ஈரானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: அணு ஆயுத சோதனை நடத்தியதாக சந்தேகம்

வடக்கு ஈரானில் உள்ள செம்னான் பகுதியில், நேற்று முன்தினம் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.1 புள்ளிகள் பதிவாகியதால், ஈரான் அணு ஆயுத சோதனை நடத்தியதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியது. வடக்கு ஈரானில் செம்னான் என்ற பகுதி உள்ளது. இந்த இடத்துக்கு தென்மேற்கே 27 கிலோ மீட்டர் தொலைவில் 10 கி.மீ ஆழத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் நேற்று முன்தினம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.1 புள்ளிகள் பதிவாகியது. இந்த நிலநடுக்கத்தால் லேசான … Read more

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து பொன்முடிக்கு விலக்கு

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு விலக்கு அளித்து சென்னை சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது, கடந்த 2006 – 2011 திமுக ஆட்சியில் உயர்கல்வி மற்றும் கனிம வளங்கள், சுரங்கத்துறை அமைச்சராகப் பதவி வகித்த க.பொன்முடி, விழுப்புரம் மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக செம்மண் வெட்டி எடுத்ததன் மூலம், அரசுக்கு ரூ.28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 இழப்பு ஏற்படுத்தியதாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. … Read more

கர்நாடகாவில் போலி செய்திகளை பரப்பினால் 7 ஆண்டுகள் சிறை: விரைவில் புதிய சட்டம் அமலுக்கு வருகிறது

கர்நாடகாவில் போலிச் செய்திகள், தவறான தகவல்களை பரப்பினால் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டுவர அம்மாநில அரசு முடிவெடுத்துள்ளது. கர்நாடகாவில் கடந்த சில ஆண்டுகளாக ஃபேஸ்புக், வாட்ஸ்அப் ஆகிய சமூக வலைதளங்களில் பரப்பப்படும் தவறான தகவல்களால் மோதல் சம்பவங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் 10-க்கும் மேற்பட்ட உயிர் சேதமும், கோடிக்கணக்கில் பொருட்சேதமும் ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்க தனிச் சட்டம் கொண்டுவர அம்மாநில அரசு முடிவெடுத்தது. இதையடுத்து சமூக வலைதளங்களில் மத ரீதியான அவதூறான … Read more

“ஏவுகணைகள், குண்டுகளை கண்டு பயந்து போனோம்” – ஈரானில் இருந்து திரும்பிய இந்திய மாணவர் அனுபவ பகிர்வு

புதுடெல்லி: “எங்களைச் சுற்றி ஏவுகணைகளும், குண்டுகளும் விழுவதைக் கண்டு பயந்துபோனோம். அந்த நாட்களை மீண்டும் ஒருபோதும் பார்க்க மாட்டோம் என நம்புகிறேன்” என்று ஈரானிலிருந்து இந்தியா திரும்பிய மாணவர் தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். போரால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஈரானில் இருந்து ஆர்மீனியா நாட்டுக்கு தரைவழியாக அழைத்துவரப்பட்ட 110 இந்திய மாணவர்கள் இன்று (ஜூன் 19) அதிகாலையில் விமானம் மூலம் டெல்லியை அடைந்தனர். ஈரானில் 4,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உள்ளனர். இதில் பாதி பேர் ஜம்மு காஷ்மீரைச் … Read more

“எத்தனை முருக பக்தர்கள் மாநாடு நடத்தினாலும் மக்கள் ஏமாற மாட்டார்கள்” – செல்வப்பெருந்தகை

சென்னை: “பாஜக எத்தனை முருக பக்தர்கள் மாநாடு நடத்தினாலும் அதனுடைய சுயரூபத்தை தமிழ் மக்கள் நன்கு அறிந்து வைத்திருக்கிறார்கள், நிச்சயம் ஏமாற மாட்டார்கள்” என என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய வரலாற்றில் முதல் முறையாக வெளிநாட்டின் நிதியுதவியும், கார்ப்பரேட்டுகளின் நன்கொடையும் அரசியல் கட்சிகளுக்கு வழங்குவது பாஜக ஆட்சியில் சட்டப்பூர்வமாக்கப்பட்டன. கார்ப்பரேட்களுக்கு ஆதரவாக பொருளாதார கொள்கைகளை வடிவமைத்து அதன்மூலம் பல்வேறு சலுகைகளை அளித்து அவர்கள் பெரும் … Read more

