“அமித் ஷா கட்டுப்பாட்டில் தான் அதிமுக உள்ளது” – உதயநிதி பேச்சு

சிவகங்கை: அமித் ஷா கட்டுப்பாட்டில்தான் அதிமுக உள்ளது என துணை முதல்வர் உதயநிதி தெரிவித்தார். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தலைமையில் நடைபெற்ற சார்பு – அணிகள் கூட்டத்தில் உதயநிதி பேசியது: “தேர்தல் நேரங்களில் ஐடி அணியினர் மிக சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். திமுகவில் 25 அணிகள் உண்டு. ஆனால் அதிமுகவே 25 அணிகளாக பிரிந்து விட்டது. அக்கட்சி நிர்வாகிகள் பழனிசாமிக்கு கட்டுப்படுவதில்லை. தற்போது அமித் ஷா கட்டுப் பாட்டில் தான் அதிமுக உள்ளது. பாஜக … Read more

உ.பி உடன் ஈரானின் கோமெய்னிக்கு தொடர்பு: 19-ம் நூற்றாண்டில் இடம்பெயர்ந்த மூதாதையர்!

புதுடெல்லி: ஈரானில் மறைந்த பெரும் தலைவர் அதிபர் அயத்துல்லா ருஹோல்லா கோமெய்னிக்கு உத்தரப் பிரதேசத்துக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. உ.பி.யின் பாராபங்கியின் கிராமத்திலிருந்து அவரது மூதாதையர் 19-ஆம் நூற்றாண்டில் இடம்பெயர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. 70-களின் பிற்பகுதியில் ஈரானின் அரசியலுக்கு ஒரு புதிய திசையை வழங்கிய தலைவர் அயத்துல்லா ருஹோல்லா கோமெய்னி. அந்நாட்டில் இஸ்லாமியப் புரட்சிக்கு காரணமாக இருந்தவர் இந்த ருஹோல்லாதான். தற்போது, இஸ்ரேலுடன் ஈரானுக்கு நடைபெறும் போருக்கு இடையே கோமெய்னி ஒரு வெளிநாட்டவர் எனும் சர்ச்சை … Read more

இஸ்ரேலின் டெல் அவிவில் ‘மொசாட்’ மையத்தை தாக்கியதாக ஈரான் தகவல்

தெஹ்ரான்: டெல் அவிவில் உள்ள இஸ்ரேலின் உளவுத்துறை அமைப்பான மொசாட் (Mossad) மையத்தைத் தாக்கியதாக ஈரான் ராணுவம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் ஈரான் இடையே 5-வது நாளாக அதிகரித்து வரும் வான்வழிப் போருக்கு மத்தியில், இன்று டெல் அவிவில் உள்ள இஸ்ரேலின் வெளிநாட்டு உளவுத்துறை அமைப்பான மொசாட்டின் மையத்தைத் தாக்கியதாக ஈரானின் புரட்சிகர காவல் படை தெரிவித்துள்ளது. ஈரான் அரசு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இதுகுறித்த அறிக்கையில், “இஸ்ரேலின் சியோனிச ஆட்சி ராணுவத்தின் ராணுவ புலனாய்வு மையமான அமானையும், டெல் … Read more

அதிர வைக்கும் சம்பவங்களுடன் பிரியாமணியின் ‘Good Wife’ டீசர் வெளியீடு!

ரேவதி இயக்கத்தில் நடிகர்கள் பிரியாமணி மற்றும் சம்பத் ராஜ் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘குட் வொய்ஃப்’ சீரிஸின் டீசரை ஜியோஹாட்ஸ்டார் வெளியிட்டுள்ளது!

சாதிவாரி கணக்கெடுப்பு: ஒரு பிரத்தியேக ஆணையம் அல்லது குழு அமைக்க வேண்டும் – விஜய் வலியுறுத்தல்!

ஒன்றிய அரசு நடத்தும் மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் சேர்ந்த சாதிவாரிக் கணக்கெடுப்பானது உண்மையான சமூக நீதியை நிலைநாட்டுவதாக இருக்க வேண்டும். தமிழ்நாடு அரசு ஒவ்வொரு வகுப்புக்குமான விகிதாசாரப் பிரதிநிதித்துவம் மற்றும் அவர்களின் சமூக நிலை குறித்த சாதிவாரிக் கணக்கெடுப்பு ஆய்வினை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வலியுறுத்தி உள்ளார்.

இனி டெஸ்ட் போட்டிகள் 5 நாள்கள் இல்லை… ஐசிசி எடுத்த அதிரடி முடிவு!

