நீண்ட நாள் சோனம் தலைமறைவாக இருக்க ஆன்லைனில் மளிகை ஆர்டர் செய்த காதலன்

ஷில்லாங்: மேகாலயாவில் தேனிலவு கொண்டாட சென்றபோது கணவனை காதலருடன் சேர்ந்து மனைவியே கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், சோனம் ரகுவன்சி தனது கணவன் ராஜா ரகுவன்சியை கொலை செய்துவிட்டு காதலர் ராஜ் குஷ்வாகாவுடன் தலைமறைவாக இருந்தபோது ரூ.5,000 ரூபாய்க்கு மளிகை பொருட்களை ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கிய சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சோனம்-ராஜா ரகுவன்சி திருமணம் கடந்த மே 11-ம் தேதி நடைபெற்றது. மே 20-ல் தேனிலவு கொண்டாட … Read more

மகளிர் உரிமைத் தொகை! யார் யார் விண்ணப்பிக்கலாம்? முக ஸ்டாலின் அறிவிப்பு!

தமிழக அரசின் பல்வேறு திட்டங்களில் எவ்வாறு விண்ணப்பிப்பது, அதன் மூலம் எப்படி பயன் பெறுவது என்ற கேள்விகளும் சந்தேகமும் இருந்தால் உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் அதற்கான பதில்கள் அளிக்கப்படும்.

பயிற்சி ஆட்டத்தில் 2 முக்கிய வீரர்களுக்கு காயம்! மாற்று வீரர்கள் இவர்கள் தான்!

ஐபிஎல் தொடரில் சில போட்டிகளில் விளையாடியிருந்தாலும் மும்பையை சேர்ந்த ஆயுஷ் மாத்ரே அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். தற்போது இந்திய அணி U 19 அணியின் கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டுள்ளார். அவரது தலைமையில் இந்திய U 19 அணி ஐந்து ஒருநாள் போட்டி மற்றும் குறைந்த நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து U 19 அணிக்கு எதிராக வரும் ஜூன் 24ஆம் தேதி முதல் ஜூலை 23ஆம் தேதி வரை விளையாட உள்ளனர். இந்நிலையில் இதற்கான பயிற்சியில் ஈடுபட்டு … Read more

இன்று முதல் பாம்பன், மண்டபம் கடலில் மீன் பிடிக்க அனுமதி

ராமேஸ்வரம் மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்ததால் இன்று முதல் பாம்பன், மண்டபம் கடலில் மீன் பிடிக்க மீனவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 15-ந்தேதி முதல் ஜூன் 14-ந்தேதி வரை தமிழகம் முழுவதும் கடலுக்கு சென்று மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டு இருந்ததால் ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான விசைப்படகுகள் கடந்த 2 மாத காலமாக மீன்பிடிக்க செல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த மீன்பிடி தடைக்காலம் கடந்த 14-ந் தேதி அன்று நள்ளிரவு 12 மணியுடன் முடிவடைந்தது. ஆனால் தடைக்கால … Read more

விமான விபத்தில் உயிரிழந்த விஜய் ரூபானியின் உடல் தகனம்

அகமதாபாத், அகமதாபாத்தில் கடந்த 12-ந்தேதி ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில், விமானத்தில் பயணம் செய்த 241 பேரும், விடுதி பகுதியில் இருந்த 29 பேரும் உயிரிழந்தனர். விமானத்தில் இருந்த ஒரு பயணி மட்டுமே காயங்களுடன் உயிர் தப்பினார். உடல்களை அடையாளம் காண்பதில் ஏற்பட்ட சிரமங்களால், உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களிடமிருந்து டிஎன்ஏ மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. இதுவரை 76 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. உயிரிழந்த விமான பயணிகளில் முன்னாள் குஜராத் முதல் மந்திரி விஜய் ரூபானியும் … Read more

டி.என்.பி.எல்.: சேப்பாக் சூப்பர் கில்லீசுக்கு எதிராக டாஸ் வென்ற திண்டுக்கல் பந்துவீச்சு தேர்வு

