தன் குடும்பத்திற்கு ஆபத்து என்றவுடன் டெல்லி செல்கின்றனர் – விஜய் கடும் விமர்சனம்!

குடும்பச் சுயநலத்திற்காக, தமிழக மானத்தை அடகுவைத்து, ஒன்றிய பா.ஐ.க. அரசிடம் தாள் பணிந்து தலைவணங்கி அடைக்கலம் புகுந்த தி.மு.க. தலைமை என விஜய் திமுகவை விமர்சனம் செய்துள்ளார்.

இந்த மே மாதத்தில் ரூ.35,000-க்குள் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்ஃபோன்கள்

மே 2025 ஆம் ஆண்டில் இந்தியாவில் ரூ.35,000 க்கு கீழ் இருக்கும் சிறந்த கேமரா ஸ்மார்ட்போன்களைத் தேடுகிறீர்கள் என்றால்? இந்த செய்தியை கட்டாயம் படிக்கவும். ஈர்க்கக்கூடிய கேமரா அம்சங்கள், விவரக்குறிப்புகள், பேட்டரி ஆயுள், காட்சி தரம், விலைகள் மற்றும் பலவற்றைக் கொண்ட சிறந்த மாடல்களை இவை கொண்டுள்ளது. Xiaomi 14 Civi Xiaomi 14 Civi ரூ.32,999 விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 120Hz புதுப்பிப்பு வீதத்துடன் கூடிய 6.55-இன்ச் 1.5K AMOLED டிஸ்ப்ளே, 50MP மெயின், … Read more

கொச்சியில் சரக்கு கப்பல் ஒன்று முழுவதுமாக கடலில் மூழ்கியது

கொச்சி சரக்கு கப்பல் ஒன்று கொச்சியில் முழுவதுமாக கடலில் மூழ்கி உள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகில் உள்ள விழிஞ்சம் துறைமுகத்தில் இருந்து கொச்சிக்கு கடலில் சரக்கு கப்பல் ஒன்று சென்று கொண்டு இருந்தது. இந்த கப்பலில் உள்ள கன்டெய்னர்களில் ரசாயனம் இருந்தன. இதற்கிடையே தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதால் அரபிக்கடலில் நேற்று பலத்த காற்று வீசியது. கொச்சி அருகே நடுக்கடலில் சரக்கு கப்பல் சென்றபோது திடீரென்று கவிழ்ந்தது. நல்லவேளையாக மூழ்காமல் சாய்ந்த நிலையில் நின்றது. மேலும் சரக்கு … Read more

'பயமில்லை என்றால் உங்கள் தம்பி ஏன் வெளிநாடு ஓடினார்' – உதயநிதிக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி

அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், கடந்த மூன்று ஆண்டுகளாக பிரதமர் தலைமையில் நடைபெற்ற, நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.  புதுக்கோட்டை: “ED-க்கு மட்டுமல்ல, மோடிக்கும் நாங்கள் பயப்பட மாட்டோம்” – உதயநிதி ஸ்டாலின் எடப்பாடி பழனிசாமி தமிழகத்துக்கு தேவையான நிதியை மத்திய அரசு வழங்கவில்லை, திட்டங்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டை சொல்லி நிதிஆயோக் கூட்டத்தைப் புறக்கணித்தார். அந்த … Read more

‘இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்தை பெறுவதே இலக்கு’ – நாராயணசாமி

புதுச்சேரி: “நிதி ஆயோக்கில் பங்கேற்காததுடன் மாநில அந்தஸ்துக்காக முதல்வர் ரங்கசாமி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் மாநில அந்தஸ்தை போராடி பெறுவோம். அதுதான் எங்கள் இலக்கு. அதற்காக நீதிமன்றத்தையும் நாடுவோம்” என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார். புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் இன்று கூறியதாவது: டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கலந்து கொள்ளவில்லை. தேசிய ஜனநாயக … Read more

கேரள கடற்கரையில் அபாயகரமான சரக்குகளுடன் மூழ்கிய லைபீரிய கப்பல் – 24 பணியாளர்களும் மீட்பு

திருவனந்தபுரம்: கேரளக் கடற்கரையில் அபாயகரமான சரக்குகளுடன் சென்ற லைபீரிய கொள்கலன் கப்பல் மூழ்கியது. அதில் இருந்த 24 பணியாளர்களையும் இந்தியக் கடற்படையுடன் இணைந்து இந்தியக் கடலோரக் காவல்படை மீட்டது. இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “லைபீரியக் கொள்கலன் கப்பல் எம்எஸ்சி எல்சா 3 (Iஎம்ஓ எண். 9123221) இன்று (மே 25, 2025) காலை 0750 மணியளவில் கொச்சி கடற்கரையில் மூழ்கியது. அதில் இருந்த 24 பணியாளர்களும் மீட்கப்பட்டனர். 21 பேரை இந்தியக் கடலோரக் … Read more

ஒரே இரவில் 367 ட்ரோன்களை உக்ரைன் மீது ஏவிய ரஷ்யா – 13 பேர் உயிரிழப்பு! 

கீவ்: ஒரே இரவில் 367 ட்ரோன்களை ஏவி உக்ரைன் முழுவதும் மிகப்பெரிய வான்வழித்தாக்குதலை ரஷ்யா நடத்தியுள்ளது. தற்போது நடைபெற்று வரும் உக்ரைன் ரஷ்யா போரில் நடந்திருக்கும் மிகப்பெரிய வான்வழித்தாக்குதல் இதுவாகும். ரஷ்யாவின் வான்வழித்தாக்குதலில் 3 குழந்தைகள் உட்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர், பலர் காயமடைந்துள்ளனர். கீவ், கார்கிவ், மைக்கோலைவ், டெர்னோபில் மற்றும் கிமெல்னிட்ஸ்கி என பரவலான அளவில் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இதனிடையே உக்ரைன் விமானப்படை 267 ட்ரோன்கள் மற்றும் 45 ஏவுகணைகளை சுட்டுவீழ்த்தியதாக தெரிவித்துள்ளது. என்றாலும், உக்ரைனுக்கு … Read more

இனி ஓட்டு போடும் போது செல்போன் கொண்டு செல்ல தடை! தேர்தல் ஆணையம் முடிவு!

மேம்பட்ட பாதுகாப்பு மற்றும் தனியுரிமைக்காக வாக்குச்சாவடி மையங்களுக்குள் வாக்காளர்கள் செல்போன்களை கொண்டு செல்ல இனி தடை என்று தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

சின்ன பட்ஜெட் படங்களுக்கு கதவை திறந்துவிடும் ஸ்ரீனிக் புரொடக்ஷன்ஸ்!

ரிலீஸ் செய்ய முடியாமல் தவிக்கும் சிறு பட தயாரிப்பாளர்களுக்கு ஆபத்பாந்தவனாக மாறும் ஸ்ரீனிக் புரொடக்ஷன்ஸ்  

தோனியின் கடைசி போட்டி? டாஸில் அவரே சொன்ன அந்த விஷயம்…!

IPL 2025 MS Dhoni: ஐபிஎல் 2025 தொடரின் 67வது லீக் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று (மே 25) மாலை நடைபெறுகிறது. இப்போட்டியில் முதலிடத்தில் இருக்கும் குஜராத் டைட்டன்ஸ் – கடைசி இடத்தில் இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் (GT vs CSK) மோதுகின்றன. இரு அணிகளுக்கும் இதுதான் இத்தொடரின் கடைசி லீக் போட்டி.  GT vs CSK: முதல் இடம் vs கடைசி இடம் … Read more