விமான விபத்தில் பாலிசிதாரர், வாரிசு மரணம்.. இழப்பீடு அளிப்பதில் காப்பீட்டு நிறுவனங்கள் திணறல்

ஆமதாபாத், குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமானநிலையத்தில் இருந்து லண்டனுக்கு கடந்த 12-ந்தேதி புறப்பட்ட விமானம், பறக்கத் தொடங்கிய சில நிமிடங்களில், அருகில் இருந்த பி.ஜே. மருத்துவக்கல்லூரி விடுதிக்கட்டிடத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. விமானம் வெடித்து சிதறியதில் அதில் இருந்த 241 பேரும், மருத்துவக் கல்லூரி விடுதியில் இருந்த 5 எம்.பி.பி.எஸ் மாணவர்களும், பொதுமக்கள் 24 பேரும் என 270 பேர் பலியானார்கள். உயிரிழந்தவர்களின் உடல்களில் பல அடையாளம் காண முடியாத அளவுக்கு … Read more

இந்திய அணியில் விராட் கோலி இல்லாதது வருத்தம் அளிக்கிறது: பென் ஸ்டோக்ஸ்

லீட்ஸ், இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லீட்சில் நாளை தொடங்குகிறது. கேப்டன் ரோகித் சர்மா, நட்சத்திர வீரர் விராட் கோலி ஆகியோர் கடந்த மாதம் டெஸ்டில் இருந்து விடைபெற்றதால் புதிய கேப்டன் சுப்மன் கில் தலைமையில் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி இந்த தொடரில் களம் இறங்குகிறது. 2007-ம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணி இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி டெஸ்ட் தொடரை வென்றதில்லை என்ற நிலையை மாற்றுமா? என்று … Read more

போர்க்களத்தின் மூலம் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது – பிரதமர் மோடி

சாக்ரெப், பிரதமர் மோடி அரசு மத்திய கிழக்கு நாடான சைப்ரஸ், கனடா மற்றும் ஐரோப்பிய நாடான குரோஷியா ஆகிய 3 நாடுகளுக்கு அரசு முறை சுற்றுப்பயணம் பயணம் மேற்கொண்டுள்ளார். இதன்படி முதலாவதாக சைப்ரஸ் நாட்டிற்கு சென்ற பிரதமர் மோடி, அங்கு நடைபெற்ற வர்த்தக மாநாட்டில் கலந்து கொண்டார். அதனை தொடர்ந்து பிரதமர் மோடி கனடா சென்றார். கனடாவின் கன்னாஸ்கிஸ் நகரில் நடந்த ஜி-7 உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். இந்த மாநாட்டில் கனடா பிரதமர், இத்தாலி, பிரான்ஸ் … Read more

“தந்தை இல்லாத எனக்கு தந்தையாக உதவிய முதல்வர்'' – IITக்கு தேர்வான பழங்குடியின மாணவி நெகிழ்ச்சி

தமிழ்நாடு முதலமைச்சர், மாணவ மாணவியர்கள் கல்வியில் சிறந்து விளங்கிடும் வகையில் காலை உணவுத் திட்டம், புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன், நான் முதல்வன் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக, பெண்கல்வி முன்னேற்றத்திற்காக புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவியருக்கு மாதம் ரூ.1,000 வழங்கி வருகிறார். தமிழ்நாடு முதலமைச்சரின் சிறப்பான இத்திட்டங்களின் பலனாக அனைத்துதரப்பு மாணவ, மாணவியர்களுக்கும் சிறப்பான கல்வி வழங்கப்பட்டு … Read more

மெட்ரோ கர்டர் விழுந்து இளைஞர் உயிரிழந்த விவகாரம்: ஒப்பந்த நிறுவனத்துக்கு ரூ.1 கோடி அபராதம்

சென்னை: சென்னை ராமாபுரத்​தில் மெட்​ரோ கர்​டர் விழுந்து வாலிபர் உயி​ரிழந்த விபத்​தில் ஒப்​பந்​த​தா​ர​ரான எல் அண்ட் டி நிறு​வனத்​துக்கு ரூ.1 கோடி அபராதம் விதிக்​கப்​பட்​டுள்​ளது. 4 பொறி​யாளர்​கள் பணி நீக்​கம் செய்​யப்​பட்​டுள்​ளனர். சென்​னை​யில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்​டத்​தில், மாதவரம் – சோழிங்​கநல்​லூர் வரையி​லான வழித்​தடத்​தில், கடந்த 12-ம் தேதி இரவு 2 தூண்​களுக்​கு இடையே கர்​டர் அமைக்​கும் பணி நடை​பெற்​ற​போது 40 அடி நீள​முள்ள கர்​டர் திடீரென சரிந்து விழுந்​தது. இதில் சிக்கி ரமேஷ் … Read more

