இஸ்ரேல் – ஈரான் போர்: எரியும் தீயில் ட்ரம்ப் எண்ணெய் ஊற்றுவதாக சீனா குற்றச்சாட்டு

பெய்ஜிங்: இஸ்ரேல் – ஈரான் போர் வலுத்து வரும் சூழலில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எரியும் தீயில் எண்ணெய் ஊற்றுவதாக சீனா குற்றம் சாட்டியுள்ளது. இஸ்ரேல் – ஈரான் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், ஈரான் தலைநகர் தெஹ்ரானை விட்டு அனைவரும் உடனடியாக வெளியேற வலியுறுத்தி சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். ட்ரம்ப் வெளியிட்ட பதிவில், “நான் கையெழுத்திடச் சொன்ன ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட்டிருக்க வேண்டும். எவ்வளவு … Read more

ஜம்மு காஷ்மீர் அமர்நாத் யாத்திரை செல்கிறீர்களா ? முக்கிய உத்தரவு.. மக்களே எச்சரிக்கை

Amarnath Yatra 2025 Guidelines: ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை அனைத்து அமர்நாத் யாத்திரை வழித்தடங்களையும் ‘டிரோன்கள்  மற்றும்  பலூன்கள் பறக்க தடை மண்டலம்’ என ஜம்மு காஷ்மீர் அரசு அறிவித்துள்ளது.

ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்.. வீடு வீடாக விநியோகிக்கும் சேவையை தொடங்கும் தமிழக அரசு

PwDs Ration Card News: முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு பொது விநியோக திட்டத்தின் மூலம் வீடு வீடாக அத்தியாவசியப் பொருட்களை வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு தொடங்க உள்ளது.

விஜய் சேதுபதி – பூரி ஜெகன்நாத் படம்: விரைவில் சென்னை ஷூட்டிங்; படத்தில் இணைந்த கன்னட பிரபலம் யார்?

விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த மாதம் ‘ஏஸ்’ திரைப்படம் வெளியாகியிருந்தது. இத்திரைப்படத்தைத் தொடர்ந்து, இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் அவர் நடித்திருக்கும் ‘தலைவன் தலைவி’ திரைப்படம் ஜூலை மாத ரிலீஸுக்குத் தயாராகி வருகிறது. இதைத் தாண்டி, மிஷ்கின் இயக்கத்தில் அவர் நடித்திருக்கும் ‘டிரெயின்’ படத்தின் பணிகளும் ஒரு புறம் நடைபெற்று வருகின்றன. Samyuktha in Puri Jaganandh – Vijay Sethupathi Film மேலும், பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கவிருக்கும் திரைப்படம் தொடர்பான அறிவிப்பு சில … Read more

வெடிகுண்டு மிரட்டலால் டெல்லி புறப்பட்ட விமானம் நாக்பூரில் தரையிறக்கம்

நாக்பூர் வெடிகுண்டு மிரட்டல் காரணமாக டெல்லிக்கு புறப்பட்ட விமானம் நாக்பூரில் தரையிறக்கப்பட்டுள்ளது. இன்று காலை ஓமன் நாட்டில் தலைநகர் மஸ்கட்டில் இருந்து கேரளாவின் கொச்சிக்கு இண்டிகோ விமானம் வந்து அந்த விமானம் பின்னர் கோச்சியில் இருந்து டெல்லி புறப்பட்டது. கொச்சி விமான நிலையத்தில் இருந்து காலை 9.31 மணிக்கு டெல்லிக்கு புறப்பட்ட அந்த விமானத்தில் 157 பயணிகள், 6 விமான பணியாளர்கள் என மொத்தம் 163 பேர் பயணித்தனர். மகாராஷ்டிர மாநில வான் எல்லையில் பறந்துகொண்டிருந்தபோது விமானத்திற்கு … Read more

ஜூலை 5இல் சுனாமி… சொல்வது 'புதிய பாபா வாங்கா' – 2011 ஜப்பான் சுனாமியை கணித்தவர்!

