டிபன் பாக்ஸை மாணவிகள் கழுவும் வீடியோ வைரல்: பள்ளி தலைமையாசிரியர் பணியிட மாற்றம்

மேட்டூர்: எடப்பாடியில் அரசு நடுநிலைப் பள்ளியில் தலைமையாசிரியரின் டிபன் பாக்ஸை மாணவிகள் கழுவியதாக வீடியோ வைரலான நிலையில், அந்த தலைமையாசிரியரை பணியிட மாற்றம் செய்து மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட கவுண்டம்பட்டியில் அரசு நடுநிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் மாணவர்கள், மாணவிகள் என 218 பேர் படித்து வருகின்றனர். பள்ளியின் தலைமை ஆசிரியராக ஜெயக்குமார் உள்பட 10-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், அப்பள்ளியில் பயிலும் மாணவிகள் சிலர் தலைமையாசிரியரின் … Read more

காஷ்மீர் அமர்நாத் யாத்திரை பகுதியில் பலூன்கள், ட்ரோன்கள் பறக்க தடை

ஸ்ரீநகர்: அமர்நாத் குகைக் கோயிலுக்கு செல்லும் அனைத்து வழிகளையும் “பறப்பதற்கு தடை செய்யப்பட்ட பகுதி” களாக அறிவித்து ஜம்மு-காஷ்மீர் அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து ஜம்மு-காஷ்மீர் உள்துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை ஜூலை 3-ல் தொடங்கி ஆகஸ்ட் 8 உடன் நிறைவடைய உள்ளது. இதையடுத்து, யாத்திரைக்கான பாதுகாப்பை பலப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக அமர்நாத் யாத்திரை மேற்கொள்ளும் அனைத்து வழிகளிலும் பறப்பதற்கு தடை செய்யப்பட்ட பகுதிகளாக … Read more

‘இந்தியா – பாக். போரை நிறுத்தியது நான்தான்’ – மோடி உடன் பேசிய நிலையில் ட்ரம்ப் மீண்டும் விடாப்பிடி

வாஷிங்டன்: பிரதமர் நரேந்திர மோடி உடன் தொலைபேசியில் உரையாடிய நிலையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போரை நிறுத்தியது நான்தான் என அமெரிக்க அதிபர் டொனல்டு ட்ரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியை அற்புதமான மனிதர் என்றும், இரு நாடுகளும் வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ளும் என்று பத்திரிகையாளர் சந்திப்பில் அதிபர் ட்ரம்ப் கூறினார். அவர் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது: “இந்தியா – பாகிஸ்தான் போரை நிறுத்தியது நான்தான். நான் பாகிஸ்தானை நேசிக்கிறேன். பிரதமர் மோடி அற்புதமான மனிதர் என … Read more

ஸ்மார்ட்போன் விற்பனையில் ட்ரம்ப் குழுமம்: டி1 மொபைல் விலை, சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

நியூயார்க்: அமெரிக்க அதிபர் டொனல்டு ட்ரம்ப்பின் குடும்பத்தின் வணிக குழுமமான ட்ரம்ப் குழுமம் ஸ்மார்ட்போன் வணிகத்தில் நுழைந்துள்ளது. ட்ரம்ப் மொபைல் என்ற பெயரில் ஸ்மார்ட்போன் மற்றும் விர்ச்சுவல் நெட்வொர்க் ஆப்பரேட்டராக இந்த பிராண்ட் இயங்க உள்ளது. ட்ரம்ப் மொபைல் சார்பில் டி1 என்ற ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வரும் ஆகஸ்ட் மாதம் சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை அதிபர் ட்ரம்ப்பின் மகன்கள் டொனல்டு ட்ரம்ப் ஜூனியர் மற்றும் எரிக் ட்ரம்ப் இணைந்து அறிவித்துள்ளனர். கடந்த 2015-ல் … Read more

சையாரா படத்தின் 'தும் ஹோ தோ' காதல் பாடல் வெளியீடு

என்னுடைய பாடல்கள் தான் இசை கலைக்கு வர தூண்டியது என்று விஷால் மிஸ்ரா சொல்வதைக் கேட்டு வியப்பில் உள்ளேன் !’: சையாராவின் புதிய பாடலான ‘தும் ஹோ தோ’-ல் விஷால் மிஸ்ராவுடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சியடைகிறார் மோஹித் சூரி  

8 ஆம் வகுப்பு, 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் குட் நியூஸ்..!!