ராக்கெட் தயாரிப்பு ஏலத்தில் எச்ஏஎல் வெற்றி

புதுடெல்லி: சிறிய வகை செயற்கைக்கோள்களை ஏவுவதற்கான ராக்கெட்டை தயாரிப்பதற்கான ஏலத்தில் தனியார் நிறுவனங்களை பின்னுக்குத்தள்ளி பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் (எச்ஏஎல்) வெற்றிபெற்றுள்ளது. இதுகுறித்து இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையத்தின் (ஐஎன்-ஸ்பேஸ்) தலைவர் பவன் கோயங்கா தெரிவித்துள்ளதாவது: இந்தியாவின் சிறிய செயற்கைக்கோள் ஏவுதள ராக்கெட்டுகளை தனிப்பட்ட முறையில் தயாரிப்பதற்கான ஏலத்தை எச்ஏஎல் வென்றுள்ளது. வேகமாக வளர்ந்து வரும் விண்வெளி துறையில் நிறுவனங்களின் பங்களிப்பை விரிவுபடுத்தும் அரசின் முயற்சிக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய வெற்றியாக … Read more

8 கி.மீ. சுற்றளவு ‘நாசம்’ – இஸ்ரேல் மீது ஈரான் வீசும் கிளஸ்டர் குண்டுகளின் வீரியம் என்ன?

தெஹ்ரான் / டெல் அவிவ்: இஸ்ரேல் – ஈரான் இடையேயான போர் இன்று 9-வது நாளாக தொடரும் நிலையில், கிளஸ்டர் குண்டுகளை ஈரான் முதல் முறையாக பயன்படுத்துவதாக இஸ்ரேல் கூறியுள்ளது. இது பல குண்டுகளாக சிதறி வெடிக்கும் வகையை சேர்ந்தது என்பதால் பாதிப்பு அதிகளவில் ஏற்படும் என்பது கவனிக்கத்தக்கது. அணு ஆயுத தயாரிப்பை ஈரான் தீவிரப்​படுத்​து​வ​தாக கூறி, அந்​நாட்​டின் மீது இஸ்​ரேல் தாக்​குதலை தொடங்​கியது. இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்து வரு​கிறது. இரு நாடு​கள் இடையி​லான போர் … Read more

365 நாட்கள் ரீசார்ஜ்.. ஒரு நாளைக்கு வெறும் 5 ரூபாய், கலக்கும் ஜியோ, ஏர்டெல், விஐ

BSNL, VI And Jio Yearly Recharge Plans Details: சும்மா சும்மா ரீசார்ஜ் செய்வதில் உள்ள தொந்தரவிலிருந்து நீங்கள் விடுபட வேண்டுமா? அப்போ BSNL, Jio மற்றும் Vi ஆகிய மூன்று நிறுவனங்களும் ஆண்டு முழுவதும் ரீசார்ஜ் திட்டங்களைக் கொண்டுள்ளன. இந்த ரீசார்ஜ் திட்டங்களின் சிறப்பு என்னவென்றால், இந்த திட்டத்தின் மூலம், பயனர்களும் OTT இன் பலனையும் பெறுவார்கள். ஜியோவின் ரூ.3,599 ப்ரீபெய்ட் திட்டம் இப்போது நாம் பார்க்க இருப்பது ஜியோ ரூ 3599 வருடாந்திர … Read more

தயாநிதி மாறன் நோட்டீஸ் : கலாநிதி மாறன் தரப்பில் சன் டிவி நெட்வொர்க் விளக்கம்!

சென்னை:   சன் குழு தலைவர்  கலாநிதி மாறன் முறைகேட்டில் ஈடுபட்டு, தன்னை ஏமாற்றி உள்ளதாக, கேடி பிரதர்ஸ் என அழைக்கப்படு பவர்களில் ஒருவரான தயாநிதி மாறன், தனது அண்ணன் கலாநிதி மாறனுக்கு நோட்டீஸ் அனுப்பிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், கலாநிதி மாறன்  தரப்பில் சன் டிவி நெட்வொர்க் விளக்கம் வெளியிட்டு உள்ளது. சன் டிவி பங்குகள் விற்பனை தொடர்பாக, சன் குழுமத்தின் தலைவரான கலாநிதி மாறனுக்கு, அவரது சகோதரரும், திமுக எம்.பி.யுமான தயாநிதி மாறன் … Read more