Thug Life: "என்னுடன் வேலை செய்பவர்களே என்னைக் காயப்படுத்தினர்" – கமல் பாராட்டு குறித்து ஜோஜு ஜார்ஜ்

நாயகன் திரைப்படத்திற்குப் பிறகு நடிகர் கமல் ஹாசனும், இயக்குநர் மணிரத்னமும் இணைந்திருப்பது தக் லைஃப் படத்திற்குத்தான். தக் லைஃப் படம் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது. இந்தப் படத்தில் சிம்புவின் ஸ்கிரீன் பிரசன்ஸும், அவரின் நடிப்பும் பெருமளவு அவரின் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை அதிகரித்திருக்கிறது. ‘தக் லைஃப்’ படத்தில்… வரும் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் இந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவில் திரைப்படத்தில் நடித்திருந்த சிம்பு, திரிஷா, அபிராமி, … Read more

“நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்றது ஏன்? திமுக உடன்பிறப்புகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்…

சென்னை: “நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்றது ஏன்? என்பது குறித்து திமுக உடன்பிறப்புகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். ‘இந்தியத் தலைநகரில் தமிழ்நாட்டின் உரிமைக் குரல்!’ என்ற தலைப்பில் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவனான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள மடல் வருமாறு : இந்திய ஒன்றியத்தின் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தலைமையில் நடைபெற்ற மாநில முதலமைச்சர்கள் பங்கேற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக தலைநகர் டெல்லிக்கு, தமிழ்நாட்டின் முதலமைச்சராக நான் செல்கிறேன் … Read more

கூடலூர்: காரில் ஆற்றைக் கடக்க முயன்றபோது விபரீதம்; வெள்ளத்தில் சிக்கியவர்களைப் போராடி மீட்ட வீரர்கள்

நீலகிரி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாள்களாக இடைவிடாத தொடர் சாரல் மழை பெய்து வருகிறது. காற்றுடன் கூடிய இந்தத் தொடர் மழையால் ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு, சுற்றுலாத் தலங்களும் மூடப்பட்டுள்ளன. பேரிடர் அபாயம் நிறைந்த பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணிகளில் அரசுத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். தொடர் மழையால் ஆறுகளிலும் நீரோடைகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. கரையோரப் பகுதிகளில் மக்கள் நடமாடுவதைத் தவிர்க்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கிய கார் … Read more

முதல்வர் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்றது தமிழக நலனுக்கு உகந்த அணுகுமுறைதான்: திருமாவளவன் கருத்து

திருச்சி: மத்திய அரசு நிறுத்தி வைத்திருக்கும் நிதியை தமிழகத்துக்கு ஒதுக்க வேண்டும் என்று நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் வலியுறுத்தியுள்ளார். இக்கூட்டத்தில் முதல்வர் பங்கேற்றது தமிழக மக்கள் நலனுக்கு உகந்த அணுகுமுறைதான் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறினார். திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: நிதி ஆயோக் கூட்டங்களில் தமிழக முதல்வர் பங்கேற்காமல் எதிர்ப்பு தெரிவித்தது ஒரு அடையாளப் போராட்டம்தான். அதுவே தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்பதில்லை. பாஜக அல்லாத … Read more

காதலியுடன்​ படம்​ வெளியானதால்​ நடவடிக்கை: மூத்த மகனை கட்சியிலிருந்து நீக்கினார்​ லாலு

பாட்​​னா: தேஜ் பிரதாப் யாதவ் தனது காதலியுடன் இருக்கும் படம் முகநூலில் வெளியானதை அடுத்து, அவரை ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியிலிருந்தும், குடும்பத்திலிருந்தும் 6 ஆண்டுகள் நீக்குவதாக லாலு பிரசாத் யாதவ் அறிவித்துள்ளார். ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ்(37). இவருக்கும் பிஹார் முன்னாள் முதல்வர் தரோகோ ராயின் பேத்தி ஐஸ்வர்யா ராய்க்கும் கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. கணவர் மற்றும் கணவர் குடும்பத்தார் அவமதிப்பதாக … Read more

1ம் தேதி முதல் இந்த வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் இல்லை! மாநில அரசு முடிவு!

