துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்துக் கொண்ட பெண் போலீஸ்.. நாகை ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது என்ன?

மயிலாடுதுறை மாவட்டம் மணகுடி அருகே உள்ள கீழிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் அபிநயா (29). இவர் நாகப்பட்டினம் மாவட்ட ஆயுதப்படையில் பெண் போலீஸாக பணியாற்றி வருகிறார். திருமணம் ஆன இவர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவகாரத்து பெற்று விட்டதாக சொல்லப்படுகிறது. அபிநயா நாகை ஆயுதப்படை குடியிருப்பில் வீடு எடுத்து தனியாக வசித்து வந்துள்ளார். துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்துக் கொண்ட பெண் போலீஸ் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட கருவூலத்தில் அபிநயா, துப்பாக்கி ஏந்திய … Read more

“தமிழ் தேசியத்தை சீமான் மடைமாற்றம் செய்துவிட்டார்” – திருமாவளவன் விமர்சனம்

தமிழ் தேசியத்தை சீமான் மடைமாற்றம் செய்துவிட்டதாக விசிக தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கீழடி அகழாய்வில் கிடைத்திருக்கும் தகவல்களை இருட்டடிப்பு செய்யும் நோக்கில் மத்திய பாஜக அரசு திட்டமிட்டு செயல்படுகிறது. ஆய்வாளர் அமர்நாத் தயாரித்த அறிக்கையை வெளியிட காலதாமதம் செய்கின்றனர். அதில் என்ன திருத்தம் செய்ய வேண்டும் என தெரியவில்லை. வரலாற்று உண்மைகளை நெடுங்காலத்துக்கு மறைக்க முடியாது. திமுக கூட்டணி யில் இருந்து விசிக வெளியேற வேண்டும் என நையாண்டியாகவே … Read more

4 மாநிலங்களின் 5 சட்டப்பேரவைகளுக்கு ஜூன் 19-ல் இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

புதுடெல்லி: நான்கு மாநிலங்களில் காலியாக உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஜூன் 19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் இன்று தெரிவித்துள்ளது. குஜராத் மாநிலத்தின் இரண்டு சட்டப்பேரவைத் தொகுதிகள், கேரளா, மேற்குவங்கம், பஞ்சாப் மாநிலங்களில் தலா ஒரு பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது. வாக்குகள் ஜூன் 23ம் தேதி எண்ணப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. குஜராத் மாநிலத்தில், காடி தொகுதியின் சட்டபேரவை உறுப்பினர், கார்சந்த்பாய் பஞ்சாபாய் சோலங்கி மரணமடைந்ததைத் தொடர்ந்து அத்தொகுதி … Read more

நடுக்கடலில் கவிழ்ந்த கப்பல்… உள்ளே இருந்த ஆபத்தான சரக்குகள் – கொச்சியில் நடந்தது என்ன?

Cargo Ship Tilted: கொச்சி அருகே கடலில் சரக்கு கப்பல் சரிந்து விபத்துக்குள்ளான நிலையில், அதனால் அப்பகுதியில் ஏதும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பது குறித்த அப்டேட்டை இங்கு காணலாம்.

ஐபிஎல் 2025ல் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு சொதப்பிய 5 வீரர்கள்!

ஐபிஎல் 2025 கிட்டத்தட்ட முடியும் தருவாயில் உள்ளது. லீக் போட்டிகளில் கடைசி சில ஆட்டங்கள் இந்த வாரம் நடைபெறும் நிலையில், அடுத்த வாரம் பிளே ஆப் மற்றும் பைனல் நடைபெற உள்ளது. ஐபிஎல் 2025 எதிர்பார்த்த படி பல அணிகளுக்கு அமையவில்லை. ஐபிஎல் ஏலத்தின் முடிவில் ஒரு சில அணிகள் பலம் வாய்ந்ததாகவும், ஒரு சில அணிகள் மோசமான நிலையிலும் இருந்தது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசஸ் ஹைதராபாத் போன்ற அணிகள் தோல்வியை சந்தித்து … Read more

Thug Life: “அன்பு நண்பன் சிம்பு, தொட்டி ஜெயாதான் என் தொடக்கம்.." – கார்த்திக் நேத்தா பேச்சு!

