காவல் துறை விளக்க அறிக்கையில் முன்னுக்குப் பின் முரண்: மதுரை ஆதீனம் மடம்

சென்னை / மதுரை: ‘உளுந்தூர்பேட்டை காவல் துறையின் விளக்க அறிக்கை, முன்னுக்குப் பின் முரணாக உள்ளது. ஒருபக்கச் சார்புடையதாகக் கருதுகிறோம்’ என்று மதுரை ஆதீனம் மடம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மதுரை ஆதீனம் மடம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உளுந்தூர்பேட்டை விபத்து தொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள விளக்க அறிக்கையை மறுக்கிறோம். அதில் விபத்து தொடர்பாக ஆதீனம் தரப்பில் எந்தப் புகாரும் அளிக்கவில்லை என கூறப்பட்டுள்ளது. சம்பவம் நடந்த அடுத்த நிமிடமே காவல்துறையின் அவசர உதவி எண் 100-க்கு தகவல் … Read more

சைரன் ஒலி, இரவில் மின்சாரம் துண்டிப்பு: நாடு முழுவதும் நாளை போர்க்கால ஒத்திகை எவ்வாறு மேற்கொள்ளப்படும்?

புதுடெல்லி/நியூயார்க்: நாடு முழுவதும் நாளை போர்க் கால பாதுகாப்பு ஒத்திகைகளை நடத்துமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. கடந்த 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதன்காரணமாக இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் நாடு முழுவதும் நாளை போர்க்கால பாதுகாப்பு ஒத்திகைகளை நடத்துமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது. போர்க்காலங்களின்போது இந்திய … Read more

மழையால் வந்த வினை.. தொடரை விட்டு வெளியேறிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!

2025 ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இத்தொடரின் 55வது லீக் ஆட்டம் இன்று (மே 05) ஹைதராபாத்தின் ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசரஸ் ஹைதராபாத் அணியும் அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதின.  டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் கேப்டன் பேட் கம்மின்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி டெல்லி கேபிடல்ஸ் … Read more

4PM யூடியூப் சேனலுக்கு தடை: மத்திய அரசின் பதிலைக் கோரியுள்ளது உச்ச நீதிமன்றம்

‘4-PM’ என்ற யூடியூப் சேனலுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரிய மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரம் குறித்து மத்திய அரசின் கருத்தைக் கோரியது. பஹல்காம் தாக்குதலை அடுத்து அங்கு சென்ற அமித் ஷா சிவப்பு கம்பளத்தில் நடந்து சென்றார் என்று தலைப்பிட்ட வீடியோவை பதிவிட்ட அந்த சேனல் “அவர் அங்கு சென்றது பாதிக்கப்பட்டவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கவா அல்லது ஒரு நிகழ்ச்சியை நடத்தவா ?” என்று கேள்வி எழுப்பி இருந்தது. தவிர மற்றொரு வீடியோ பதிவில், … Read more

PBKS vs LSG: Catches win the Matches; பூரானின் அந்த மிஸ்டேக்; பஞ்சாப் பயன்படுத்திக்கொண்டது எப்படி?

தர்மசாலாவில் பஞ்சாப் அணிக்கும் லக்னோ அணிக்கும் நேற்று ஐ.பி.எல் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற லக்னோ கேப்டன் ரிஷப் பண்ட் பந்துவீச்சைத் தேர்வுசெய்தார். அதன்படி, பஞ்சாப் அணிக்கு பிரியான்ஷ் ஆர்யாவும், ப்ரப்சிம்ரன் சிங்கும் ஓப்பனிங்கில் களமிறங்கினர். பூரான் விட்டது கேட்ச் அல்ல… மேட்ச்! லக்னோவுக்காக முதல் ஓவரை வீசிய இளம் வேகப்பந்துவீச்சாளர் ஆகாஷ் மகாராஜ் சிங், முதல் ஓவரிலேயே, இந்த சீஸனின் ஒன் ஆஃப் தி பெஸ்ட் ஓப்பனர் பிரியான்ஷ் ஆர்யாவை விக்கெட் எடுத்து தனது … Read more