பிஹாரில் குழந்தை திருமணம் சிறுமிக்கு பாதுகாப்பு அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவருக்கு 33 வயதான சிவில் காண்டிராக்டர் ஒருவருடன் கடந்த ஆண்டு டிசம்பர் 9-ம் தேதி திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் தனது தாய்மாமன் உதவியுடன் தாய் வீட்டுக்கு அந்த சிறுமி 10-ம் வகுப்பு தேர்வு எழுத வந்திருந்தார். தேர்வு முடிந்த பின்னர் கணவர் வீட்டுக்கு அவர் செல்லவில்லை. இந்நிலையில் கணவர் வீட்டில் தன்னை கொடு மைப்படுத்துகிறார்கள் என்று கூறி, தனது நண்பர் ஒருவருடன் வீட்டை விட்டுத் தப்பிச் சென்றுவிட்டார். … Read more

இஸ்ரேல் போரில் ‘நண்பன்’ ஈரான் சார்ந்து ரஷ்யா ‘நிதான அரசியல்’ பின்பற்றுவது ஏன்?

போர் என்பதே அரசியல் என்றால், அதை தூண்டிவிடுவதும், போருக்கு ஆதரவாக அணிகள் சேர்வதும், மறைமுகமாக ஆதரிப்பதும், ஆயுதம் வழங்குவதும், கருத்து மட்டுமே சொல்லிவிட்டு ஒதுங்கி நிற்பதும், மத்தியஸ்தம் செய்வதும் நுண்ணரசியல் வகையறா எனலாம். எந்த இரு நாடுகள் மோதிக் கொண்டாலும் கோதாவுக்கு வெளியே நிற்கும் மற்ற நாடுகள் மேலே பட்டியலில் உள்ள ஏதேனும் ஒரு வகையறாவைச் சேர்ந்ததாகவே இருக்க முடிகிறது. நவீன புவி அரசியலில் மாறிவரும் பொருளாதார சார்புகள் அப்படியான நிலைப்பாட்டினை எடுக்கும் நிர்பந்தத்துக்கு உலக நாடுகளைத் … Read more

பக்தர்கள் நிம்மதி தேடி கோவிலுக்கு செல்கின்றனர், ஆனால் அவர்களை ஏமாற்றும் வேலை நடைபெறுகிறது! உயர்நீதிமன்றம்…

மதுரை: பக்தர்கள் நிம்மதி தேடி கோவிலுக்கு செல்கின்றனர், ஆனால் அவர்களை ஏமாற்றும் வேலை அங்கு நடைபெறுகிறது, பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் கோயில் நிர்வாகம் செய்து தருவதில்லை” என உயர்நீதி மன்றம் மதுரை கிளை நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர். அரசு முறையான நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்தினர். திருச்செந்தூர் கோயிலில் கும்பாபிஷேகம் நடத்தத் தடை விதிக்கக் கோரி, தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ராம்குமார் ஆதித்யன் என்பவர்  உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.  அவரது மனுவில், , … Read more

மாணவியின் தற்கொலை முயற்சியை தடுத்த இன்ஸ்டாகிராம்.. என்ன நடந்தது..?

ரேபரேலி, உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி அருகே உள்ள தேவானந்த்பூர் நயி பஸ்தி பகுதியை சேர்ந்த ஒரு மாணவி முதுநிலை இறுதியாண்டு படித்து வருகிறார். 21 வயதான அவருக்கு வீட்டில் திருமணம் நடத்த ஏற்பாடு செய்து வந்துள்ளனர். இதில் அவருக்கு உடன்பாடு இல்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளத்தில் “குட்பை சாரி அம்மா அப்பா” என்று கூறி மாத்திரைகளின் புகைப்படத்தையும் பதிவிட்டு இருந்தார். 16-ந்தேதி இரவில் 7.42 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த பதிவு குறித்து, … Read more

பந்தை சேதப்படுத்தியதாக திண்டுக்கல் அணி மீது அளித்த புகாரை வாபஸ் பெற்ற மதுரை பாந்தர்ஸ்

சென்னை, 9-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் கடந்த 14-ந் தேதி நடந்த லீக் ஆட்டத்தில் ஆர்.அஸ்வின் தலைமையிலான நடப்பு சாம்பியன் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் மதுரை பாந்தர்சை தோற்கடித்தது. இந்த ஆட்டத்தின் போது திண்டுக்கல் அணியினர் ரசாயனங்கள் தடவப்பட்டது போல் தோன்றிய துண்டுகளை (டவல்ஸ்) பயன்படுத்தி பந்தை சேதப்படுத்தினர் என்றும் அந்த அணியினர் மீது தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மதுரை பாந்தர்ஸ் அணி நிர்வாகம் சார்பில், டி.என்.பி.எல். … Read more