New Baba Vanga Prediction: வரும் ஜூலை மாதம் ஜப்பானில் சுனாமி ஏற்பட உள்ளதாக புதிய பாபா வாங்கா என்பவரின் கணித்துள்ளார். இந்த கணிப்பால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

விகடன் செய்தி எதிரொலி: கோவை பாம்பு பிடி வீரர் சந்தோஷ் குடும்பத்துக்கு அரசு வீடு; உதவிய நல்லுள்ளங்கள்

கோவை வடவள்ளி பகுதியைச் சேர்ந்தவர் பாம்பு பிடி வீரர் சந்தோஷ்குமார். இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த மார்ச் மாதம் சந்தோஷ் ஒரு வீட்டுக்குள் புகுந்த நாகப்பாம்பை பிடிக்கும்போது, எதிர்பாராத விதமாக அவரைக் கடித்துவிட்டது. கோவை பாம்பு பிடி வீரர் சந்தோஷ் குமார் மிகவும் ஆபத்தான நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சந்தோஷ் கடந்த மார்ச் 19-ம் தேதி உயிரிழந்தார். அந்த குடும்பம் சந்தோஷின் வருமானத்தை மட்டுமே சார்ந்திருந்தது. அவரின் மறைவால் குடும்பத்தினர் … Read more

ராமேசுவரம் நம்புநாயகி அம்மன் கோயிலில் மகள்களுடன் சவுமியா அன்புமணி நேர்த்திக்கடன்

ராமேசுவரம்: பாமக கட்சியின் பரபரப்பான கோஷ்டி மோதலுக்கு இடையே ராமேசுவரம் நம்புநாயகி அம்மன் கோயிலில் சவுமியா அன்புமணி தனது இரு மகள்களுடன் நேர்த்திக்கடன் செலுத்தினார். பாமகவில் நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி இடையேயான மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. கட்சிப் பொருளாளர் திலகபாமா, சமூக நீதி பேரவைத் தலைவர் வழக்கறிஞர் பாலு மற்றும் 60 மாவட்டத் தலைவர்கள், செயலாளர்களை ராமதாஸ் நீக்கியுள்ளார். அன்புமணியுடன் சென்ற மாநிலப் பொதுச் செயலாளர் வடிவேல் ராவணனை கட்சிப் பதவியில் இருந்து … Read more

கர்நாடக மாநிலத்தில் மீண்டும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்: முதல்வர் சித்தராமையா தகவல்

பெங்களூரு: கர்நாடகாவில் மீண்டும் புதிதாக சா​தி​வாரி கணக்​கெடுப்பு நடத்த உத்​தர​விடப்​பட்​டுள்​ளது என முதல்​வர் சித்​த​ராமையா தெரி​வித்​தார். கர்​நாட​கா​வில் கடந்த 2015-ம் ஆண்டு பிற்​படுத்​தப்​பட்​டோர் ஆணை​யத்​தின் சார்​பில் ரூ.162 கோடி செல​வில் சாதி​வாரி மக்​கள் தொகை கணக்​கெடுப்பு நடத்​தப்​பட்​டது. அதில் மக்​களின் சமூக, பொருளா​தார, கல்வி குறித்த விவரங்​கள் திரட்​டப்​பட்​டன. அந்த அறிக்கை தாக்​கல் செய்​யப்​பட்​டு, அதனை ஏற்​ற​தாக அரசாணை வெளி​யிடப்​பட்​டது. அதற்கு ஒக்​கலி​கா, லிங்​கா​யத்து போன்ற சாதி​கள் எதிர்ப்பு தெரி​வித்​த​தால், அதன் விவரங்​கள் வெளி​யிடப்​பட​வில்​லை. இந்​நிலை​யில் கர்​நாடக … Read more

''ஈரான் ராணுவத் தளபதி அலி ஷத்மானி கொல்லப்பட்டார்'' – இஸ்ரேல் ராணுவம் அறிவிப்பு

டெல் அவிவ்: தெஹ்ரானில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஈரானின் போர்க்கால தலைமைத் தளபதியும், ஈரானிய உச்சத் தலைவர் அலி கமேனிக்கு மிக நெருக்கமானவருமான அலி ஷத்மானியைக் கொன்றதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. ஈரானில் புதிதாக நியமிக்கப்பட்ட உயர் ராணுவ தளபதி அலி ஷத்மானியை கொன்றுவிட்டதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் அறிவித்தன. இதுகுறித்து இஸ்ரேல் பாதுகாப்புப் படை வெளியிட்ட செய்திக்குறிப்பில், “ஈரானின் போர்க்கால தலைமைத் தளபதியும், ஆட்சியின் உயர் ராணுவத் தளபதியுமான அலி ஷத்மானி, துல்லியமான உளவுத்துறை தகவல்களை தொடர்ந்து, மத்திய … Read more