வரும் ஜூலை மாதம் முதல் பழைய வாகனங்களுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் நிரப்ப அனுமதி இல்லை. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில அரசு தகவல்.

பிரதமர் மோடி ஆபரேஷன் சிந்தூர் குறித்து பெருமிதம்

டெல்லி பிரதமர் மோடி இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை புகழ்ந்துள்ளார். நேற்று பிரதமர் மோடி தனது மாதாந்திர வானொலி நிகழ்ச்சியான ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில், இன்று ஒட்டுமொத்த நாடும் தீவிரவாதத்திற்கு எதிராக ஒன்றுபட்டுள்ளது. கோபம், உறுதியால் நிரம்பி உள்ளது. தீவிரவாதத்திற்கு எதிரான உலகளாவிய போராட்டத்தில் ஒரு திருப்புமுனையாக ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை அமைந்துள்ளது. புதிய நம்பிக்கையையும் சக்தியையும் தந்துள்ளது. எல்லை தாண்டி தீவிரவாத கட்டமைப்புகளை இந்திய படைகள் துல்லியமாக தாக்கியது அசாதாரணமானது. இந்த நடவடிக்கை ஒருமுறை மட்டுமே … Read more

SRH vs KKR: 22 ரன்களில் மிஸ்ஸான 300 ரன்; நடப்பு சாம்பியனை தோல்வியோடு வழியனுப்பிய ஹைதராபாத்!

முன்னாள் சாம்பியன் vs நடப்பு சாம்பியன்! நடப்பு ஐபிஎல் தொடரில் லீக் போட்டிகள் அதன் இறுதிகட்டத்தை எட்டிவிட்டன. இந்த நிலையில், பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதி பெரும் வாய்ப்பை ஏற்கெனவே இழந்துவிட்ட முன்னாள் சாம்பியன் ஹைதராபாத்தும், நடப்பு சாம்பியன் கொல்கத்தாவும் தனது கடைசி லீக் போட்டியில் நேற்று களமிறங்கின. டாஸ் வென்ற ஹைதராபாத் கேப்டன் பேட் கம்மின்ஸ் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். ரஹானே – கம்மின்ஸ் இந்த சீசன் தொடங்கியதும் முதல்முறையாக 300 ரன்களை அடிக்கப் போகும் அணி … Read more

இரட்டை வேடம் போடும் கட்சி திமுக: அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி விமர்சனம்

கோவை: எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒரு நிலைப்பாடு, ஆளும் கட்சியாக இருக்கும்போது ஒரு நிலைப்பாடு என இரட்டை வேடம் போடும் கட்சிதான் திமுக என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: தமிழக முதல்வர் ஸ்டாலின், கடந்த மூன்று ஆண்டுகளாக பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. தமிழகத்துக்குத் தேவையான நிதியை மத்திய அரசு வழங்கவில்லை என்றும், பல்வேறு திட்டங்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை … Read more

உ.பி.யில் 43 ஆண்டுகள் சிறையில் இருந்த 104 வயது முதியவர் விடுதலை

கொலைக் குற்றச்சாட்டில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருந்த உ.பி.யைச் சேர்ந்த 104 வயது கைதி விடுவிக்கப்பட்டார். உத்தர பிரதேசம் கவுசாம்பி மாவட்டம் கவுராயே கிராமத்தைச் சேர்ந்தவர் லகான். இவர் கடந்த 1921-ம் ஆண்டு பிறந்தவர். இவர் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகளில் கடந்த 1977-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். அப்போது இரு தரப்பினர் இடையே நடந்த மோதலில் பிரபு சரோஜ் என்பவர் கொல்லப்பட்டார். இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். … Read more