800 கோடி ரூபாய் ஊழல் தொடர்பாக டாடா கன்சல்டிங் இன்ஜினியர்ஸ் மீது சிபிஐ வழக்குப் பதிவு

மும்பையில் உள்ள ஜவஹர்லால் நேரு துறைமுகத்தில் சுமார் ரூ.800 கோடி அளவுக்கு ஊழல் மற்றும் மோசடி செய்ததாக டாடா குழும நிறுவனமான டாடா கன்சல்டிங் இன்ஜினியர்ஸ் மற்றும் பலர் மீது மத்திய புலனாய்வுப் பிரிவு வழக்குப் பதிவு செய்துள்ளது. உலகளாவிய கடல்சார் பொறியியல் நிறுவனமான போஸ்காலிஸ் ஸ்மிட் நிறுவனமும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. டாடா கன்சல்டிங் இன்ஜினியர்ஸ் மும்பை துறைமுக அதிகாரிகளுடன் குற்றவியல் சதியில் ஈடுபட்டதாகவும், துறைமுகத்தில் அகழ்வாராய்ச்சி பணிகளைப் பொறுத்தவரை தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவாக … Read more

`எதிர்கால தலைமுறையின் அழிவுக்கு பங்களிக்கிறது' – பள்ளிகளில் ஸ்மார்ட்போன் பயன்படுத்த தாலிபன்கள் தடை

தெற்கு ஆப்கானிஸ்தானில் உள்ள பள்ளிகளில் ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்த தாலிபன்கள் விதித்த தடை புதன்கிழமை முதல் அமலுக்கு வந்ததாக மாணவர்களும் ஆசிரியர்களும் உறுதிப்படுத்தியுள்ளனர். ஆப்கானிஸ்தானின் இரண்டாம் பெரிய நகரமான காந்தஹார் மாகாணத்தில் செயல்படும் கல்வித்துறை வெளியிட்ட உத்தரவில், பள்ளிகள் மற்றும் மதப்பள்ளிகளில் உள்ள மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் நிர்வாக ஊழியர்களுக்கு இந்த தடை பொருந்தும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.  ஆப்கானிஸ்தானின் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த முடிவானது, ஷரியா இசுலாமியர்களது மனநிலையில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன்கள் எதிர்கால தலைமுறையின் அழிவுக்கு … Read more

‘மா’ விவசாயிகளுக்காக கிருஷ்ணகிரியில் நடந்த அதிமுக உண்ணாவிரதப் போராட்டம்!

கிருஷ்ணகிரி: ‘மா’ விவசாயிகளை கண்டுக்கொள்ளாத திமுக அரசை கண்டிப்பதாக, கிருஷ்ணகிரியில் அதிமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அண்ணா சிலை எதிரே ‘மா விவசாயிகளை கண்டுகொள்ளாத திமுக அரசை கண்டித்து’ அதிமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இன்று ( ஜூன் 20) காலை 9 மணிக்கு தொடங்கிய உண்ணாவிரத போராட்டம், மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. தொடர்ந்து அதிமுக துணை பொது செயலாளர் கே.பி.முனுசாமி செய்தியாளர்களிடம் கூறியது: “கடந்த ஆண்டு … Read more

“அவமானம் அல்ல… அதிகாரம் அளிப்பதே ஆங்கிலம்!” – அமித் ஷாவுக்கு ராகுல் காந்தி பதிலடி

புதுடெல்லி: இன்றைய உலகில் தாய்மொழியைப் போலவே ஆங்கிலம் முக்கியமானது என தெரிவித்துள்ள ராகுல் காந்தி, ஒவ்வொரு குழந்தைக்கும் ஆங்கிலம் கற்பிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். “நமது நாட்டில் ஆங்கிலம் பேசுபவர்கள் விரைவில் வெட்கப்படுவார்கள். அத்தகைய சமூகத்தை உருவாக்குவது வெகு தொலைவில் இல்லை” என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று பேசி இருந்தார். அமித் ஷாவின் இந்தப் பேச்சுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இந்தி மொழியில் … Read more

இஸ்ரேல் – ஈரான் போர்: ட்ரம்ப்பின் ‘கணிக்க முடியாத போக்கு’ அமெரிக்காவுக்கு சாதகமா, பாதகமா?

