Ajith: "இது என் நேரம், நான் பின்வாங்க மாட்டேன்… ஏன் என்னால் முடியாது?" – அஜித் ஓப்பன் டாக்

அஜித் நடிப்பில் இந்த ஆண்டு இரண்டு படங்கள் வெளியாகிவிட்டன. கடந்த பிப்ரவரி மாதத்தில் அஜித் நடித்திருந்த ‘விடாமுயற்சி’ திரைப்படமும், ஏப்ரல் மாதத்தில் ‘குட் பேட் அக்லி’ திரைப்படமும் வெளியானது. அஜித் இப்போது தன்னுடைய அடுத்த திரைப்படம் குறித்த எந்த அறிவிப்பையும் வெளியிடாமல், முழுமையாக கார் ரேஸில் கவனம் செலுத்தி வருகிறார். ரேஸிங் களத்தில் ஆர்வம் செலுத்தத் தொடங்கியதும், கார் ரேஸ் தொடர்பாக சில ஊடகங்களுக்கு அஜித் பேட்டி அளித்து வருகிறார். அந்த வகையில், ‘ஆட்டோகார் இந்தியா’ என்ற … Read more

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிகை குறைந்துள்ளது

டெல்லி இந்தியாவில் கொரோனாவால் பாதிகப்பட்டோர் எண்ணிக்கை குறைந்து வருகிறது கடந்த சில மாதங்களாக இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் பரவி வருகிறது. மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரப்படி, நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் கரோனா தொற்றுக்கு 11 பேர் உயிரிழந்தனர்.  அதாவது கேரளாவில் 7 பேர், டெல்லி, மகாராஷ்டிரா, சத்தீஸ்கர் மற்றும் மத்திய பிரதேசத்தில் தலா ஒருவர் உயிரிழந்தனர். இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 108 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா … Read more

'மக்களை உளவு பார்க்கிறதா வாட்ஸ்ஆப்?' குற்றம்சாட்டும் ஈரான் – வாட்ஸ்ஆப்பின் ரியாக்‌ஷன் என்ன?

இஸ்ரேல் – ஈரான் இடையே கடுமையான தாக்குதல்கள் நடந்து வருகிறது. இந்த நிலையில், ஈரான் அரசு அதன் குடிமக்களிடம் வாட்ஸ்ஆப்பை அவர்களது ஸ்மார்ட் போன்களில் இருந்து டெலீட் செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளது. ஈரான் அரசு ஏன் கூறுகிறது? ‘எந்தவித உறுதியான ஆதாரமும் வழங்காமல், வாட்ஸ்ஆப் நிறுவனம் ஈரான் மக்களின் தரவுகளை சேகரித்து, அவற்றை இஸ்ரேலிடம் பகிர்ந்து வருகிறது’ என்று ஈரான் அரசு தொலைகாட்சியில் நேற்று மதியம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தான், ஈரான் மக்கள் தங்களது ஸ்மார்ட் போனில் இருந்து … Read more

டாஸ்மாக் வழக்கில் ஆகாஷ் பாஸ்கரன், ரவீந்திரனுக்கு எதிரான அமலாக்கத் துறை ஆவணங்கள் போதுமானது அல்ல: ஐகோர்ட்

சென்னை: டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரனுக்கு தொடர்பு இருப்பதாக அமலாக்கத் துறை சமர்ப்பித்துள்ள ஆவணங்கள் போதுமானதாக இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக எழுந்த புகார் தொடர்பாக திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். சோதனையின் முடிவில் விக்ரம் ரவீந்திரனின் வீடுகள் மற்றும் அலுவலகத்துக்கு … Read more

உக்ரைனில் ‘ஆபரேஷன் கங்கா’ போல ஈரானில் இருந்து இந்தியர்களை உடனடியாக மீட்க முடியாதது ஏன்?