நாயகன் திரைப்படம் வெளியாகி 38 ஆண்டுகளுக்குப் பிறகு கமல்ஹாசன் – மணிரத்னம் இணைந்துள்ள திரைப்படம் தக் லைஃப். வருகின்ற ஜூன் 5ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், தக் லைஃப் படத்தின் இசை வெளியீட்டுவிழா நேற்றையதினம் சென்னையில் நடைபெற்றது. ரஹ்மான் இசைக்கச்சேரியுடன் கமல்ஹாசன், சிலம்பரசன், மணிரத்னம், நாசர், ஜோஜு ஜார்ஜ், த்ரிஷா, அபிராமி, அன்பறிவு சகோதரர்கள், சிவராஜ்குமார், அஷோக் செல்வன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் விழாவில் கலந்துகொண்டனர். Thuglife தக் லைஃப் படத்தில் விண்வெளி நாயகா, அஞ்சு வண்ண … Read more

Mausam app: வானிலை துல்லியமாக தெரிவிக்கும் மத்திய அரசு செயலி பற்றி தெரியுமா?

Indian weather forecast, government weather app : வானிலை அறிவிப்புகளை முன்கூட்டியே தெரிவிக்கும் மௌசம் என்ற செயலியை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. புவி அறிவியல் அமைச்சகத்தின் (MoES) கீழ் உள்ள இந்திய வானிலை ஆய்வுத் துறை (IMD), நிகழ்நேர வானிலை அப்டேட்கள், முன்னறிவிப்புகள், ரேடார் படங்கள் மற்றும் வெப்ப அலைகள் மற்றும் கனமழை போன்ற தீவிர வானிலை நிகழ்வுகளுக்கான எச்சரிக்கைகளை மௌசம் பிரத்யேக மொபைல் செயலி வழங்கும். வெப்பநிலை மற்றும் கனமழை அதிகரித்து வருவதாலும், கணிக்க … Read more

காஷ்மீர் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள குருத்வாராவில் ராகுல் காந்தி வழிபாடு

பூஞ்ச் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீரில் உள்ள குருத்வாராவில் வழிபாடு நிகழ்த்தி உள்ளார். கடந்த மாதம் 22ம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய்ச் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். கடந்த 7 ஆம் தேதி இதற்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மேற்கொண்டு பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத நிலைகள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. இதனால், இந்தியா , பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உருவாகி இவ்விரு நாடுகளும் பரஸ்பரம் தாக்குதல் … Read more

Vikatan Weekly Quiz: `முழு கல்வியறிவு பெற்ற முதல் மாநிலம் டு கலாம் பயோபிக்' இந்த வாரக் கேள்விகள்

இந்தியாவில் முழு கல்வியறிவு பெற்ற முதல் மாநிலம், ஆப்பிள் நிறுவனத்துக்கு ட்ரம்ப் வரி எச்சரிக்கை விடுத்தது, மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பயோபிக் குறித்த அறிவிப்பு, கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்க தமிழக அரசு டெண்டர் கோரியிருப்பது என இந்த வாரத்தில் நிகழ்ந்த பல நிகழ்வுகளின் கேள்வித் தொகுப்பாக இந்த வார விகடன் weekly quiz-ல் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. இதில் கலந்துகொண்டு சரியான பதில்களை அளித்து முக்கிய நிகழ்வுகளை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள். `விகடன் App வழியே … Read more

திருநங்கைகளுக்கான தமிழக அரசின் திட்டங்கள் என்னென்ன? – அரசு விளக்கம்

சென்னை: திருநங்கைகள் தொடங்கும் தொழிலின் தேவைக்கேற்ப ரூ.50,000/- வரை மானியம், உயர்கல்வி பயில விரும்பும் திருநங்கைகளுக்கு இலவச கல்வி உட்பட பல்வேறு நலத்திட்டங்கள் அரசின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு, திருநங்கையர்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாடு திருநங்கையர் நல வாரியம்: முன்னாள் முதல்வர் கருணாநிதி, அரவாணிகளின் நலனை உறுதி செய்வதற்காக, 15.4.2008 அன்று … Read more