கொலை மிரட்டல் எதிரொலி: ஈரானின் அடுத்த உச்ச தலைவரை தெரிவு செய்து வைத்துள்ளாரா கமேனி?

தெஹ்ரான்: தான் கொல்லப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் என்பதால், தனது பொறுப்பை வகிக்கப் போகும் தலைவரை ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி தேர்வு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் தாக்குதல்களை தொடங்கியதை அடுத்து, ஈரான் பதில் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனால், இரு தரப்புக்கும் உயிரிழப்புகளும், சேதங்களும் ஏற்பட்டுள்ளன. ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியை இஸ்ரேல் குறிவைத்து வருகிறது. “இஸ்ரேல் ராணுவத்துக்கு நாங்கள் இலக்குகளை வகுத்துக் கொடுத்துவிட்டோம். ஈரானின் உச்ச … Read more

அரசியலுக்கு வரும் முன்பே..அரசியல் பேசிய விஜய்யின் பாடல்கள்! அத்தனையும் சூப்பர் ஹிட்

HBD Vijay List Of Songs That Spoke Politics : தற்போது அரசியல் கட்சி தொடங்கியிருக்கும் விஜய், அரசியலுக்கு வரும் முன்பே சில பாடல்கள் மூலம் அரசியல் பேசினார். அப்படி பேசிய பாடல்கள் குறித்து இங்கு பார்ப்போம்.  

INDvsENG Ist Test : கில், ரிஷப் சதம், இந்தியா 471க்கு ஆல்அவுட், கங்குலி எதிர்பார்ப்பை பொய்யாக்கிய பிளேயர்..!

IND vs ENG 1st Test: இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் நடக்கிறது. முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்த இந்திய அணி 471 ரன்கள் குவித்து ஆல்அவுட்டாகியுள்ளது. 430 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்த இந்திய அணி கடைசி 6 விக்கெட்டுகளை 41 ரன்களுக்கு பறி கொடுத்தது. இந்திய அணியில் சிறப்பாக விளையாடிய ரிஷப் பந்த் 134 ரன்களுக்கு அவுட்டானார். அதேபோல் கேப்டன் சுப்மன் கில் இரட்டை … Read more

Retro: "நிறைய வெறுப்புகள், அஜெண்டாக்கள்… `ரெட்ரோ' ஒரு போரையே எதிர்கொண்டது" – கார்த்திக் சுப்புராஜ்

சூர்யா, பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், நாசர், ஜெயராம் ஆகியோர் நடிப்பில், சந்தோஷ் நாராயணன் இசையில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கடந்த மே 1-ம் தேதி `ரெட்ரோ’ திரைப்படம் வெளியானது. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை எதிர்கொண்டது. `ரெட்ரோ’ திரைப்படம் இந்த நிலையில், ரெட்ரோ திரைப்படம் வெளியாகி 50 நாள்கள் ஆன நிலையில், இப்படத்தின் வெற்றி குறித்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அந்தப் … Read more

குடும்ப தகராறில் மனைவி, 2 குழந்தைகளை வெட்டிக்கொன்ற விவசாயி… இது விருதுநகர் சம்பவம்…

விருதுநகர்: குடும்ப தகராறில் மனைவி, 2 குழந்தைகளை விவசாயி ஒருவர் வெட்டிக்கொன்ற சம்பவம் விருதுநகரில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ளது  திருவிருந்தாள்புரம் கிராமம். இந்த கிராமத்தை  சேர்ந்தவர் சுந்தரவேலு பூங்கொடி தம்பதியினர். இவர்களுக்கு ஜெயதுர்கா(10), ஜெயலெட்சுமி(7) என 2 பெண் குழந்தைகளும் இருந்தனர்.  இவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை காரணமாக தகராறுகள் நடைபெற்று வருவது வாடிக்கையாக இருந்துள்ளது. இந்த நிலையில்,  சுந்தரவடிவேலு பூங்கொடி இடையே நேற்று இரவு மீண்டும் தகராறு … Read more

ப்ளூடூத் எடை இயந்திரம்: ரேஷன் கடையில் தாமதமாகும் பொருள் விநியோகம்; மக்கள் கோபம் – கவனிக்குமா அரசு?

