வீரராகவ பெருமாள் கோயில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த மூவரின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் – முதல்வர் உத்தரவு

சென்னை: திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த மூன்று பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கிட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்திக் குறிப்பு: சென்னை சேலையூரில் உள்ள அகோபில மடத்தில் தங்கி வேதம் பயின்று வந்த விருதுநகர் மாவட்டம், திருத்தங்கலைச் சேர்ந்த வீரராகவன் (24), சென்னை, அம்பத்தூர் லெனின் நகரைச் சேர்ந்த சிறுவன் வெங்கட்ராமன் (17) மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூரைச் சேர்ந்த … Read more

“இனி இந்தியாவின் தண்ணீர் இந்தியாவுக்கே” – சிந்து நதி ஒப்பந்தம் நிறுத்தம் குறித்து பிரதமர் மோடி விளக்கம்

புதுடெல்லி: இந்தியா, பாகிஸ்தான் இடையிலான சிந்து நதிநீர் ஒப்பந்தந்ததை நிறுத்தியது குறித்து பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற ஊடக நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட பிரதமர் மோடி இது குறித்து பேசியதாவது: “இப்போதெல்லாம், ஊடகங்களில் தண்ணீர் பற்றி நிறைய விவாதங்கள் நடக்கின்றன. முன்பு, இந்தியாவின்அடிப்படை உரிமையாக இருந்த தண்ணீர் கூட நாட்டிலிருந்து வெளியேறிக்கொண்டிருந்தது. இப்போது, ​​இந்தியாவின் தண்ணீர் இந்தியாவின் நலனுக்காக பயன்படப் போகிறது. அது இந்தியாவின் நலனுக்காகப் பாதுகாக்கப்படும். இந்தியாவின் முன்னேற்றத்திற்காகப் பயன்படுத்தப்படும். … Read more

கோடிக்கணக்கான இந்திய குடும்பங்களில்… நம்பகமான பிராண்டாக உருவெடுத்துள்ள பதஞ்சலி!

பதஞ்சலி பிராண்ட் இந்தியாவில் மில்லியன் கணக்கான வீடுகளில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளது. ஆயுர்வேத மற்றும் இயற்கைப் பொருட்களின் இந்த மிகவும் நம்பகமான அடையாளம், ஒரு சில வருடங்களிலேயே பெரிய பன்னாட்டு நிறுவனங்களுக்கு கடுமையான போட்டியைக் கொடுத்துள்ளது.

இதனால்தான் கேப்டன் பதவியில் இருந்து விலகினேன்.. உண்மை போட்டுடைத்த கோலி!

நவீன கிரிக்கெட்டின் ஜாம்பாவான் என அழைக்கப்படுபவர் விராட் கோலி. இவர் தனது கிரிக்கெட் கரியரில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். இன்னும் பல சாதனைகளை படைத்தும் வருகிறார். இந்திய அணியை கேப்டனாக தோனிக்குப் பிறகு, விராட் கோலி வழிநடத்தி வந்தார். இருப்பினும், கடந்த 2021 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு டி20 போட்டிகளுக்கான இந்திய அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து அவர் விலகினார். அதன் பின், ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்தும் … Read more

சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனைகளில் ரூ.1.5 லட்சம் வரை இலவச சிகிச்சை! மத்தியஅரசு

டெல்லி: சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனைகளில் ரூ.1.5 லட்சம் வரை இலவச சிகிச்சை  வழங்கப்படும் என மத்தியஅரசு அறிவித்துள்ளது. அதாவது, விபத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு ரொக்கமில்லா சிகிச்சை திட்டத்தை இந்தியா அறிமுகப்படுத்துகிறது. சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்றியமைக்கப்பட்ட திட்டத்தை அரசாங்கம் கொண்டு வரும் என்று மத்திய போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி ஜனவரி மாதம் அறிவித்திருந்தார்.  அதன்படி இந்த திட்டத்தின் கீழ், ஒரு நபருக்கு விபத்துக்கு அதிகபட்சமாக ₹1.5 லட்சம் வரை ரொக்கமில்லா சிகிச்சையைப் பெற உரிமை உண்டு. … Read more

"முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு குறித்து அச்சப்பட வேண்டாம்" – உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

முல்லைப் பெரியாறு அணை தொடர்பான பிரதான வழக்கின் விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் திபங்கர் தத்தா ஆகியோர் அமர்வில் நடைபெற்றது. அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், “அணை பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு விவகாரத்தில் நாங்கள் உரிய வேலை செய்யாத வண்ணம் கேரளா அரசு தொடர்ந்து இடையூறு செய்து வருகிறது. ஏற்கனவே உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை மீறும் வகையில்தான் கேரளா அரசின் செயல்பாடுகள் இருக்கின்றன. முல்லைப் பெரியாறு அணை மரங்களை … Read more

வடகாடு சம்பவத்தில் காவல் துறை ஒரு சார்பான போக்கு: திருமாவளவன் குற்றச்சாட்டு

சென்னை: “வடகாடு சம்பவத்தில் புலன் விசாரணைக்கு முன்னரே காவல் துறை ஒரு முன்முடிவை எடுத்து அறிவிப்பது சரியா? ஒரு சார்பான இப்போக்கை காவல் துறை கைவிட வேண்டும்” என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுக்கோட்டை மாவட்டம் திருவோணம் அருகேயுள்ள வடகாடு என்னுமிடத்தில் நேற்று (மே 5) நள்ளிரவில் ஆதிதிராவிடர் குடியிருப்பில் ஆதிக்க சாதிவெறிக் கும்பல் கொடூர ஆயுதங்களுடன் நுழைந்து, கொலைவெறித் தாக்குதலை நடத்தியுள்ளது. அதில் ஆறு … Read more

ராஜஸ்தானில் ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய எம்எல்ஏ கைது

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கியதாக பாரத் ஆதிவாசி கட்சி எம்எல்ஏ கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து ராஜஸ்தான் ஊழல் தடுப்பு அமைப்பின் (ஏடிபி) இயக்குநர் ஜெனரல் ரவி பிரகாஷ் மெஹர்தா செய்தியாளர்களிடம் கூறியதாவது: ரவீந்திர குமார் என்பவர் கரவுலி மாவட்டம் தொடாபிம் நகருக்கு அருகே சுரங்கம் நடத்தி வருகிறார். இந்த சுரங்கம் சட்டவிரோதமாக செயல்படுவதாகவும் இதுகுறித்து சட்டப்பேரவையில் கேள்வி எழுபப் போவதாகவும் பாரத் ஆதிவாசி கட்சி எம்எல்ஏ ஜெய்கிரிஷ் படேல் (37) ரவீந்திர குமாரிடம் தெரிவித்துள்ளார். … Read more

நாளை போர்க்கால ஒத்திகை: மின் தடை, சைரன் ஒலி… மக்கள் செய்ய வேண்டியது என்ன?

Mock Drill in India: மே 7 ஆம் தேதி திட்டமிடப்பட்டுள்ள இந்தப் போர்க்கால ஒத்திகை, பல்வேறு அவசநிலைகளுக்கு நாடு, நாட்டு மக்கள், அரசாங்க நிறுவனங்கள், ஏஜென்சிகள், பல்வேறு துறைகள் ஆகியவற்றின் தயார்நிலையை மதிப்பிடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

CSK பிளேயிங் லெவனில் புதிய பௌலர்… KKR போட்டியில் கலீல் அகமதிற்கு ஓய்வா…?

Chennai Super Kings: சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி நாளை (மே 7) கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் மோதுகிறது. நடப்பு 18வது ஐபிஎல் தொடரில் இது 57வது லீக் போட்டி ஆகும். KKR vs CSK: பிளே ஆப் போகுமா கேகேஆர்? ஐபிஎல் புள்ளிப்பட்டியலின்படி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி (Chennai Super Kings) 10வது இடத்தில் இருக்கிறது. ஏற்கெனவே பிளே ஆப் ரேஸில் இருந்து வெளியேறிவிட்டது. … Read more