தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு ஏற்படுமா? மின் கட்டணம் உயருமா? மின்சாரத்துறை முக்கிய விளக்கம்

Tamil Nadu electricity update : தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு ஏற்படுமா? மின் கட்டணம் உயருமா? என்பது குறித்து மின்வாரிய இயக்குனர் ராதாகிருஷ்ணன் முக்கிய விளக்கம் கொடுத்துள்ளார்.

Suriya: சூர்யாவின் 50-வது பிறந்தநாளில் காத்திருக்கும் ஆச்சரியங்கள்… நாளை 'சூர்யா 45' டைட்டில்!

சூர்யா, வெங்கி அட்லூரியின் கூட்டணியில் உருவாகி வரும் ‘சூர்யா 46’ படப்பிடிப்பு ஹைதராபாத்தில் மும்முரமாக நடந்து வருகிறது. இதற்கிடையே சூர்யாவின் முந்தைய படமான ‘சூர்யா 45’ படத்தின் அப்டேட் ஒன்று நாளை வெளியாகிறது. suriya 46 டைட்டில் அப்டேட் ‘ரெட்ரோ’ படத்தை அடுத்து சூர்யா நடிப்பில் அடுத்து திரைக்கு வரும் படமாக ‘சூர்யா 45’ படம் உள்ளது. ஆர்.ஜே. பாலாஜி இயக்கியுள்ள இந்த படத்தில் த்ரிஷா, யோகிபாபு, நட்டி நட்ராஜ், ‘லப்பர் பந்து’ சுவாஸ்விகா, ‘நெடுஞ்சாலை’ ஷிவதா, … Read more

ஆன்லைனில் வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிப்பது எப்படி? புது அப்டேட்

How to Apply for a Voter ID Card Online in India : இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் அடையாள அட்டை வழங்குவதில் மிகப்பெரிய அப்டேட்டைக் கொண்டு வந்துள்ளது. வாக்காளர் அடையாள அட்டையில் ஏதேனும் அப்டேட் இருந்து அதனை மேற்கொள்பவர்களுக்கு, புதிய வாக்காளர் அடையாள அட்டையை 15 நாட்களில் பெற்றுக் கொள்ளலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. அதாவது, வாக்காளர்களுக்கு விரைவாகவும் திறம்படவும் சேவை வழங்குவதற்காக, வாக்காளர் பட்டியலில் அப்டேட் செயயப்பட்ட 15 நாட்களுக்குள் … Read more

மத்திய பிரதேச பாஜக அரசால் மீண்டும் கட்டப்படும் 90 டிகிரி பாலம்

போபால் மத்திய பிரதேசத்தில் கட்டப்பட்டுள்ள 90 டிகிரி பாலத்தை அரசு மிண்டும் கட்ட தயாராகி உள்ளது பாஜக ஆட்சி செய்யும் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள ஐஷ்பாக்  பகுதியில் 90 டிகிரில் எல் வடிவ மேம்பாலம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. கடந்த 2022 ஆகஸ்ட் முதல் 2025 வரை ரூ.18 கோடி செலவில் கட்டப்பட்ட இந்த பாலம் கடந்த ஜூன் 15 ஆம் தேதி திறக்கப்பட திட்டமிடப்பட்டது. இருப்பினும்,  திறப்பு விழாவிற்கு முன்பாக பாலத்தின் குறைபாடுள்ள வடிவமைப்பின் … Read more

Aadhar Card: ஆதார் கார்டு ஜெராக்ஸ் இனி தேவையில்லை; வரப்போகிறது புதிய ஆப்! | Detail

டிக்கெட் முன்பதிவா… வங்கி சம்பந்தமான ஏதேனும் விஷயமா… இப்படி எந்த விஷயத்திற்கு சென்றாலும், இந்தியாவில் முதலில் கேட்கப்படும் ஆவணம் ‘ஆதார்’. ஆனால், எப்போதும் ஆதார் நம் கையில் இருக்கும் என்று சொல்ல முடியாது. இந்தப் பிரச்னைக்கு வரப்போகிறது ஒரு புதிய தீர்வு. ஜெராக்ஸ் வேண்டாமே! வரும் வாரங்களில் UIDAI புதிய ஆப் ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த ஆப் மூலம் எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் உங்களது ஆதாரை சமர்ப்பிக்க முடியும். ஆதார் இந்த ஆப்பில் ஆதார் … Read more

