சென்னை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பாமகவும் திமுக கூட்டணியில் இணைகிறதா என்னும் வினாவுக்கு விளக்கம் அளித்துள்ளார். இன்று பாமக நிறுவனர் ராமதாஸை அவரது தைலாபுரம் தோட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சந்தித்து பேசினார். இது திமுக கூட்டணிக்கு பாமகவை அழைப்பதற்கான சந்திப்பாக இருக்கும் என சொல்லப்பட்டது. ராமதாஸ் உடனான சந்திப்பு குறித்து செய்தியாளர்கள் செல்வப்பெருந்தகையிடம் வினா எழுப்பினர்/ அதற்கு செல்வப்பெருந்தகை “பாமக நிறுவனர் ராமதாஸை மரியாதை நிமிர்த்தமாக சந்தித்தேன். அரசியல் தொடர்பாகவும், கூட்டணி குறித்த […]
