முருக பக்தர்கள் மாநாடு: மதுரையில் குவியும் பக்தர்கள் – 1,500 போலீஸார் பாதுகாப்பு

மதுரை: இந்து முன்னணி சார்பில் மதுரையில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 22) நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். மதுரை வண்டியூர் சுங்கச்சாவடி அருகே நடைபெறும் இந்த மாநாட்டையொட்டி அமைக்கப்பட்டுள்ள அறுபடை வீடுகளின் மாதிரி கோயில்களை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். சனிக்கிழமை காலை ஆளுநர் ஆர்.என்.ரவி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணி முதல் இரவு … Read more

விமான விபத்து எதிரொலி – 3 முக்கிய அதிகாரிகளை நீக்க ஏர் இந்தியாவுக்கு டிஜிசிஏ அறிவுறுத்தல்

புதுடெல்லி: அகமதாபாத் விமான விபத்துக்கான காரணம் குறித்து ஆய்வு நடத்தி வரும் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம்(டிஜிசிஏ), விமானக் குழுவினரை திட்டமிடுவது, இயக்குவது தொடர்பாக பல மீறல்கள் நிகழ்ந்துள்ளதாகக் கண்டறிந்துள்ளது. இதற்குக் காரணமான 3 அதிகாரிகளை அனைத்து பொறுப்புகளில் இருந்தம் நீக்குமாறு, ஏர் இந்தியாவுக்கு டிஜிசிஏ அறிவுறுத்தி உள்ளது. கடந்த 12ம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியாவின் போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கீழே விழுந்து … Read more

இஸ்ரேல் தாக்குதல்களில் ஈரானில் இதுவரை 400 பேர் உயிரிழப்பு; 3,056 பேர் காயம்

தெஹ்ரான்: இஸ்ரேலின் தாக்குதல்களில் 400-க்கும் மேற்பட்ட ஈரானியர்கள் கொல்லப்பட்டதாகவும், 3,056 பேர் காயமடைந்ததாகவும் ஈரானின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஈரானின் சுகாதார அமைச்சக மக்கள் தொடர்புத் தலைவர் ஹொசைன் கெர்மன்பூர், ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களால் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை குறித்த தகவல்களை வழங்கியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “9வது நாளாக தொடரும் தாக்குதல்களில் 54 பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 400-க்கும் மேற்பட்ட ஈரானியர்கள் கொல்லப்பட்டனர். 3,056 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதல்களில் காயமடைந்தவர்களில் … Read more

விக்ரம் பிரபு நடிக்கும் 'லவ் மேரேஜ்' படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா

விக்ரம் பிரபு – சுஷ்மிதா பட் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் ‘லவ் மேரேஜ்’ எனும் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியிட்டு விழா.

'ரஜினி சார், சிவகார்த்திகேயன் அண்ணா எங்க படங்களுக்கும் ஆதரவு கொடுங்க'- திருநங்கை ஜீவா சுப்ரமணியம்

இயக்குநர் அரவிந்தன் இயக்கத்தில், ’96’ படத்தில் பிரேம்குமாரிடம் இணை இயக்குநராக பணியாற்றிய பிருத்விராஜ் ராமலிங்கம் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் ‘குட் டே’ ( Good Day). காளி வெங்கட், மைனா நந்தினி, ஆடுகளம் முருகதாஸ், பகவதி பெருமாள், வேல.ராமமூர்த்தி, போஸ் வெங்கட், ஜீவா சுப்ரமணியம் ஆகியோரும் இப்படத்தில் நடித்துள்ளனர். கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று (ஜூன் 21) நடைபெற்றது.  Good Day movie இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய திருநங்கை … Read more

Android-ல் கால் ரெகார்டிங்: எச்சரிக்கை இல்லாமல் எப்படி செய்வது?

