ஐ.பி.எல். 2025: டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சு தேர்வு

ஜெய்ப்பூர், 10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடரில் ஜெய்ப்பூரில் இன்று நடைபெறும் 66-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இவ்விரு அணிகள் கடந்த 8-ந்தேதி தர்மசாலாவில் சந்தித்த போது, இந்தியா – பாகிஸ்தான் சண்டை காரணமாக எல்லையில் தாக்குதல் தீவிரமானதால் ஸ்டேடியத்தில் மின்கோபுர விளக்குகள் அணைக்கப்பட்டு ஆட்டமும் பாதியில் கைவிடப்பட்டது. அந்த ஆட்டம்தான் தற்போது … Read more

என்ன தவறு செய்​தேன்? கடந்த ஒரு மாதமாக தூக்கம் வரவில்லை: மன உளைச்சலுடன் இருந்ததாக அன்புமணி வேதனை

அரூர்: 2026 தேர்தலில் நாம் ஆட்சிக்கு வர, பாமக கூட்டணி ஆட்சிக்கு வர சிந்தித்து செயல்படவேண்டும், என தருமபுரி மாவட்டம் கடத்தூரில் நடந்த நிகழ்ச்சியில் அன்புமணி ராமதாஸ் பேசினார். தருமபுரி மாவட்டம் கடத்தூரில், வன்னியர் சங்கம் மற்றும் பாமகவின் மூத்த முன்னோடி மறைந்த கனல் ராமலிங்கத்தின் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்று படத்தினை திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது: தமிழகம் முன்னேற வேண்டுமானால், வன்னியர் சமூகம் … Read more

தீவிரவாதத்துக்கு எதிராக இந்தியா போரிடுகிறது: எம்பிக்கள் குழு தலைவர் சசி தரூர் உறுதி

தீவிரவாதத்துக்கு எதிராக இந்தியா தீரமாக போரிட்டு வருகிறது என்று எம்பிக்கள் குழு தலைவர் சசி தரூர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் எல்லை தாண்டிய தீவிரவாதம் குறித்து உலக நாடுகளிடம் எடுத்துரைக்க 7 எம்பிக்கள் குழுக்களை மத்திய அரசு நியமித்து உள்ளது. இதில் காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் தலைமையிலான குழுவில் தேஜஸ்வி சூர்யா, சுஷாங்க் மணி திரிபாதி, சாம்பவி சவுத்ரி, பாலயோகி, மிலிந்த் தியோரா, ஷர்பாஸ் அகமது ஆகிய எம்பிக்கள் இடம் பெற்றுள்ளனர். இந்திய வெளியுறவுத் துறை … Read more

சென்னையை சேர்ந்த இன்ஜினீயருக்கு ஐக்கிய அரபு அமீரக லாட்டரியில் ரூ.230 கோடி பரிசு

சென்னையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற இன்ஜினீயருக்கு ஐக்கிய அரபு அமீரக நாட்டில் நடந்த லாட்டரியில் சுமார் ரூ.230 கோடி பரிசு கிடைத்துள்ளது. ஐக்கிய அரபு அமீரக (யுஏஇ) நாட்டில் டைகெரோஸ் நிறுவனம் எமிரேட்ஸ் டிரா என்ற லாட்டரியை நடத்தி வருகிறது. அண்மையில் நடைபெற்ற மெகா 7 கேம் என்ற லாட்டரி குலுக்கலை இந்த நிறுவனம் நடத்தியது. இதில் சென்னையைச் சேர்ந்த, இன்ஜினீயரான ஸ்ரீராம் ராஜகோபாலன் கலந்துகொண்டு முதல் பரிசான சுமார் ரூ.230 கோடியை (2.7 கோடி அமெரிக்க … Read more

இன்று மாலை பிரதமரை சந்திக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

சென்னை: நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க டெல்லி சென்றுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று மாலை பிரதமரை சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக நேற்று இரவு அல்லது,  இன்று  நிதி ஆயோக் கூட்ட இடைவெளியில் சந்திக்க நேரம் ஒதுக்க கோரப்பட்ட நிலையில், இன்று மாலை பிரதமரை சந்திக்கசந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. 10நிதி ஆயோக் அமைப்பின் கூட்டம், அதன் தலைவராக உள்ள பிரதமர் மோடி தலைமையில் இன்று  (மே.24) நடைபெற்று … Read more

கல்விநிதி கிடைக்குமென நம்பிக்கையோடு இருப்போம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி

புதுடெல்லி, டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடப்பு நிதி ஆண்டுக்கான 10-வது நிதி ஆயோக் கவுன்சில் கூட்டம் இன்று காலை தொடங்கி நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அனைத்து மாநில முதல்-மந்திரிகளும் பங்கேற்க வரும்படி அழைப்பு விடப்பட்டிருந்தது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். இந்த நிலையில் நிதி ஆயோக் கூட்டம் நிறைவடைந்ததும் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நிதி ஆயோக் கூட்டத்தில் … Read more

டெஸ்ட் அணிக்கு தேர்வான இளம் வீரர்கள்.. முகமது சமி, ஸ்ரேயாஸ் ஐயர் நீக்கம் ஏன்..? பி.சி.சி.ஐ. விளக்கம்

மும்பை, இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் (ஜூன்) இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்தியா- இங்கிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஜூன் 20-ந்தேதி லீட்சில் தொடங்குகிறது. 4-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (2025-27) சுழற்சியில் இந்தியாவின் முதல் தொடர் இது என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்நிலையில் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான 17 பேர் கொண்ட இந்திய அணியை பி.சி.சி.ஐ. இன்று அறிவித்தது. இதன்படி இங்கிலாந்து செல்லும் … Read more

உக்ரைன் போர்… ரஷியாவிடம் இருந்து எரிபொருள் வாங்குவது ஏன்? மத்திய மந்திரி ஜெய்சங்கர் பதில்

கோபன்ஹேகன், நெதர்லாந்து, டென்மார்க் மற்றும் ஜெர்மனி ஆகிய 3 நாடுகளுக்கு மத்திய வெளிவிவகார துறை மந்திரி எஸ். ஜெய்சங்கர் கடந்த 19-ந்தேதி முதல் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இதுபற்றி மத்திய வெளிவிவகார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், மத்திய மந்திரியின் இந்த பயணத்தில், அந்நாடுகளின் தலைவர்களை சந்தித்து இருதரப்பு உறவுகள் பற்றி முழு அளவில் ஆலோசனை மேற்கொள்வார். இதுதவிர, உலகளாவிய மற்றும் மண்டல அளவிலான விவகாரங்களில் பரஸ்பர நலன்களை பற்றியும் ஆலோசனை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தது. பஹல்காம் பயங்கரவாத … Read more

தமிழக அரசின் தலைமை காஜி மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

சென்னை: தமிழக அரசின் தலைமை காஜி சலாவுதீன் முகமது அய்யூப் சாகிப் காலமானார். அவருக்கு வயது 84. அவரது மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது: “தமிழ்நாடு அரசின் தலைமை காஜி சலாவுதீன் முகமது அய்யூப் சாகிப் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். கற்றறிந்த பேராசிரியரான அவர், தனது சமூகச் சேவைகளுக்காக என்றென்றும் நினைவுகூரப்படுவார். தன்னுடைய பண்பால் இஸ்லாமிய சமூகத்தினரின் பேரன்பையும் பெருமதிப்பையும் பெற்றிருந்த அவரது … Read more