ஜார்க்கண்ட்: ஜாம்ஷெட்பூரில் வெள்ளத்தில் சிக்கிய பள்ளியில் இருந்து 162 குழந்தைகள் மீட்பு

ஜாம்ஷெட்பூர்: கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் உள்ள கோவாலி காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட லவ் குஷ் குடியிருப்புப் பள்ளியில் சிக்கித் தவித்த 162 குழந்தைகளை காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு மீட்டனர். இதுகுறித்து ஜாம்ஷெட்பூர் காவல்துறை வெளியிட்ட எக்ஸ் பதிவில், “கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக கோவாலி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட லவ் குஷ் குடியிருப்புப் பள்ளியில் சிக்கித் தவித்த 162 குழந்தைகளை ஜாம்ஷெட்பூர் காவல்துறையினர் வெற்றிகரமாக மீட்டு அவர்களது குடும்பத்தினரிடம் … Read more

477 ட்ரோன்கள், 60 ஏவுகணைகள் – உக்ரைன் மீது ரஷ்யா மிகப் பெரிய வான்வழித் தாக்குதல்!

கீவ்: உக்ரைனுக்கு எதிராக ஒரே இரவில் மிகப் பெரிய வான்வழித் தாக்குதலை ரஷ்யா நடத்தியது. இதில் 477 ட்ரோன்கள் மற்றும் 60 ஏவுகணைகள் உட்பட மொத்தம் 537 வான்வழி ஆயுதங்களை ரஷ்யா வீசியது. இந்த தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட 6 பேர் காயமடைந்தனர். இது குறித்து உக்ரைன் அதிபர் வொலொடிமிர் ஜெலன்ஸ்கி வெளியிட்ட எக்ஸ் பதிவில், “கிட்டத்தட்ட இரவு முழுக்க உக்ரைன் முழுவதும் வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை சைரன்கள் ஒலித்தன . 477 ட்ரோன்கள் மற்றும் … Read more

நிலத்தடி நீருக்கு வரிவிதிப்பது, தாய்ப்பாலுக்கு வரிவிதிப்பதற்கு ஒப்பானது! சீமான் காட்டம்

வேளாண்மைக்கு பயன்படும் நிலத்தடி நீருக்கு வரிவிதிப்பது, குழந்தை குடிக்கும் தாய்ப்பாலுக்கு வரிவிதிப்பதற்கு ஒப்பானது; இக்கொடுங்கோன்மை முடிவை பாஜக அரசு கைவிட வேண்டும் என சீமான் வலியுறுத்தி உள்ளார். 

வரும் ஆசிய கோப்பையில் ரோகித், கோலி இல்லை.. என்ன காரணம்?

ஆசிய கோப்பை கடைசியாக 2023ஆம் ஆண்டு ஓடிஐ தொடராக நடைபெற்றது. இந்த நிலையில், இந்த ஆண்டு ஆசிய கோப்பை வரும் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த மே மாதம் இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் ஏற்பட்டதால், இனி இரு நாடுகளுக்கும் இடையே போட்டிகள் நடைபெறாது என பரவலாக பேசப்பட்டு வந்தது.  தற்போது பதற்றம் தணிந்த நிலையில், நடக்க இருக்கும் ஆசிய கோப்பையில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் … Read more

இந்திய ரிசர்வ் வங்கி கையிருப்பில் வைத்துள்ள தங்கக் கட்டிகள் முதல்முறையாக பொதுமக்கள் பார்வைக்கு வந்தது…