சேலம், 8 அணிகள் இடையிலான 9-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் கோவையில் கடந்த 5-ந் தேதி தொடங்கியது. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும். இந்த தொடரின் முதற்கட்ட லீக் ஆட்டங்கள் கோவையில் நடந்து முடிந்தன. இதனையடுத்து 2-வது கட்ட லீக் ஆட்டங்கள் சேலத்தில் நடைபெற்று வருகின்றன. இந்த தொடரில் இன்று நடைபெறும் … Read more

அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து விலக ஈரான் முடிவு

தெஹ்ரான், இஸ்ரேல், ஈரான் போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது. அமைதி பேச்சுவார்த்தைக்கு ஈரான் மறுத்துவிட்டதோடு, இஸ்ரேல் நடத்திவரும் அதிரடி தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. இந்நிலையில், அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதற்காக மசோதாவை தயாரிக்க ஈரான் நடாளுமன்றம் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனை ஈரான் வெளியுறவு மந்திரி இஸ்மாயில் பகாயி உறுதிப்படுத்தி உள்ளார். ஆனாலும் பேரழிவு ஆயுதங்களை தெஹ்ரான் தயாரிப்பதை எதிர்த்து வருவதாக தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் அந்நாட்டு அதிபர் … Read more

பாதுகாப்பை சீர்குலைத்த பழனிசாமி திமுக அரசை குறை கூறலாமா? – அமைச்சர் சிவசங்கர் விமர்சனம்

சென்னை: தமிழகத்தின் பாதுகாப்பை சீர்குலைத்து ஆட்சி நடத்திய பழனிசாமிக்கு திமுக அரசை குறை கூற அருகதை கிடையாது என்று அமைச்சர் சிவசங்கர் விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பாமக இளைஞரணி மாவட்டச் செயலாளர் சக்கரவர்த்தி துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டது குறித்து, எதிர்க்கட்சித் தலைவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழகத்தின் பாதுகாப்பை சீர்குலைத்து ஆட்சி நடத்திய பழனிசாமிக்கு திமுக அரசை குறை கூற அருகதை கிடையாது. சக்கரவர்த்தி வழக்கில் சம்பவம் நடந்த 3-வது நாளே … Read more

பாத்திரம் கழுவும் தொழிலாளியின் மகன் நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று சாதனை

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் பாத்திரம் கழுவும் தொழிலாளியின் மகன் நீட் தேர்வில் ஓபிசி பிரிவில் 4071 இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார். அவருக்கு அரசு மருத்துவக் கல்லூரியில் சீட் கிடைப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ராஜஸ்தானின் பலோத்ரா நகர் அருகில் உள்ள கட்டோ கிராமத்தைச் சேர்ந்தவர் ஷ்ரவன் குமார் (19). இவரது பெற்றோர் திருமணம் மற்றும் இதர விழாக்களில் பாத்திரம் கழுவும் தொழிலாளிகளாக பணியாற்றுகின்றனர். அதோடு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் கிடைக்கும் பணிகளிலும் அவ்வப்போது … Read more

விமான விபத்தில் பலியான முன்னாள் முதல் மந்திரி விஜய் ரூபானி உடலுக்கு அமித்ஷா அஞ்சலி

ஆமதாபாத், குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கீழே விழுந்து தீப்பற்றி எரிந்து உருக்குலைந்தது. விமானத்தில் பயணித்த 241 பேர் உயிரிழந்தனர். இதில் குஜராத் முன்னாள் முதல்-மந்திரி விஜய் ரூபானியும் பலியானார்.உயிரிழந்தவர்களின் உடல்களில் பல அடையாளம் காண முடியாத அளவுக்கு உருக்குலைந்ததால், டி.என்.ஏ. சோதனைகள் மூலம் அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை 92 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. அவற்றில் 47 உடல்கள் அவர்களது … Read more