3 ஆண்டு சிறை, ரூ.5 லட்சம் அபராதம்: கூட்ட நெரிசல் சம்பவங்களை கையாள கர்நாடகா திட்டம்

பெங்களூரு: பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவத்தின் எதிரொலியாக கர்நாடக அரசு கூட்டங்களைக் கையாள புதிய சட்டங்களை அமல்படுத்த திட்டமிட்டுள்ளது. அதன்படி, பெரும் நிகழ்ச்சிகளை நடத்தும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களே இதுபோன்ற அசம்பாவிதங்களுக்கு பொறுப்பாவார்கள், மூன்று வருட சிறை தண்டனை, ரூ.5 லட்சம் வரை அபராதம் என்று பல்வேறு விதிகளை வகுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான வரைவு அறிக்கையில், நிகழ்ச்சிகளை நடத்தும் முன்னர் நிகழ்ச்சி நடத்தும் ஈவன்ட் மேனேஜ்மென்ட் நிறுவனங்கள் … Read more

‘ஈரான் உச்ச தலைவர் கமேனி உயிருடன் இருக்கவே கூடாது’ – இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் சீற்றம்

டெல் அவிவ்: “ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி உயிருடன் இருக்கவே கூடாது” என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் காட்டமாக தெரிவித்துள்ளார். சொரோகா மருத்துவமனை தாக்குதலால் கடும் கோபமடைந்துள்ள இஸ்ரேல் எச்சரிக்கைகளை பதிவு செய்து வருகிறது. ஏற்கெனவே பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ‘ஈரான் மிகப் பெரிய விலை கொடுக்க வேண்டியிருக்கும்’ என்று கூறியிருந்த நிலையில், இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், “இஸ்ரேல் ராணுவத்துக்கு நாங்கள் இலக்குகளை வகுத்துக் கொடுத்துவிட்டோம். ஈரானின் உச்ச … Read more

ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு.. புகார் அளித்த ஊழியர்கள் பணிநீக்கம்!

ஏர் இந்திய விமான ஊழியர்கள், விமானத்தில் ஏற்பட்ட கோளாறை புகாராக தெரிவித்ததால், பணிநீக்கம் செய்யப்பட்டதாக பிரதமருக்கு கடிதம் எழுத்தி உள்ளார். 

இந்திய அணியின் பிளேயிங் லெவனில் சாய் சுதர்சனுக்கு இடம் இருக்கா? போட்டி போடும் மூன்று வீரர்கள்!

Sai Sudharsan: இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் விளையாட உள்ளது. நாளை முதல் டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. இதற்கான பிளேயிங் லெவனை இங்கிலாந்து அறிவித்த நிலையில், இதுவரை இந்திய அணி அறிவிக்கவில்லை. இந்த நிலையில், இந்திய அணியின் பிளேயிங் லெவனை தேர்வு செய்வதில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில், இந்திய அணியின் … Read more

Love Marriage: "இது 90ஸ் கிட்ஸோட பிரதிபலிப்பு!" – பட விழாவில் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்

விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியிருக்கிற ‘லவ் மேரேஜ்’ திரைப்படம் இம்மாதம் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. அறிமுக இயக்குநர் ஷண்முக ப்ரியன் இப்படத்தை இயக்கியிருக்கிறார். இன்று இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விக்ரம் பிரபு, ஷான் ரோல்டன் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனும் இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றிருந்தார். Adhik Ravichandran – Love Marriage ஆதிக் ரவிச்சந்திரன் பேசுகையில், “இன்னைக்கு இந்த நிகழ்வுக்கு வந்ததுக்கு … Read more

விமானத்தின் அவசர கால கதவை திறக்க முயன்றவர் சென்னையில் கைது

சென்னை இண்டிகோ விமானத்தில் காரணமின்றி அவச்ர கால கதவை திறக்க முயன்றவர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று ஒரு இண்டிகோ விமானம் சென்னையில் இருந்து கொல்கத்தாவுக்கு164 பயணிகளுடன் புறப்பட தயாராக இருந்தபோது மேற்கு வங்காளத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் திடீரென விமானத்தில் அவசர கால கதவை திறக்கும் பட்டனை அழுத்தி திறக்க முயன்றதாக கூறப்படுகிறது. அந்த இளைஞரை சென்னை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.   தாம் அவசர கால பட்டனை தவறுதலாக … Read more

பாமக பிரச்சினைகளுக்கு திமுகதான் காரணமா? – அன்புமணிக்கு ராமதாஸ் மறுப்பு

சென்னை: “பாமகவில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு திமுகதான் காரணம் என அன்புமணி கூறியது அப்பட்டமான, கடைந்தெடுத்த பொய்,” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி, எம்எல்ஏ அருள் ஆகியோரை நலம் விசாரிக்க கட்சியின் நிறுவனர் ராமதாஸ் இன்று (ஜூன் 19) சென்னை வந்தார். அப்போது அவரிடம், பாமக பிரச்சினையில் திமுக தலையிடுகிறது என அன்புமணி விமர்சித்துள்ளாரே என செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த ராமதாஸ், … Read more

“விபத்துக்குள்ளான போயிங் 787 விமானம் நன்கு பராமரிக்கப்பட்டதே” – ஏர் இந்தியா சிஇஓ

புதுடெல்லி: விபத்துக்குள்ளான போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம் நன்கு பராமரிக்கப்பட்டு, விமானம் மற்றும் என்ஜின்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்ததாகவும், புறப்படுவதற்கு முன்பு விமானத்தில் எந்த பிரச்சினையும் இருக்கவில்லை என்றும் ஏர் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர் கேம்பல் வில்சன் தெரிவித்துள்ளார். கடந்த 12-ம் தேதி அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியாவின் போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம், சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானது. விமானத்தில் பயணித்த 242 பேரில், 241 பேர் உயிரிழந்தனர். … Read more

ஈரானின் புஷேர் அணுமின் நிலையத்தை தாக்கினால் செர்னோபில் போல பேரழிவு: ரஷ்யா எச்சரிக்கை

மாஸ்கோ: ஈரானின் புஷேர் அணுமின் நிலையத்தின் மீதான இஸ்ரேலிய தாக்குதல், செர்னோபில் மாதிரியான பேரழிவை ஏற்படுத்தும் என்று ரஷ்யாவின் அணுசக்தி நிறுவனம் எச்சரித்துள்ளது. புஷேர் அணுமின் நிலையத்தை தாக்கியதாக இஸ்ரேலிய ராணுவ செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறினார். ஆனால், அதன் பின்னர் ஓர் இஸ்ரேலிய ராணுவ அதிகாரி இந்த அறிக்கையை தவறானது என்று மறுத்தார். ஆனாலும், புஷேர் தளம் தாக்கப்பட்டதை உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவோ முடியாது என்று இஸ்ரேல் தரப்பு கூறியது. இந்தப் பின்னணியில்தான், ஈரானின் புஷேர் … Read more