வரலாற்றில் முதல்முறையாக, இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வைத்திருக்கும் தங்க இருப்புக்களை பொதுமக்கள் பார்க்க முடிந்துள்ளது. ஆம், ஜியோ ஸ்டுடியோஸ் தயாரித்து ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியான ‘RBI Unlocked: beyond the rupee’ என்ற ஆவணப்பட வலைத் தொடரில், ரிசர்வ் வங்கியின் ரகசிய தங்க இருப்புக்கள் பொதுமக்களுக்குக் காட்டப்பட்டுள்ளன. காணொளியில் குறிப்பிட்டுள்ளபடி, ரிசர்வ் வங்கியிடம் (சிறிய அளவிலான) தங்கக் கட்டிகள் வடிவில் உள்ள தங்கத்தை நாட்டு மக்களுக்குக் காண்பிப்பது இதுவே முதல் முறை. ரிசர்வ் வங்கியிடம் தற்போது … Read more

TMC: "ஹனிமூனிலிருந்து வந்ததும் ஆரம்பித்துவிட்டார்…" – மஹுவா மொய்த்ரா 'பர்சனலை' விமர்சித்த எம்.பி

திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மஹுவா மொய்த்ரா மற்றும் கல்யான் பானர்ஜி இடையே மீண்டும் பொதுவெளியில் மோதல் எழுந்துள்ளது. கொல்கத்தாவில் உள்ள கல்லூரியில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை நடந்ததாக வெளியான செய்தி மேற்கு வங்கம் மாநிலத்தில் பேச்சுபொருளாக உள்ளது. இது குறித்த கல்யாண் பானர்ஜியின் பதிவு ‘பெண் வெறுப்புடன்’ (மிஸோஜினிஸ்டிக்) இருப்பதாக மஹுவா மொய்த்ரா கூறியதுதான் சமீபத்திய சர்ச்சைக்கு காரணம். பானர்ஜியின் கருத்து குறித்து, “பெண் வெறுப்பு கட்சிகளைக் கடந்து இந்தியா முழுவதும் பரவியிருக்கிறது. … Read more

திருச்சியில் இருந்து கோவை வந்த மின்சார ஆம்னி பேருந்து தடுப்புச் சுவரில் மோதி தீக்கிரை

கோவை: திருச்சியில் இருந்து கோவை நோக்கி வந்த தனியார் மின்சார ஆம்னி பேருந்து, கருமத்தம்பட்டி அருகே தடுப்புச் சுவாில் மோதி விபத்தில் சிக்கியது. இதில் 17 பயணிகள் காயமடைந்தனர். திருச்சியில் இருந்து நேற்று (ஜூன் 28) இரவு 10.30 மணிக்கு மின்சார ஆம்னிப் பேருந்து கோவை நோக்கி புறப்பட்டது. பேருந்தை திருவண்ணாமலையைச் சேர்ந்த ஓட்டுநர் பசுபதி ஓட்டி வந்தார். பேருந்தில் 26 பயணிகள் இருந்தனர். இப்பேருந்து கருமத்தம்பட்டியைக் கடந்து, தனியார் உணவகம் அருகே இன்று (ஜூன் 29) … Read more

புரி கோயில் கூட்ட நெரிசல் உயிரிழப்பு: மாவட்ட எஸ்.பி, ஆட்சியர் பணியிட மாற்றம்

புரி: புரி ஜெகநாதர் கோயில் ரத யாத்திரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் பலியானதை தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர். புரி ஜெகநாதர் கோயில் ரத யாத்திரை நிகழ்வில் இன்று ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் பலியாகினர். சுமார் 50 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடைபெற்று வரும் நிலையில், புரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வினித் அகர்வால் மற்றும் … Read more

ஹிர்து ஹாரூன் நாயகனாக நடிக்கும் புதிய படம் “டெக்ஸாஸ் டைகர்”!!

ஃபேமிலி படம் இயக்குநர் செல்வகுமார் திருமாரன் இயக்கத்தில், ஹிர்து ஹாரூன் நடிக்கும் “டெக்ஸாஸ் டைகர்”!!  

வரதட்சணை கொடுமை.. புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு! திருப்பூரில் அதிர்ச்சி

திருப்பூரில் திருமணம் நடந்து 78 நாட்களே ஆன நிலையில், இளம் பெண் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.