Cricket News In Tamil: 2023-2025 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சி கடந்த ஜூன் 13ஆம் தேதியோடு நிறைவடைந்தது. இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று தென்னாப்பிரிக்கா ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது. இன்று முதல் தொடங்கிய 2025-27 WTC சுழற்சி…  அதைத் தொடர்ந்து, தற்போது 2025-27 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியின்ஷிப் சுழற்சி இன்று (ஜூன் 17) முதல் தொடங்கியது. இலங்கையில் நடைபெறும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் … Read more

Coolie: “வில்லன் கதாபாத்திரத்திற்காக லோகேஷ் என்னிடம் வந்தபோது நான் சொன்ன விஷயம்!..'' – நாகர்ஜூனா

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் ‘கூலி’ திரைப்படம் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகவிருக்கிறது. ஆதலால், தற்போது ‘கூலி’ படத்தின் இறுதிகட்டப் பணிகளில் பிஸியாக இயங்கி வருகிறார் லோகேஷ். படத்தில் ரஜினியுடன் நாகார்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா, செளபின் சாஹிர் ஆகியோர் நடித்திருக்கின்றனர். ‘கூலி’ ரஜினி ‘கூலி’ படத்தில் கேமியோ செய்திருப்பதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் ஆமீர் கான் பகிர்ந்திருந்தார். அதைத் தொடர்ந்து, ‘குபேரா’ படத்திற்காக நாகார்ஜுனா ‘தி ஹாலிவுட் ரிப்போர்டர்’ ஊடகத்தின் இந்தியப் பதிப்பிற்கு அளித்த … Read more

சதாம் ஹுசைனுக்கு ஏற்பட்ட அதே கதி கமேனிக்கும் ஏற்படும் : ஈரானுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை

ஈராக்கிய சர்வாதிகாரி சதாம் உசேனுக்கு ஏற்பட்ட அதே கதிதான் ஈரானிய உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கும் ஏற்படும் என்று இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் எச்சரித்துள்ளார். இஸ்ரேலிய இராணுவம் மற்றும் பாதுகாப்பு சேவைகளின் தளபதிகளுடனான சந்திப்பில் பேசிய காட்ஸ், “இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் போல நடந்து கொண்ட அண்டை நாட்டின் சர்வாதிகாரிக்கு என்ன நடந்தது என்பதை நினைவில் கொள்வோம்” என்று அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது. “போர்க்குற்றங்களைச் செய்து இஸ்ரேலிய பொதுமக்களுக்கு எதிராக தொடர்ந்து ஏவுகணைத் … Read more

கொள்ளுத் தாத்தா பிறந்த நாள் முதலே… கலைஞர் தொலைக்காட்சி நிர்வாகத்தில் இன்பநிதி!

கடந்த ஜூன் 3ம் தேதி தனது கொள்ளுத் தாத்தாவின் பிறந்த நாளில் இருந்து கட்சி தொலைக்காட்சி தொடர்பான தன் பணியைத் தொடங்கி இருக்கிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் பேரனும்  தமிழக துணை முதல்வர் உதயநிதியின் மகனுமான இன்பநிதி என்கிற தகவல் வெளியாகி இருக்கிறது. அண்ணா அறிவாலய வளாகத்திலிருக்கும் கட்சியின் அதிகாரபூர்வ தொலைக்காட்சியான கலைஞர் தொலைக்காட்சி அலுவலகத்தில் இன்பநிதிக்குத் தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளாதாகச்  சொல்கிறார்கள். அங்கு அவர் சேனலின் நிதி தொடர்பான ஒரு பிரிவில் தற்போது பணிகளை கவனிப்பதாகவும் சொல்லப்படுகிறது. கலைஞர் கருணாநிதி முன்னாடி முரசொலி… … Read more

வடகலை, தென்கலை… ஒரு பூ காம்பில் உள்ள இரு இதழ்கள்: உயர் நீதிமன்றம் கருத்து

சென்னை: வடகலை, தென்கலை இரண்டும் ஒரு பூ காம்பில் உள்ள இரு இதழ்கள் எனத் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், குருக்களின் பெயரில் மோதலில் ஈடுபடுவதை நிறுத்த வேண்டும் என இரு பிரிவினருக்கும் அறிவுரை வழங்கியுள்ளது. காஞ்சிபுரத்தில் உள்ள 18 திவ்யதேசங்களில் ஒன்றான சின்னகாஞ்சி விளக்கொளி பெருமாள் எனும் தீபப்பிரகாசர் கோயில் விழாக்களின் போது, கோயிலுக்கு வெளியில் தென்கலை மந்திரம் பாடவும், தென்கலை வாழி திருநாமம் பாடவும் அனுமதி மறுத்த கோயில் செயல் அலுவலர் உத்தரவை எதிர்த்து, … Read more