புதுடெல்லி: போர்ச்சூழல் காரணமாக, ஈரானில் சிக்கியுள்ள இந்தியர்களை உடனடியாக வெளியேற்ற முடியாததன் பின்னணி தகவல்கள் வெளியாகி உள்ளன. உக்ரைனில் இருந்தது போன்ற சாதகமான சூழல் இல்லாததால் இந்தியர்கள் வெளியேறுவதில் சிக்கல்கள் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. ஈரானில் ஆயிரக்கணக்காக இந்திய மாணவர்கள் சிக்கித் தவிக்கின்றனர். ஈரானில் உள்ள சுமார் 10,000 இந்தியர்களில் 2,000 பேர் மாணவர்கள். சுமார் 6,000 பேர் நீண்ட காலமாக ஈரானில் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு அங்கு வசித்து வரும் இந்தியர்கள். இவர்களைத் தவிர, இந்திய மாலுமிகள் … Read more

‘வாட்ஸ்அப் செயலியை செல்போனிலிருந்து நீக்குங்கள்’ – குடிமக்களுக்கு ஈரான் அரசு உத்தரவு

தெஹ்ரான்: சமீப நாட்களில் சில உயர்மட்ட தலைவர்கள் படுகொலை மற்றும் மிகவும் துல்லிய தாக்குதல்களை எதிர்கொண்டுள்ள ஈரான், செல்போனிலிருந்து வாட்ஸ்அப் செயலியை நீக்கச் சொல்லி தனது குடிமக்களுக்கு உத்தரவிட்டுள்ளது. சமீபத்திய நாட்களில் ஈரானில் பல உயர்மட்ட தலைவர்கள் இஸ்ரேலால் படுகொலை செய்யப்பட்டனர். அதுபோல பல முக்கிய ராணுவ, அணுசக்தி மையங்களும் இஸ்ரேலால் துல்லியமாக தாக்கப்பட்டன. இந்தத் தாக்குதல்களின் துல்லியம் ஈரானிய அரசாங்கத்தை மட்டுமல்ல, உலக நாடுகளையே திகைக்க வைத்துள்ளது. இதனையடுத்து, ​​வாட்ஸ்அப் உட்பட சில செயலிகள் மற்றும் … Read more

இனி ரூ. 3000 செலுத்தினால் போதும்.. நாடு முழுக்க பயணம் செய்யலாம்.. வெளியாக முக்கிய அறிவிப்பு!

இந்தியாவில் பயணிகளுக்கான FASTag அடிப்படையிலான வருடாந்திர பாஸை இந்திய சாலை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் நிதின் கட்கரி இன்று (ஜூன் 18) அறிவித்தார்.

மெட்ராஸ் மேட்னி படக்குழுவினரின் நன்றி அறிவிப்பு விழா

தொடர்ந்து நூற்றுக்கணக்கான திரையரங்குகளில் ரசிகர்களின் பேராதரவுடன் இந்த படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. 

Kaali Venkat: "நான் அழுதிடவே கூடாதுன்னு நினைச்சேன்" – பட விழாவில் கலங்கிய காளி வெங்கட்

காளி வெங்கட், சத்யராஜ், ரோஷினி ஹரிப்ரியன் நடிப்பில் கடந்த ஜூன் 6-ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘மெட்ராஸ் மேட்னி’. திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற இத்திரைப்படத்திற்கு அடுத்தடுத்து ‘Word of Mouth’ மூலமாக பெரும் வரவேற்பு கிடைத்தது. படத்தின் வெற்றி விழா நேற்றைய தினம் சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் அனைவரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். Kaali Venkat காளி வெங்கட் பேசுகையில், “இந்த நிகழ்வு இதுவரை படத்திற்கு நீங்கள் கொடுத்த வரவேற்பிற்காக மட்டுமல்ல, இனிமேல் … Read more

கேரளாவில் வீடுகளில் புகுந்த கடல் நீர்

எர்ணாகுளம் கேரள மாநிலத்தில் கடல் நீர் வீடுகளுக்குள் புகுந்துள்ளது, தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதா; கேரளாவில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.  காசர்கோடு, கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருவதால் பாரதப்புழா, நீலேஸ்வரம், மணிமாலா உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எர்ணாகுளம் மாவட்டம் செல்லாளம் பகுதியில் கனமழை காரணமாக கடல் சீற்றம் ஏற்பட்டு, 500-க்கும் மேற்பட்ட வீடுகளில் கடல் நீர் புகுந்தது. கண்ணமாலை பகுதியில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் மார்பளவுக்கு … Read more