பாகிஸ்தான் ராணுவ தளபதியை புகழ்ந்த காங். மன்னிப்பு கேட்க பாஜக வலியுறுத்தல்

புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் அண்மையில் கூறுகையில், “அமெரிக்க ராணுவ தினத்தை முன்னிட்டு வாஷிங்டனில் நடைபெறும் ராணுவ அணிவகுப்புக்கு பாகிஸ்தான் ராணுவ தளபதி அசீம் முனீர் அழைக்கப்பட்டுள்ளார். இது ராஜாங்க ரீதியாக இந்தியாவுக்கு மிகப் பெரிய பின்னடைவு” என்று குற்றம் சாட்டியிருந்தார். ஆனால் இது தவறான தகவல் என்று வெள்ளை மாளிகை மறுப்பு தெரிவித்தது. இந்நிலையில் பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே நேற்று டெல்லியில் கூறுகையில், “காங்கிரஸ் கட்சி மக்களை எவ்வாறு தவறாக வழிநடத்துகிறது … Read more

தமிழக அரசு வழங்கும் இலவச 3 சென்ட் வீட்டு மனை! யார் யாருக்கு கிடைக்கும்?

ஏழை குடும்பங்களுக்கு பல்வேறு அரசு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், புறம்போக்கு நிலத்தில் குடியிருப்பவர்களுக்கு இலவசமாக பட்டா வழங்கப்பட்டு வருகிறது. 

சிஎஸ்கே வீரர் வேண்டாம்! கேகேஆர் வீரருக்கு வாய்ப்பு! பாரபட்சம் காட்டும் கவுதம் கம்பீர்?

அதிகம் எதிர்பார்க்கப்படும் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் ஜூன் 20ஆம் தேதி லீட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதற்காக இந்திய அணி கடுமையான பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த மாதத்தின் தொடக்கம் முதலே அணி வீரர்கள் இங்கிலாந்தில் பயிற்சி பெற்று வருகின்றனர். இங்கிலாந்து A அணிக்கு எதிராக இரண்டு பயிற்சி ஆட்டம் நடைபெற்ற நிலையில்,  இந்திய அணி வீரர்களுக்கு உள்ளேயே ஒரு பயிற்சி ஆட்டமும் நடைபெற்றது. சுப்மான் கில் தலைமையில் … Read more

தேன் நிலவில் தொழில் அதிபரை தீர்த்து கட்டிய மனைவி; போலீசிடம் நடித்து காட்டினார்

கவுகாத்தி, மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த மே மாதம் ராஜா ரகுவன்ஷி மற்றும் சோனம் ஆகியோர் திருமணம் செய்து கொண்டனர். ராஜா தொழிலதிபர் ஆவார். மனைவியின் தந்தையும் தொழிலதிபராக உள்ளார். திருமணத்திற்கு பின்னர், அவர்கள் தேன் நிலவுக்காக சிரபுஞ்சிக்கு சென்றுள்ளனர். ஆனால், கடந்த மே 23-ந்தேதிக்கு பின்னர் இருவரின் செல்போன்களும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தன. அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்களுடைய குடும்பத்தினர் இதுபற்றி மத்திய பிரதேச போலீசில் புகார் அளித்தனர். இந்த தம்பதி … Read more

வாட்ஸ் அப் ஸ்டேடஸில் வருகிறது முக்கிய மாற்றம்: மெட்டா நிறுவனம் புதிய அப்டேட்

உலக அளவில் அதிக பயனர்கள் பயன்படுத்தும் செயலிகளில் ஒன்றாக வாட்ஸ் அப் உள்ளது. கடந்த 2009 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட வாட்ஸ் அப் எனப்படும் குறுஞ்செய்தி அனுப்பும் செயலியை பேஸ்புக்கின் மெட்டா நிறுவனம் 2014 ஆம் ஆண்டு வாங்கியது. அதன்பிறகு பயனர்களை கவரும் வகையில் பல்வேறு அப்டேட்களை வாட்ஸ் அப் மேற்கொண்டு வருகிறது. முதலில் குறுஞ்செய்தி மட்டும் பகிரும் வசதி இருந்தது. அதன்பிறகு இமேஜ்கள், வீடியோக்கள் உள்ளிட்டவற்றையும் பகிரும் வசதி கொண்டு வரப்பட்டது. அதேபோல, 60 வினாடிகள் … Read more

டாஸ்மாக் வழக்கில் ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ரவீந்திரனுக்கு எதிரான ஆவணங்களை தாக்கல் செய்ய கோர்ட் உத்தரவு