‘வியக்கத்தக்க கத்திப்பாரா மெட்ரோ மேம்பாலப் பணிகள்’ – முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி

சென்னை: “இன்ஜினீயரிங் மார்வெல் என அனைவரும் வியக்க உருவாகி வரும் கத்திப்பாரா மேம்பாலம் உரிய காலத்தில் முடிக்கப்பட்டு, விரைவில் சென்னை மக்களின் நகரப் பயணம் இனிமையாக அமைந்திட வழிசெய்ய அறிவுறுத்தினேன்,” என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். இது தொடர்பாக தமிழக முதல்வர் தனது சமூகவலைதளப் பக்கத்தில், “சென்னையின் நவீன அடையாளமாக கத்திப்பாரா மேம்பாலத்தை அமைத்தார் மறைந்த முதல்வர் கருணாநிதி. அந்த மேம்பாலத்தின் மேல் இந்தியாவிலேயே முதன்முறையாக மெட்ரோ வழித்தடங்கள் அமைக்கப்படும் பணிகளைப் பார்வையிட்டேன். Engineering Marvel என … Read more

நீதிபதி வர்மா வீட்டில் பணக்கட்டுகள் இருந்தது உண்மை: விசாரணைக் குழு அறிக்கை சொல்வது என்ன?

புதுடெல்லி: உயர் நீதிமன்ற நீதிபதி வர்மாவின் டெல்லி இல்ல கிடங்கில் அதிக அளவில் ரூபாய் நோட்டுக் கட்டுகள் கண்டெடுக்கப்பட்டதாக விசாரணைக் குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக யஷ்வந்த் வர்மா இருந்தபோது, கடந்த மார்ச் 14-15 அன்று டெல்லியில் உள்ள அவரது வீட்டின் ஒரு பகுதியில் உள்ள கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்கச் சென்ற காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர், கிடங்கினுள் பாதி எரிந்த நிலையில் பணக் கட்டுகள் இருந்ததைக் … Read more

‘ஈரானின் உச்ச தலைவரை குறிவைத்தால்…’ – ஈராக் மதகுரு எச்சரிக்கை

ஈரானின் உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனியை குறிவைப்பதற்கு எதிராக ஈராக்கின் ஷியா பிரிவின் மதகுரு அயதுல்லா அலி சிஸ்தானி எச்சரிக்கை விடுத்தார். மேலும் ஈரான் – இஸ்ரேல் போர் முழு பிராந்தியத்தையும் குழப்பத்தில் ஆழ்த்தக்கூடும் என்றும் அவர் கூறினார். இது குறித்து அயதுல்லா அலி சிஸ்தானி வெளியிட்ட அறிக்கையில், ‘ஈரானின் உச்ச மதத் தலைவரையும், அரசியல் தலைவரையும் குறிவைப்பது பிராந்தியத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். இது பரவலான குழப்பத்தையும் தூண்டக்கூடும். இது பிராந்திய மக்களின் துன்பத்தை … Read more

நடிகர் ஸ்ரீ-யின் லேட்டஸ்ட் வீடியோ! என்ன சொல்லியிருக்கிறார் பாருங்க..

Actor Sri Recent Video : சில நாட்களுக்கு முன்பு உடல் நிலை சரியில்லாமல் இருந்த நடிகர் ஸ்ரீ, தற்போது சமூக வலைதளங்களில் கம்-பேக் கொடுத்திருக்கிறார். அத்தோடு ஒரு நல்ல செய்தியையும் மக்களிடம் பகிர்ந்துள்ளார்.  

அடுத்த ஒரு வாரத்திற்கு இப்படிதான் இருக்கும்! வானிலை மையம் அலர்ட்

அடுத்த ஒரு வாரத்திற்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.