அந்தக் காலம், இந்தக் காலம்… எந்தக் காலமாக இருந்தாலும், ரேஷன் கடை என்றதும் நம் கண்முன்னே வந்து நிற்பது, ‘வரிசை… கூட்டம்’. ‘அதிக வெயில் இல்லாத நேரத்திலும், கூட்டம் அதிகமாக இல்லாமல் இருக்கும் நேரத்திலும் ரேஷன் கடைக்கு சென்று வந்துவிடலாம்’ – இது தான் பெரும்பாலான மக்களின் மனநிலை. மக்களின் பிரச்னையைப் போக்குவது மாதிரி தான் அரசு தீர்வு கொண்டுவர வேண்டும். ஆனால், தமிழ்நாடு அரசு இப்போது கொண்டு வந்துள்ள ‘ப்ளூடூத் மின்னணு எடை இயந்திரம்’ இன்னும் … Read more

வால்பாறை அதிமுக எம்எல்ஏ அமுல் கந்தசாமி மறைவு: இபிஎஸ் இரங்கல்

சென்னை: கோவை மாவட்டம் வால்பாறை (தனி) தொகுதி அதிமுக எம்எல்ஏ டி.கே.அமுல் கந்தசாமி (60) உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம் அன்னூர் ஒட்டாபாளையத்தைச் சேர்ந்தவர் டி.கே.அமுல் கந்தசாமி. இவர் கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் வால்பாறை (தனி) தொகுதியில் போட்டியிட்டு 13,165 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவர் அதிமுகவில் மாவட்ட மாணவர் அணிச் செயலாளர், மாவட்ட … Read more

பாக். உடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா ஒருபோதும் அமல்படுத்தாது: அமித் ஷா

புதுடெல்லி: பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா ஒருபோதும் அமல்படுத்தாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படுமா என்ற கேள்விக்கு பதில் அளித்த அமித் ஷா, ​​“இல்லை, அது ஒருபோதும் அமல்படுத்தப்படாது. ஒரு கால்வாய் அமைப்பதன் மூலம் பாகிஸ்தானுக்குப் பாயும் தண்ணீரை, ராஜஸ்தானுக்கு எடுத்துச் செல்வோம். நியாயமற்ற முறையில் தண்ணீரைப் பெற்று வந்த பாகிஸ்தான் தண்ணீரின்றி தவிக்கும்.” என்று தெரிவித்துள்ளார். சிந்து நதி … Read more

இஸ்ரேல் மத்திய கிழக்கை முழுமையான பேரழிவுக்கு இட்டுச் செல்கிறது: துருக்கி குற்றச்சாட்டு

இஸ்தான்புல்: ஈரானை தாக்குவதன் மூலம் இஸ்ரேல் மத்திய கிழக்கை முழுமையான பேரழிவுக்கு இட்டுச் செல்வதாக துருக்கி குற்றம் சாட்டியுள்ளது. இஸ்தான்புல்லில் நடந்த இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் (OIC) உச்சிமாநாட்டில் பேசிய துருக்கி வெளியுறவு அமைச்சர் ஹக்கன் ஃபிடான், “இஸ்ரேல் இப்போது நமது அண்டை நாடான ஈரானை தாக்குவதன் மூலம் மத்திய கிழக்கு பகுதியை முழுமையான பேரழிவின் விளிம்புக்கு இட்டுச் செல்கிறது. பாலஸ்தீனம், லெபனான், சிரியா, ஏமன் மற்றும் ஈரான் தரப்பில் பிரச்சினை எதுவும் இல்லை. ஆனால் இஸ்ரேலின் … Read more

'விஜய் மல்லையாவின் வீடியோவைப் பார்த்துதான்..!' – இயக்குநர் ராஜு முருகன் பேசியது என்ன?

இயக்குநர் அரவிந்தன் இயக்கத்தில், ’96’ படத்தில் பிரேம்குமாரிடம் இணை இயக்குநராக பணியாற்றிய பிருத்விராஜ் ராமலிங்கம் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் ‘குட் டே’ ( Good Day). காளி வெங்கட், மைனா நந்தினி, ஆடுகளம் முருகதாஸ், பகவதி பெருமாள், வேல.ராமமூர்த்தி, போஸ் வெங்கட் ஆகியோரும் இப்படத்தில் நடித்துள்ளனர். கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று(ஜூன் 21) நடைபெற்றது. Good Day movie இந்த இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் ராஜு முருகன் … Read more