Tamil Nadu Govt Offers Free Vocational Training : 8 ஆம் வகுப்பு, 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசு மிக முக்கிய அறிவப்பை வெளியிட்டுள்ளது. தேவைப்படுபவர்கள் பயன்படுத்திக் கொள்ளவும். 

Ind vs Eng Test Series: இந்தியாவின் பிளேயிங் லெவன்.. ரவி சாஸ்திரி கணிப்பு!

இங்கிலாந்து – இந்தியா டெஸ்ட் தொடர் வரும் 20ஆம் தேதி வெள்ளிக்கிழமை தொடங்க உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த நிலையில், முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி முதல் போட்டிக்கான இந்திய பிளேயிங் லெவனை கணித்துள்ளார்.  இது குறித்து பேசிய முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, தொடக்க வீரராக ஜெஸ்வால் மற்றும் கே.எல். ராகுல் இருப்பார்கள். ஏனென்றால், ராகுலுக்கு இது ஒரு முக்கியமான சுற்றுப்பயணம் என நான் நினைக்கிறேன். அவர் அனுபவம் மிக்கவர். … Read more

தமிழகத்தில் கனிம சோதனை ஆய்வுகம் அமைக்க திருமாவளவன் வலியுறுத்தல்

சென்னை விசிக தலைவர் திருமாவளவன் தமிழ்கத்தில் கனிம சோதனை ஆய்வகம் அமைக்க வலியுறுத்தி உள்ளார். இன்று சென்னையில் கீழடி அகழாய்வு ஆய்வறிக்கையை அங்கீகரிக்க மறுத்த மத்திய அரசை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் உரையாற்றினார். திருமாவளவன் தனது உரையில். “தமிழகத்தில் கனிம சோதனைக்கான(Carbon Dating) ஆய்வகத்தை தமிழ்நாட்டில் அமைக்க வேண்டும். இதற்கான செலவு ரூ.40-45 கோடிதான் ஆகும். ஆய்வு செய்யப்பட வேண்டிய பகுதிகளில் நாம் அகழாய்வுகளை செய்து அறிக்கை தயார் செய்து … Read more

இந்தியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. அறிவிப்பை வெளியிட்ட நியூசிலாந்து!

அமெரிக்கா வெளிநாட்டவர்களை நாடு கடத்தி வரும் நிலையில், நியூசிலாந்து அரசு இந்தியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்துள்ளது. 

`விவசாயி வேடமிட்டு போலியாகத் திரிகிறார் முதல்வர் ஸ்டாலின்..!' – எடப்பாடி பழனிசாமி காட்டம்

தமிழகத்தில் இந்த ஆண்டு மாம்பழத்தின் விலையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டதாலும், மாம்பழக் கூழ் தயாரிக்க மாம்பழங்களை கொள்முதல் செய்வதில் பெரும் பின்னடைவு இருப்பதாலும் இதில் ஏற்பட்டுள்ள நஷ்டத்தை சரிகட்ட வேண்டுமென்று அரசுக்கு மனு அளித்தும், இதுவரை முறையான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என வரும் ஜூன் 20ம் தேதி அன்று நத்தம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் போராட்டம் நடைபெறும் என அதிமுக அறிவித்திருக்கிறது. மாம்பழம் இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “‘மா’ விவசாயிகள் விவகாரம் – … Read more