Operation Sindoor: பாகிஸ்தான் பதிலடி தாக்குதல் நடத்தியதா? – பரவும் வீடியோவும் உண்மையும் | Fact Check

ஆபரேஷன் சிந்தூருக்கு (Operation Sindoor) பிறகு, இந்த ராணுவ தாக்குதல் குறித்து பல பொய்யான தகவல்களை பாகிஸ்தான் தரப்பில் இருந்து பரப்பி வருவதாக சொல்லப்படுகிறது. `ஆபரேஷன் சிந்தூருக்கு பதிலடியாக, பாகிஸ்தான் இந்தியாவில் உள்ள வெவ்வேறு 15 இடங்களில் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.’ `பாகிஸ்தானின் விமானப் படை ஶ்ரீநகர் விமான தளம் தாக்கப்பட்டுள்ளது.’ `இந்திய ராணுவப் படைப்பிரிவின் தலைமையகம் அழிக்கப்பட்டது.’ இவ்வாறு தொடர்ந்து பொய்யான தகவல்களை பரப்பி வருகிறது பாகிஸ்தான். Operation Sindoor இதற்கு பின்னால்… இந்தப் பொய்யான … Read more

நாட்டின் பாதுகாப்புக்காக மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகளும் சரியானவையே: அன்புமணி

சென்னை: நாட்டின் பாதுகாப்புக்காக மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகளும் சரியானவையே என்றும் மத்திய அரசுக்கு அனைவரும் துணை நிற்போம் என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உறுதியளித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “காஷ்மீரில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளின் கட்டமைப்புகளை அழிக்கும் வகையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வந்த 9 பயங்கர முகாம்கள் மீது இந்தியாவின் முப்படைகளும் இணைந்து தாக்குதல் நடத்தியுள்ளன. நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மேற்கொள்ளப்படும் இத்தகைய அனைத்து நடவடிக்கைகளும் … Read more

பஹல்காம் தாக்குதலுக்கு ‘ஆபரேஷன் சிந்தூர்’ சரியான பதிலடி: உமர் அப்துல்லா

புதுடெல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலம் சரியான பதிலடி கொடுக்கப்பட்டுள்ளதாக ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். லஷ்கர் இ தொய்பா நடத்திய இந்த தாக்குதலின் பின்னணியை உறுதிப்படுத்திய இந்திய அரசு, பாகிஸ்தானில் இயங்கி வரும் இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத அமைப்புகளின் முகாம்களை குறிவைத்து நடவடிக்கை எடுக்க ராணுவத்துக்கு … Read more

Operation Sindoor: ஸ்கால்ப், ஹேமர் குண்டுகளை இந்தியா பயன்படுத்தியது ஏன்?

Operation Sindoor: ஆப்ரேஷன் சிந்தூர் தாக்குதலில் ஸ்கால்ப் ஏவுகணைகள், ஹேமர் குண்டுகள் பயன்படுத்தப்பட்டது. இவற்றின் சிறப்பம்சம் மற்றும் முக்கியத்துவம் குறித்து இங்கு காணலாம்.

ஆர்யா ஆள்வைத்து என் வீட்டை தரைமட்டமாக இடித்துவிட்டார் – சந்தானம் பேச்சு!

நிஹாரிகா என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் சந்தானம் நடிப்பில் உருவாகி வரும் 16ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’ திரைப்படத்தின் வெளியீட்டு முன் நிகழ்வு சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

'இதுதான் இந்திய இராணுவத்தின் முகம்'- `ஆபரேஷன் சிந்தூர்' குறித்து திரைப்பிரபலங்களின் பதிவு

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலை இந்திய ராணுவம் நடத்தியிருக்கிறது. இந்த ஆபரேஷனில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள 9 தீவிரவாத இடங்களை இந்திய இராணுவம் குறி வைத்து தாக்கி இருக்கிறது. Operation Sindoor | இந்திய ராணுவம் இந்திய ராணுவத்தின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையை வரவேற்று அரசியல் தலைவர்கள் பதிவிட்டு வருகின்றனர். அந்தவகையில் சினிமா பிரபலங்களும், ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து பதிவுகளைப் பதிவிட்டு வருகின்றனர். ரஜினிகாந்த் “ போராளியின் சண்டை தொடங்குகிறது. திட்டம் … Read more

ஆபரேஷன் சிந்தூர் எதிரொலி: பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணங்கள் ரத்து

டெல்லி: பஹல்காம்  பயங்கரவாத தாக்குதலுக்கு இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் தகுந்த   பதிலடி கொடுத்துள்ள நிலையில், பிரதமர் மோடியின் வெளிநாடு பயணம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இந்தியாவின் மினி சுவிட்சர்லாந்து என்று அழைக்கப்படும்,  ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22 நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு பதிலடி தரும் விதமாக இந்திய ராணுவம் இன்று (மே 7) நள்ளிரவு … Read more

ஆபரேஷன் சிந்தூர் எதிரொலி; வட இந்தியாவில் விமான சேவைகள் பாதிப்பு

புதுடெல்லி, காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் கடந்த 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்ட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான ‘தி ரெசிஸ்டண்ட் பிரண்ட்’ பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இந்த தாக்குதலை தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உருவாகியுள்ளது. இந்நிலையில், பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா இன்று அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள … Read more

டி20 கிரிக்கெட்டில் 'நோ-பால்' வீசுவது பெருங்குற்றம் – ஹர்திக் பாண்ட்யா

மும்பை, ஐ.பி.எல். தொடரில் மும்பையில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை 20 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 155 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 156 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் களம் கண்டது. குஜராத் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது திடீரென மழை குறுக்கிட்டது. அப்போது குஜராத் 14 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 107 … Read more

பாகிஸ்தான் மீது இந்தியா ஏவுகணை தாக்குதல்: அமெரிக்க ஜனாதிபதி கூறியது என்ன?

வாஷிங்டன், ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த 22ம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில், 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்ட லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டண்ட் பிரண்ட் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த தாக்குதலை தொடர்ந்து இந்தியா , பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உருவாகியது. இதனிடையே, பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இன்று பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் பயங்கரவாத … Read more