லிவர்பூல் கிளப் கால்பந்து அணியின் ப்ரீமியர் லீக் சாம்பியன்ஷிப் வெற்றி அணிவகுப்பு கொண்டாட்டத்தின் போது நகர வீதியில் குழுமியிருந்த அந்த அணியின் ரசிகர்கள் மீது மினிவேன் ஒன்று மோதியதில் சுமார் 50 பேர் காயமடைந்தனர். இந்த விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். இதில் காயமடைந்த 20 பேருக்கு சம்பவ இடத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட்டது. 27 பேர் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். அதில் நான்கு பேர் சிறுவர்கள். ஒரு நபரும், … Read more

சர்வதேச தரத்தில் திரைப்பட நகரம்! போனி கபூர் எடுத்த சூப்பர் முடிவு..

Boney Kapoor Film City : போனி கபூரின் முயற்சியால் சர்வதேச தரத்தில் உத்தரப்பிரதேசத்தில் திரைப்பட நகரம் உருவாகிறது!