மே 5-ஐ வணிகர் நாளாக அரசு விரைவில் அறிவிப்பு: முதல்வர் ஸ்டாலின் தகவல்

மதுராந்தகம்: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 42-வது வணிகர் தின மாநாடு மதுராந்தகத்தில் நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: “மதுராந்தகத்திற்குள் தமிழ்நாடே கூடியிருக்கிறதா? என்று வியப்படைகின்ற வகையில், இந்த மாநாட்டை மிகுந்த எழுச்சியோடு, ஏற்றத்தோடு, சிறப்போடு ஏற்பாடு செய்திருக்கின்ற தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் விக்கிரமராஜாவை நான் பாராட்டுகிறேன்! வாழ்த்துகிறேன்! நம்முடைய விக்கிரமராஜா பற்றி சொல்ல வேண்டும் என்று சொன்னால், இதுபோன்ற மாநாடுகளை மட்டுமல்ல, … Read more

மக்கள் பாதுகாப்புக்கு மே 7-ல் போர்க்கால ஒத்திகை நடத்த மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு

புதுடெல்லி: எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ள சூழலில், நாட்டு மக்களின் பாதுகாப்பு சார்ந்த போர்க்கால ஒத்திகையை மேற்கொள்ள மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, வரும் புதன்கிழமை (மே 7) அன்று இந்தப் பாதுகாப்பு ஒத்திகையை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இந்த ஒத்திகையின்போது, வான்வழி தாக்குதல் குறித்த எச்சரிக்கை ஒலியை ஒலிக்கச் செய்து, மக்கள் தங்களை காத்துக்கொள்ளும் வழிமுறைகளை பின்பற்றச் செய்ய வேண்டும் வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டுக்கு எதிராக அந்நிய ராணுவ … Read more

திருமண போட்டோக்களை வெளியிட்ட பிரியங்கா தேஷ்பாண்டே.. வீடியோ, போட்டோ வைரல்

Priyanka Deshpande Wedding Photos Videos: திருமணத்திற்கு பிறகு தற்போது தொகுப்பாளினி பிரியங்காவின் புகைப்படம் மற்றும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

நடராஜனுக்கு 2025 ஐபிஎல்லில் தொடரில் முதல் போட்டி.. விமர்சனங்களுக்கு பிறகு டெல்லி அணி எடுத்த முடிவு!

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணி முதல் பாதியில் மிகச்சிறப்பாக விளையாடியது புள்ளிப்பட்டியலிலும் முதல் இடத்தில் இருந்து வந்தது. ஆனால் தொடரின் இரண்டாம் பாதியில் மிகவும் மோசமாக விளையாடி வருகிறது. கடைசி 5 போட்டியில் வெறும் 2 வெற்றிகளை மட்டுமே பெற்றனர். இதனால் புள்ளிப்பட்டியலில் 5வது இடத்திற்கு இறங்கியது.  இதற்கு காரணம் அந்த அணி பந்து வீச்ச்சாளர்கள் அதிக ரன்களை விட்டுக்கொடுப்பதுதான், தொடர் தொடங்கும்போதே தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அவரது பந்து வீச்சு … Read more

6000mAh பேட்டரி.. பட்ஜெட் விலையில் அறிமுகமானது Realme C75 5G

Realme C75 5G ஸ்மார்ட்போன் இந்தியாவில் சத்தமில்லாமல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது நிறுவனத்தின் C தொடரின் சமீபத்திய பதிப்பாகும். இன்த ஸ்மார்ட்போனின் அம்சங்களைப் பற்றி பேசுகையில், இன்த ரியல்மி போனில் 6.67 இன்ச் HD+ டிஸ்ப்ளே உள்ளது. இது தவிர, இந்த போனில் MediaTek Dimensity 6300 செயலி பொருத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இந்த போனில் 6 ஜிபி ரேம் + 12 ஜிபி டைனமிக் ரேம் ஆதரவு உள்ளது. அதனுடன் இன்த ஸ்மார்ட்போனில் புகைப்படம் எடுப்பதற்கு, 32MP முதன்மை … Read more