டாஸ்மாக் முறைகேடு வழக்கில் ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ரவீந்திரனுக்கு எதிரான ஆவணங்களை இன்று தாக்கல் செய்யுமாறு அமலாக்கத் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1,000 கோடி வரை முறைகேடு நடந்துள்ளதாக அமலாக்கத் துறை குற்றம் சாட்டியுள்ளது. இந்த முறைகேடுகளில் திரைப்படத் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறி, அவர்களின் வீடுகள், அலுவலகங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. மேலும், விக்ரம் ரவீந்திரனின் வீடு, அலுவலகத்துக்கு சீல் … Read more

விமான விபத்தில் உயிரிழந்தவர்களில் 64 பேரின் உடல்கள் உறவினரிடம் ஒப்படைப்பு

அகமதாபாத்: குஜ​ராத் மாநிலம் அகம​தா​பாத்​தில் நடந்த விமான விபத்தில் 241 பேர் தீயில் கருகி உயி​ரிழந்​தனர். அத்​துடன் அந்​தப் பகு​தி​யில் இருந்த மருத்​து​வக் கல்​லூரி மாணவர்​கள் உட்பட 33 பேர் உயி​ரிழந்​தனர். இதுகுறித்து அகம​தா​பாத் சிவில் மருத்​து​வ​மனை​யின் கூடு​தல் மருத்​துவ கண்​காணிப்​பாளர் டாக்​டர் ரஜ்னிஷ் படேல் நேற்று கூறும்போது, ‘‘டிஎன்ஏ பரிசோதனை​யில் இது​வரை 99 உடல் பாகங்​கள் அடை​யாளம் காணப்​பட்​டுள்​ளன. இது​வரை 87 பேரின் அடை​யாளம் தெரிய​வந்​துள்​ளது. இதில் 64 பேரின் உடல்​கள் உறவினர்​களிடம் ஒப்​படைக்​கப்​பட்​டுள்​ளன’’ என்றார். … Read more

கீழடியில் அகழாய்வு செய்த அமர்நாத் பணியிட மாற்றம்

சென்னை கீழடியில் அகழாய்வு மேற்கொண்ட அமர்நாத் ராமகிருஷ்ணா பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சிவகங்கை மாவட்டம் கீழடியில் கடந்த 2014-2016 வரை நடந்த முதல் மற்றும் இரண்டாம் கட்ட ஆய்வு மத்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளராக அமர்நாத் ராமகிருஷ்ணா பணியாற்றியிருந்தார்.இந்த கீழடி அகழாய்வு பணிகள் உலகம் அறிய முக்கிய காரணமாக இருந்தவர் தமிழகத்தைச் சார்ந்த தொல்லியல் அறிஞர் அமர்நாத் அமர்நாத் ராமகிருஷ்ணா ஆவார். கீழடியில் அவரது தலைமையிலான குழு ஆய்வு செய்த போது ஆயிரக்கணக்கான பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. … Read more

நீலகிரியில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

நீலகிரி மாவட்டத்தில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளின் மேல் நேற்று முன்தினம் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தென்மேற்கு வங்கதேசம் மற்றும் அதையொட்டிய மேற்கு வங்கப் பகுதிகளில் நேற்று காலை ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியது. இது மேற்கு – வடமேற்கு திசையில் … Read more

பிஹார் சட்டப் பேரவைத் தேர்தலில் வாக்காளர் செல்போன் பாதுகாக்க திட்டம்

புதுடெல்லி: பிஹார் சட்​டப் பேர​வைத் தேர்​தல் வரும் நவம்​பர் மாதம் நடை​பெறும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது. இதுகுறித்து தலை​மைத் தேர்​தல் ஆணை​யத்​தின் உதவி இயக்​குநர் அபூர்வ குமார் கூறிய​தாவது: பிஹார் தேர்​தலில் நாட்​டிலேயே முதன்​முறை​யாக வாக்​குச்​சாவடிக்கு வரும் வாக்​காளர்​களின் செல்​போன்​களை பாது​காத்து வைக்க முடிவு செய்​யப்​பட்​டுள்​ளது. இதை பிஹார் தேர்​தலில் அறி​முகம் செய்​ய​வுள்​ளோம். வாக்​குச்​சாவடிக்கு உள்ளே வரும் வாக்​காளர்​களிட​மிருந்து செல்​போன்​களை வாங்கி வைத்​துக் கொள்​வோம். அவர்​கள் வாக்​களித்து விட்டு வாக்​குச்​சாவடிக்கு வெளியே வரும்​போது அவர்​களது செல்​போன்​கள் திரும்ப ஒப்​படைக்​கப்​படும். … Read more