“நான் எப்ப வருவேன், எப்படி வருவேன்னு தெரியாது; ஆனா, வரவேண்டிய நேரத்தில் சரியாக வருவேன்” என்பன போன்ற பஞ்ச் வசனங்களை சினிமாவில் வேண்டுமானால் ரசிக்கலாம். ஆனால், “அதை நான் செய்யலாம். செய்யாமலும் போகலாம். நான் என்ன செய்வேன் என்று யாருக்கும் தெரியாது” என்று ஈரான் பிரச்சினையில் அமெரிக்க அதிபர் கூறியிருப்பது ரசிக்கக் கூடிய வசனமும் அல்ல, ஏற்கக் கூடிய வாதமும் அல்ல. ஈரான் பிரச்சினையில் ட்ரம்ப்பின் கணிக்க முடியாத இந்தப் போக்கு அமெரிக்காவுக்கு சாதகமா, பாதகமா என்பதைப் … Read more

திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் – இந்து முன்னணி மோதல்.. பாஜக தலைவரின் மண்டை உடைந்தது!

திண்டுக்கல்லில் இந்து முன்னணி அமைப்பை சேர்ந்தவர்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்களுக்கு இடையே ஏற்பாட்ட மோதலில், பாஜக மாவட்ட துணைத் தலைவர் மண்டை உடைந்தது.  

Ind vs Eng 1st Test: சாய் சுதர்சன் டக் அவுட்.. அறிமுக போட்டியிலேயே இப்படி ஒரு சோதனையா?

இந்திய டெஸ்ட் அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி இன்று(ஜூன் 20) லீட்ஸ்ஸின் ஹெடிங்லி கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கி உள்ளது. ரோகித் சர்மா, விராட் கோலி இல்லாத முதல் டெஸ்ட் தொடர் என்பதால், மிகுந்த எதிர்ப்பார்ப்பு உள்ளது. மதியம் 3 மணிக்கு டாஸ் வீசப்பட்டது. டாஸை இங்கிலாந்தின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி தற்போது … Read more

தமிழ்நாடு அரசின் உதவித் தொகையுடன் இலவச தொழில்நுட்ப பயிற்சி : இரு பாலரும் விண்ணப்பிக்கலாம்

Tamil Nadu Free Technical Training : தமிழ்நாடு அரசு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகையுடன் கூடிய இலவச தொழில்நுட்ப பயிற்சிகளை வழங்குகிறது. ஆண்களுக்கு உச்ச வயது வரம்பு 40, பெண்களுக்கு வயது வரம்பில்லை, ஆனால் இருபாலரும் 10 வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த பயிற்சியில் சேருபவர்களுக்கு பல சலுகைகள் வழங்கப்படுகின்றன.  திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி, ஆலங்காயம் சாலை, வேப்பமரச்சாலை பகுதியில் செயல்பட்டு வரும் வாணியம்பாடி அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில், 2025ஆம் ஆண்டுக்கான பயிற்சியாளர் … Read more

பூரி ஜெகநாதரை தரிசிக்க ‘ப்ரீ-பிளான்’ பண்ணியதால் அமெரிக்க அதிபரின் ‘டின்னர்’ அழைப்பை நிராகரித்தேன் : பிரதமர் மோடி

ஒடிசாவில் பாஜக ஆட்சியமைத்து ஓராண்டு நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில் முதலாமாண்டு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். புவனேஸ்வரில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு பேரணியில் உரையாற்றிய அவர், “கனடாவில் ஏற்பாடு செய்யப்பட்ட G7 உச்சி மாநாட்டில் நான் பங்கேற்றேன்” என்றார். “அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் என்னை அழைத்து கனடாவிலிருந்து திரும்பும் வழியில் அமெரிக்காவிற்கு வருகை தருமாறும் வாஷிங்டனில் தன்னுடன் இரவு விருந்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார், ஒடிசாவின் ஜெகந்நாதரின் புனித பூமிக்கு வர முன்கூட்டியே … Read more

2025 -1941: ஒரே நாள்காட்டியை கொண்டிருக்கும் ஆண்டுகள்- உலகப்போர் நடந்த ஆண்டை எவ்வாறு பிரதிபலிக்கிறது?

2025 ஆம் ஆண்டின் நாள்காட்டி 1941 ஆம் ஆண்டின் நாள்காட்டியோடு அப்படியே ஒத்து இருக்கிறது. அதாவது இரண்டு ஆண்டுகளிலும் தேதிகள், கிழமைகள் ஒன்றாகவே வருகின்றன. 2025 ஆம் ஆண்டு நாள்காட்டி 1941 ஆம் ஆண்டு போலவே உள்ளது என்று பலரும் சமூக வலைதளங்களில் இது குறித்து விவாதங்களை நடத்தி வருகின்றனர். இந்த ஒற்றுமை குறித்து சிலர் ஆச்சர்யமடைந்ததாலும், சிலர் அச்சம் கொள்கின்றனர். 1941 ஆம் ஆண்டு இரண்டாம் உலகப் போரின் முக்கிய ஆண்டாகப் பார்க்கப்படுகிறது. அதேபோல் 2025 … Read more