2 பாக். விமான தளத்தை தாக்கிய பிறகு போர் நிறுத்தத்துக்கு முன்வந்தோம்: பாகிஸ்தான் துணைப் பிரதமர் ஒப்புதல்

பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் உள்ள நூர் கான் விமானப்படை தளம் மற்றும் சார்கோட் விமானப்படை தளங்களை இந்தியா தாக்கியபின், போர் நிறுத்தத்துக்கு நாங்கள் அழைப்பு விடுத்தோம் என பாகிஸ்தான் துணை பிரதமர் இஷாக் தர் ஒப்புக் கொண்டுள்ளார். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப்பின் பாகிஸ்தான் போர் நிறுத்தத்துக்கு முதலில் முன்வந்ததால், அதற்கு இந்தியா சம்மதித்தது. ஆனால் இதை வெளிப்படையாக ஏற்காமல், பாகிஸ்தான் தொடர்ந்து மறுத்து வந்தது. இந்நிலையில் பாகிஸ்தான் துணைப் பிரதமர் இஷாக் தர் நேற்று முன்தினம் அளித்த பேட்டியில் … Read more

டிஎன்பிஎஸ்சி குரூப் 4, போலீஸ் தேர்வு : தமிழ்நாடு அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

TNPSC Group 4, Police SI Exam 2025: டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 4 தேர்வு மற்றும் மிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால் காவல் சார்பு ஆய்வாளர்கள் தேர்வுக்கான மாதிரி தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

India vs England 1st Test: ஜெய்ஸ்வால், கில் சதம்.. வலுவான நிலையில் இந்திய அணி!

Anderson Sachin Trophy: இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இன்று (ஜூன் 20) லீட்ஸ்ஸின் ஹெடிங்லி கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கி உள்ளது. மதியம் 3 மணிக்கு டாஸ் வீசப்பட்டது. டாஸை இங்கிலாந்தின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது. 3.30 மணிக்கு தொடங்கிய நிலையில், யஷஸ்வி … Read more

ஏர் இந்தியா விமானம் மீது பறவை  மோதல் : அவசர தரையிறக்கம்

புனே ஏர் இந்தியா விமானத்தின் மீது பறவை மோதியதால் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. இன்று தலைநகர் டெல்லியில் இருந்து மகாராஷ்டிர மாநிலம் புனேவுக்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது.  இந்த விமானத்தில் 150க்கும் மேற்பட்ட பயணிகள், விமான பணியாளர்கள் பயணித்தனர். அந்த விமானம் மகாராஷ்டிர வான்பரப்பில் நுழைந்து நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது விமானத்தின் மீது பறவை மோதியது. எனவே விமானி துரிதமாக செயல்பட்டு விமானத்தை அவசரமாக புனே விமான நிலையத்தில் தரையிறக்கினார். இதில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. … Read more

கீழடி: "தமிழர் வரலாற்றை மறைப்பது ஏன்?" – மாஃபா பாண்டியராஜனுக்கு எழிலன் பதிலடி!

கீழடி அகழாய்வை மத்திய அரசு ஏற்றுக்கொள்ள மறுத்ததற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியிருக்கின்றன. இத்துடன் கீழடியில் ஆய்வு மேற்கொண்ட அமர்நாத் மாற்றப்பட்டதையும் குறிப்பிட்டு மதுரையில் மத்திய அரசைக் கண்டித்து திமுக இளைஞரணி போராட்டம் நடத்தியது. இன்று, அதிமுகவைச் சேர்ந்த மாஃபா பாண்டியராஜன், கீழடி அகழாய்வுக்கு அதிமுகவே வித்திட்டதாகவும், தமிழகத்தில் பல்வேறு அகழாய்வுகள் அதிமுக காலத்திலேயே தொடங்கப்படதாகக் கூறியிருந்தார். கீழடியை மூட உத்தரவிட்ட பாஜக அரசு! இதற்கு பதிலளித்த ஆயிரம் விளக்கு தொகுதியின் திமுக எம்.எல்.ஏ எழிலன், “2013-14ல் … Read more