Android Call Recording : தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட இன்றைய காலகட்டத்தில் ஒருவரை உளவு பார்ப்பது, ஒருவரின் நடவடிக்கைகளை அவருக்கே தெரியாமல் ரெக்கார்டு செய்து கொள்வதெல்லாம் சகஜமாகிவிட்டது. தொழில்நுட்பத்தை பொறுத்தவரை அதன் நன்மை தீமைகள் எல்லாம் பயன்படுத்துபவர்களை பொறுத்தே விளைவுகளும் இருக்கும். அந்தவகையில் கால் ரெக்கார்டிங் வசதியிலும் நன்மை மற்றும் தீமைகள் இருக்கின்றன. நன்மை என்ன என்ற அடிப்படையில் மட்டும் யாருக்கும் தெரியாமல் கால் ரெக்கார்டிங் செய்வது எப்படி என்பதை இங்கே பார்க்கலாம்.  சில Android போன்களில் ரகசியமான … Read more

மேலும் 1000 இந்தியர்கள் வெளியேற வான்வெளியை அனுமதித்துள்ளது ஈரான்…

டெஹ்ரான்: இந்தியர்கள் மற்றும் அங்கு படித்து வரும்  மாணவர்கள் உள்பட சுமார்  1000 பேர் வெளியேறுவதற்காக ‘ஈரான் அரசு  வான்வெளியை திறந்துள்ளது. இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஈரான், இஸ்ரேல் நாடுகளின் போர் மேலும் தீவிரம் அடைந்து வருகிறது. இந்த மோதலால் ஈரானில் உள்ள பல நகரங்களில் உள்ள இந்திய மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். ஈரானில் உள்ள தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு அங்குள்ள இந்திய மாணவர்களை வெளியேற்ற மத்திய அரசு மற்றும் அங்குள்ள தூதரகம் … Read more

Manisha Koirala: "பாபா படத்தின் தோல்விக்குப் பிறகு எனக்கு வாய்ப்புகள் வரவில்லை!" – மனிஷா கொய்ரலா

மனிஷா கொய்ரலா ‘பாம்பே’, ‘இந்தியன்’, ‘முதல்வன்’, ‘ஆளவந்தான்’, ‘பாபா’ ஆகிய முக்கியமான படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமானவர். இவர் தமிழில் கடைசியாக தனுஷின் ‘மாப்பிள்ளை’ திரைப்படத்தில் நடித்திருந்தார். இவர் கடந்த ஆண்டு நெட்ஃபிளிக்ஸில் வெளியான ‘ஹீராமண்டி’ வெப் சீரிஸில் நடித்திருந்தார். Baba- Manisha Koirala அந்த சீரிஸ் வெளியான சமயத்தில் மனிஷா கொய்ரலா அளித்த நேர்காணலில் ‘பாபா’ திரைப்படம் அவருடைய தென்னிந்திய சினிமா கரியருக்கு முட்டுக்கட்டையாக அமைந்ததாக பேசியிருந்தார். அந்த நேர்காணல் காணொளி தற்போது இணையத்தில் … Read more

அதிமுக எம்எல்ஏ அமுல் கந்தசாமி மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

சென்னை: அதிமுக வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “வால்பாறை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி மறைந்த செய்தியறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், வால்பாறை தொகுதி மக்களுக்கும், அதிமுக கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். டி.கே.அமுல் கந்தசாமி: … Read more

“ஆதாரங்களை அழிப்பது ஜனநாயகத்துக்கு விஷம் போன்றது” – தேர்தல் ஆணையம் மீது ராகுல் காந்தி காட்டம்

புதுடெல்லி: “வாக்குப் பதிவு மையங்களில் எடுக்கப்பட்ட சிசிடிவி காட்சிகளை 45 நாட்களுக்கு பிறகு அழித்து விடுமாறும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது உள்ளிட்ட செயல்பாடுகள் ‘ஜனநாயகத்துக்கு விஷம்’ போன்றது” என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “தேர்தல்களில் பயன்படுத்தப்பட்ட வாக்காளர் பட்டியலை டிஜிட்டல் வடிவில் வெளியிட தேர்தல் ஆணையம் மறுக்கிறது. மேலும், வாக்குப் பதிவு மையங்களில் எடுக்கப்பட்ட சிசிடிவி காட்சிகளை 45 நாட்களுக்கு பிறகு அழித்து … Read more