கோப்பையை வென்று இருந்தாலும் ஆர்சிபி அணி கழட்டிவிடும் 5 வீரர்கள்!

கிட்டத்தட்ட 17 வருட போராட்டங்களுக்குப் பிறகு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தங்களது முதல் ஐபிஎல் கோப்பையை இந்த ஆண்டு வென்றுள்ளது. அகமதாபாத்தில் நடைபெற்ற பரபரப்பான இறுதிப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி ஆர்சிபி அணி கோப்பையை வென்றுள்ளது. இதன் மூலம் தங்களது நீண்ட நாள் கனவை நிறைவேற்றி உள்ளது ஆர்சிபி. இந்த ஆண்டு ஆர்சிபி அணி கோப்பையை வெல்வதற்கு பலரும் உறுதுணையாக இருந்தனர், குறிப்பாக பௌலிங் மிகவும் சிறப்பாக அமைந்தது. புவனேஸ்வர் குமார், க்ருனால் பாண்டியா, ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோர் சிறப்பாக பந்து வீசி இருந்தனர். இருப்பினும் கோப்பையை வென்றிருந்தாலும் ஆர்சிபி அணி கழட்டி விடக்கூடிய ஐந்து வீரர்கள் உள்ளனர், அவர்கள் யார் யாரென்று பார்ப்போம். 

லியாம் லிவிங்ஸ்டோன்

இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டரான லியாம் லிவிங்ஸ்டோனை 8.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது ஆர்சிபி அணி. ஆனால் 10 போட்டிகளில் விளையாடிய அவர் ஒரு அரை சதை மட்டுமே அடித்துள்ளார், மேலும் ஒட்டுமொத்தமாக இந்த சீசனில் 112 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார், மேலும் பவுலிங்கில் இரண்டு விக்கெட்களை மட்டுமே எடுத்துள்ளார். எனவே இவரை மினி ஆக்ஷனில் ஆர்சிபி அணி கழட்டி விடலாம். 

ராசிக் தர்

25 வயதான ஜம்மு காஷ்மீரை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் ராசிக் தரை ஆர்சிபி அணி 6 கோடிக்கு மெகா இடத்தில் எடுத்தது. கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் இவருக்கு விளையாட வாய்ப்பு கிடைத்தது,  ஆனால் மூன்று ஓவரில் 35 ரன்கள் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை மட்டுமே எடுத்தார். மேலும் அடுத்ததாக குஜராத் அணிக்கு எதிரான போட்டியிலும் விளையாடியவர், ஆனால் விக்கெடுகளை எடுக்கவில்லை. இதனால் அவரை ஆர்சிபி அணி கழட்டி விடலாம். 

நுவன் துஷாரா

இலங்கை அணியை சேர்ந்த வேகபந்துவீச்சாளர் நுவன் துஷாராவை 1.50 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது ஆர்சிபி அணி. இந்த சீசனில் ஒரு போட்டியில் மட்டுமே ஆர் சி பி அணிக்காக விளையாடிய அவர் ஒரு விக்கெட்டை மட்டுமே வீழ்த்தியுள்ளார். ஹேசில்வுட்க்கு பேக்கப் வீரராக எடுக்கப்பட்ட இவரின் தேவை அணிக்கு அவ்வளவாக தேவைப்படவில்லை, எனவே இவரை அணி கழட்டிவிடலாம். 

மயங்க் அகர்வால் 

தேவ்தத் படிக்களுக்கு காயம் ஏற்பட்டதன் காரணமாக மாற்று வீரராக அணியில் இணைந்தவர் மயங்க் அகர்வால். கடைசி நான்கு போட்டிகளில் மட்டுமே விளையாடிய அவர் 95 ரன்கள் அடித்தார். இருப்பினும் அடுத்த ஆண்டு படிக்கல் அணிக்கு திரும்புவார் என்பதால் மயங்க் அகர்வால் கழட்டி விடப்படலாம். 

லுங்கி இங்கிடி

தென்னாபிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளரான லுங்கி இங்கிடி இந்த ஆண்டு அவ்வளவு சிறப்பாக பந்து வீசவில்லை. மேலும் ரன்களையும் வாரி வழங்குகிறார். அதேபோல பிளே ஆப் சமயத்தில் தனது சொந்த நாட்டிற்கு திரும்பினார், அவருக்கு அடிக்கடி காயம் ஏற்படும் என்பதால் ஆர்சிபி அணி அவரை கழட்டி விட அதிக வாய்ப்புள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.