மனைவி பாஸ்போர்ட் கோரி விண்ணப்பிக்க கணவரின் கையெழுத்து தேவையில்லை: ஐகோர்ட்

சென்னை: மனைவி பாஸ்போர்ட் கோரி விண்ணப்பிக்க கணவரின் அனுமதியோ, கையெழுத்தோ தேவையில்லை என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையை சேர்ந்த ரேவதி என்பவர், தனக்கு பாஸ்போர்ட் கோரி மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பித்தார். திருமணமான ரேவதியின் விண்ணப்பத்தில் அவரது கணவரின் கையெழுத்து இல்லை என்பதால், கணவரின் கையெழுத்தை பெற்று வந்தால் மட்டுமே அந்த விண்ணப்பம் பரிசீலிக்கப்படும் என பாஸ்போர்ட் அதிகாரி தெரிவித்தார். இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் ரேவதி வழக்கு தொடர்ந்தார். அதில், “கருத்து வேறுபாடு … Read more

2024 மக்களவைத் தேர்தலுக்காக பாஜக ரூ.1,494 கோடி, காங். ரூ.620 கோடி செலவு: ஏடிஆர் தகவல்

புதுடெல்லி: 2024 மக்களவைத் தேர்தலின்போது பாரதிய ஜனதா கட்சி ரூ.1,494 கோடியை செலவிட்டுள்ளது. இது மொத்த தேர்தல் செலவில் 44.56% ஆகும் என்று ஜனநாயக சீர்திருத்த சங்கம் (ஏடிஆர் – ADR) தெரிவித்துள்ளது. மார்ச் 16 முதல் ஜூன் 6, 2024 வரை மக்களவை மற்றும் ஆந்திரப் பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம், ஒடிசா மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களில் ஒரே நேரத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தல்களின் போது அரசியல் கட்சிகள் ரூ.3,352.81 கோடியைச் செலவிட்டன என ஜனநாயக … Read more

இஸ்ரேல் – ஈரான் போரில் அமெரிக்கா களமிறங்குமா? – ட்ரம்ப் 2 வாரங்களில் முடிவு

வாஷிங்டன்: அடுத்த இரண்டு வாரங்களில் இஸ்ரேல் – ஈரான் மோதலில் அமெரிக்கா ஈடுபடுமா என்பது குறித்து அதிபர் டொனால்டு ட்ரம்ப் முடிவெடுப்பார் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த ஊடகப் பிரிவு செயலாளர் கரோலின் லீவிட், “எதிர்காலத்தில் ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தலாமா வேண்டாமா என்ற விஷயத்தில் கணிசமான வாய்ப்பு உள்ளது என்ற உண்மையின் அடிப்படையில், அடுத்த இரண்டு வாரங்களுக்குள் இப்பிரச்சினைக்குள் செல்லலாமா வேண்டாமா என்பதை நான் முடிவெடுப்பேன் என அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார். … Read more

முருகன் மாநாடு: பக்தர்களை தடுக்கும் அதிகாரிகள் குடும்பத்தோடு அழிவார்கள் – எச்.ராஜா!

முருக பக்தர்கள் மாநாட்டிற்கு வரும் பக்தர்களை தடுக்கும் காவல்துறையினர் குடும்பத்தோடு அழிய வேண்டுமென கடவுளிடம் வேண்டுகிறோம் என எச். ராஜா தெரிவித்துள்ளார். 

இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் : ஒரே போட்டியில் பல சாதனைகளை படைத்த ஜெய்ஷ்வால்..!!

Yashasvi Jaiswal records : இந்திய அணி இங்கிலாந்து சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று லீட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வெற்றி பெற்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்ய, இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடி வருகிறது. தொடக்க வீரராக களமிறங்கிய ஜெய்ஷ்வால் சதமடித்து அசத்தியுள்ளார். அவர் இந்த சதம் மூலம் பல கிரிக்கெட் சாதனைகளையும் படைத்துள்ளார். இங்கிலாந்து அணிக்கு … Read more