அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு

சென்னை இன்று தமிழகத்தின் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது, இன்று சென்னை வானிலை ஆய்வு மையம், ”அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை: தென்மேற்கு பருவமழை, கேரளாவில் அடுத்த இரண்டு தினங்களில் துவங்குவதற்கான வாய்ப்புள்ளது. அதே சமயத்தில் தமிழகத்தில் சில பகுதிகளிலும் பரவுவதற்கான வாய்ப்புள்ளது. நேற்று தெற்கு கொங்கன் கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, இன்று காலை அதே பகுதிகளில், … Read more

சோனியா காந்தி, ராகுல் காந்தியுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

டெல்லி, நடப்பு நிதியாண்டிற்கான நிதி ஆயோக் கூட்டம் தலைநகர் டெல்லியில் நாளை நடைபெற உள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். இதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி சென்றார். இந்நிலையில், டெல்லி சென்றுள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை நேரில் சந்தித்தார். இது மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடைபெற்றது. அதேவேளை, … Read more

ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ரஜத் படிதார் விளையாடுவாரா ? பயிற்சியாளர் விளக்கம்

லக்னோ, 10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை எட்டி விட்டது. குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறி இருக்கின்றன. சென்னை, ராஜஸ்தான், ஐதராபாத், கொல்கத்தா, லக்னோ, டெல்லி அணிகள் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டன.இந்த நிலையில் லக்னோவில் இன்று நடைபெறும் 65-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, முன்னாள் சாம்பியனான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை … Read more

ரஷியா மீது மேலும் பல்வேறு பொருளாதார தடை – ஜி7 கூட்டமைப்பு எச்சரிக்கை

ஒட்டாவா, உக்ரைன், ரஷியா இடையேயான போர் இன்று 1 ஆயிரத்து 184வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகள் முயற்சித்தன. ஆனால், அந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்த நிலையில் போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனிடையே, போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக உக்ரைன் – ரஷியா அதிகாரிகள் இடையே துருக்கியில் 15ம் தேதி நேரடி பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் போரை முடிவுக்கு கொண்டு … Read more

4 ஆண்டுகால ஸ்டாலின் ஆட்சியும்… இந்து சமய அறநிலையத்துறையின் செயல்பாடுகளும்!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்றபோது, திருக்கோயில் பணிகளை முறையாகவும், சிறப்பாகவும் நடத்திட வேண்டுமெனக் கருதியர்களில் ஒருவராகத் திகழும் பி.கே.சேகர்பாபுவை, அறநிலையத்துறை அமைச்சராகத் தேர்வு செய்து, நியமித்து, திருக்கோயில் திருப்பணிகள் எல்லாம் முன் எப்போதும் இல்லாத வகையில் செம்மையாக நடைபெற வழிவகுத்தார். பெருந்திட்ட வரைவுப் பணி ஒருங்கிணைந்த பெருந்திட்ட வரைவின் கீழ் (Master Plan) திருச்செந்தூர், பழனி, திருத்தணி, சமயபுரம், இராமேஸ்வரம் உள்ளிட்ட 19 திருக்கோயில்களில் ரூ.1770 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் மற்றும் பக்தர்களுக்கான ஒருங்கிணைந்த அடிப்படை … Read more

குழாயில் உடைப்பால் நடூர் சாலையில் 50 அடி உயரத்துக்கு பீய்ச்சியடித்த குடிநீர்

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தில் உள்ள பவானி ஆற்றில் இருந்து, கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களுக்கு தேவையான குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்காக சாலையோரம் ராட்சத குழாய்கள் அமைக்கப்பட்டு குடிநீர் எடுத்துச் செல்லப்பட்டு வருகிறது. அதன்படி, மேட்டுப்பாளையம் நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் அன்னூர் சாலையில் உள்ள நடூர் வழியாக திருப்பூருக்கு பகிர்மானக் குழாய் செல்கிறது. இந்நிலையில், இன்று மதியம் நடூர் பகுதியில் செல்லும் ராட்சத குழாயில், அழுத்தம் தாங்காமல் உடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து, தண்ணீர் வெளியேறி, சுமார் 50 … Read more

“பயங்கரவாதம் ஒரு நாள் பாகிஸ்தானை மூழ்கடிக்கும்” – யோகி ஆதித்யநாத்

அயோத்தி: “பயங்கரவாதம் ஒரு நாள் பாகிஸ்தானை மூழ்கடிக்கும்” என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கடுமையாக எச்சரித்தார். அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம் ஜென்மபூமி கோயிலில் பிரார்த்தனை செய்துவிட்டு, ஸ்ரீ ஹனுமன் கர்ஹி மந்திரில் ‘ஸ்ரீ ஹனுமத் கதா மண்டபம்’ திறப்பு விழா நடத்திய பிறகு பேசிய யோகி ஆதித்யநாத், “இது புதிய இந்தியா. புதிய இந்தியா யாரையும் சீண்டுவதில்லை. ஆனால், யாராவது அதை சீண்டிவிட்டுச் சென்றால், அது அவரை விட்டு வைப்பதில்லை. ஹனுமானும் அதையேதான் … Read more

போர் எதிரொலி : பெயர் மாற்றம் செய்யப்பட்ட இனிப்புகள்

ஜெய்ப்பூர் இந்திய பாகிஸ்தான் போரையொட்டி மைசூர் பாக் உள்ளிட்ட இனிப்புகளின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன. கடந்த ஏப்ரல் 22-ந்தேதி  ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள பஹல்காமில்  பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தியதில், நேபாள நாட்டை சேர்ந்த ஒருவர் உள்பட சுற்றுலாவுக்காக சென்ற பயணிகள் 26 பேர் பலியானதற்கு பதிலடியாக, இரு வாரங்களுக்கு பின்னர் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீது இந்திய ராணுவம் பயங்கரவாத இலக்குகளை குறிவைத்து, தாக்குதலை நடத்தியது. இந்த சம்பவத்திற்கு பின்பு, இந்தியா மற்றும் … Read more

மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் – 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள்

ஜெய்ப்பூர், ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினர். இதில், நேபாள நாட்டை சேர்ந்த ஒருவர் உள்பட சுற்றுலாவுக்காக சென்ற பயணிகள் 26 பேர் பலியானார்கள். இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு பதிலடியாக, இரு வாரங்களுக்கு பின்னர் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீது இந்திய ராணுவம் பயங்கரவாத இலக்குகளை குறிவைத்து, தாக்குதலை நடத்தியது. பாகிஸ்தானில் செயல்பட்ட 9 பயங்கரவாத உட்கட்டமைப்புகளை இலக்காக கொண்டு … Read more

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: இந்திய அணியில் சாய் சுதர்சன் ?

மும்பை, இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் (ஜூன்) முதல் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இந்தியா- இங்கிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஜூன் 20-ந்தேதி லீட்சில் தொடங்குகிறது.இந்திய டெஸ்ட் கேப்டன் ரோகித் சர்மா, நட்சத்திர வீரர் விராட் கோலி ஆகியோர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டதால் இங்கிலாந்து தொடரில் அவர்களுக்கு பதிலாக யார் இறங்குவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அத்துடன் புதிய டெஸ்ட் கேப்டனையும் … Read more