''பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் ஆபரேஷன் சிந்தூர் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது'' – பிரதமர் மோடி

புதுடெல்லி: “சர்வதேச அளவில் பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் ஆபரேஷன் சிந்தூர் புதிய நம்பிக்கையையும் உத்வேகத்தையும் அளித்துள்ளது” என்று பிரதமர் நரேந்திர மோடி தனது மனதின் குரல் நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் பிரதமர் மோடி, மனதின் குரல் என்ற வானொலி நிகழ்ச்சி மூலம் நாட்டுமக்களிடம் உரையாடி வருகிறார். அதன்படி, தனது 122 மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று கூறியதாவது: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது நமது படை வீரர்கள் வெளிப்படுத்திய துணிச்சல் … Read more

உத்தரகாண்ட்டில் கனமழை, நிலச்சரிவு; போக்குவரத்து பாதிப்பு

டேராடூன், உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பத்ரிநாத், ரிஷிகேஷ் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. பிரபல சுற்றுலா தலங்கள், மத வழிபாட்டு தலங்களுக்கு செல்லும் சாலையிலும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால், கடுமையான போக்குவரத்து நெரிசல் சுமார் 6 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்தி நிற்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். நிலச்சரிவால் சாலையில் … Read more

அபார பந்துவீச்சு.. புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ள குஜராத்தை வீழ்த்திய சென்னை அணி

அகமதாபாத், 10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த மார்ச் 22-ம் தேதி தொடங்கிய இந்த தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன்படி முதலாவதாக அகமதாபாத்தில் நடைபெற்ற 67-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அதில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி, பேட்டிங்கைத் தேர்வு … Read more

உக்ரைன் மீது ரஷியா டிரோன், ஏவுகணை தாக்குதல்; 13 பேர் பலி

கீவ், உக்ரைன், ரஷியா இடையேயான போர் இன்று 1 ஆயிரத்து 186வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகள் முயற்சித்தன. ஆனால் அது தோல்வியில் முடிந்தது. அதேபோல், போர் நிறுத்தம் தொடர்பாக ரஷியாவும், உக்ரைனும் நேரடி பேச்சுவார்த்தை நடத்தின. ஆனால், அந்த பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்தது. இதனால் போர் நீடித்து வருகிறது. இந்நிலையில், உக்ரைன் மீது ரஷியா இன்று டிரோன், ஏவுகணை தாக்குதல் நடத்தியது. 266 … Read more

கோவை பில்லூர் அணை வேகமாக நிரம்புகிறது: பவானி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கோவை: பில்லூர் அணை வேகமாக நிரம்புவதால் இன்று நள்ளிரவு அணையின் இரண்டு மதகுகள் திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட உள்ளது. இதனால் பவானி அற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் க. கிரியப்பனவர் இரவு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கனமழை காரணமாக பில்லூர் அணை நிரம்பி வருகிறது. இன்று(25/05/25) நள்ளிரவு 12 மணிக்கு அணையின் 2 மதகுகள் திறக்கப்பட உள்ளன. எனவே பவானி ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் … Read more

பிரதமர் மோடி தலைமையில் நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி முதல்வர்கள் கூட்டத்தில் பேசப்பட்டது என்ன? – முழு விவரம்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி முதல்வர்கள் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் ஆபரேஷன் சிந்தூர், சாதிவாரி கணக்கெடுப்பு, மத்திய அரசின் ஓராண்டு ஆட்சி குறித்து விரிவான ஆலோசனை நடத்தப்பட்டது. மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடத்தி வருகிறது. குஜராத், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஒடிசா, கோவா, டெல்லி, ஹரியானா, அசாம், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. மகாராஷ்டிரா, பிஹார், ஆந்திரா … Read more

அதிரடி காட்டிய கிளாசன் – டிராவிஸ் ஹெட்! ஐபிஎல்லில் இப்படி ஒரு சாதனை!

ஐபிஎல் 205ன் இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இரண்டு அணிகளும் பிளே ஆப் ரேஸில் இருந்து வெளியேறியதால் அடுத்த ஆண்டுக்கான ஒரு பயிற்சி ஆட்டமாகவே பார்க்கப்பட்டது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங் இந்த சீசன் முழுவதும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அன்னிக்கு பேட்டிங் சொதப்பலாகவே … Read more

சுற்றுலா பயணிகளுக்கு குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி

குற்றாலம் குற்றால அருவிகளில் நீர் வரத்து குசீரானதை தொடர்ந்து சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது . அதிலும் தென்காசி மாவட்டத்தில் பெய்த மழையால் குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்தது. எனவே பாதுகாப்பு கருதி குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.  தற்போது குற்றால அருவிகளில் நீர்வரத்து குறைந்து சீராகியுள்ளது. இவ்வாறு நீர்வரத்து சீரானதை தொடர்ந்து, குற்றாலம், மெயின் அருவி, … Read more

பிரதமர் மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி முதல்-மந்திரிகள் கூட்டம்

டெல்லி, பிரதமர் மோடி தலைமையில் இன்று தேசிய ஜனநாய கூட்டணி முதல்-மந்திரிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேசிய ஜனநாய கூட்டணியில் இடம்பெற்றுள்ள 20 மாநில முதல்-மந்திரிகள் பங்கேற்றனர். அதேபோல், 18 மாநில துணை முதல்-மந்திரிகளும் பங்கேற்றனர். அதேபோல், பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், உள்துறை மந்திரி அமித்ஷா உள்பட பல்வேறு தலைவர்கள் பங்கேற்றனர். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஆதரவாகவும், சாதிவாரி கணக்கெடுப்பிற்கு ஆதரவாகவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதேபோல், நக்சலைட்டுகளை ஒழிக்க … Read more

ஐ.பி.எல்.: முதல் 2 இடங்களை பிடிக்கப்போகும் அணிகள் எவை? – விறுவிறுப்படையும் புள்ளி பட்டியல்

அகமதாபாத், நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று நடந்த லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் மோதின. இதில் முதலில் பேட்டிங் சென்னை 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 230 ரன்கள் குவித்தது. இதையடுத்து களமிறங்கிய குஜராத் 18.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 147 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் குஜராத்தை 83 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை அபார வெற்றிபெற்றது. இந்த ஆட்டம் பிளே ஆப் … Read more