சைப்ரஸ் நாட்டின் உயரிய விருது வழங்கி பிரதமர் மோடிக்கு கவுரவம்

கனடா நாட்டின் கனனாஸ்கிஸ் நகரில் ஜி-7 உச்சி மாநாடு நடக்கிறது. நேற்று தொடங்கிய இம்மாநாடு, 17-ந் தேதி வரை நடக்கிறது. கனடா பிரதமர் மார்க் கார்னி அழைப்பின்பேரில், இந்த மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். முன்னதாக பிரதமர் மோடி, சைப்ரஸ், குரோஷியா ஆகிய நாடுகளுக்கும் செல்ல திட்டமிட்டு இருந்தார். முதலில் அவர் சைப்ரஸ் நாட்டுக்கு சென்றடைந்தார். தலைநகர் நிகோசியாவில் உள்ள விமான நிலையத்தில் அவரை சைப்ரஸ் அதிபர் கிறிஸ்டோடவுலிட்ஸ் வரவேற்றார். கடந்த 20 ஆண்டுகளில் சைப்ரஸ் … Read more

தமிழகம் முழுவதும் ஜூலை 15 முதல் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள்: முதல்வர் அறிவிப்பு

பொதுமக்களின் குறைகளை தீர்க்கும் வகையில் தமிழகம் முழுவதும் ஜூலை 15-ம் தேதி முதல் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் நடத்தப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் நேற்று நடைபெற்ற விழாவில், முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு, ரூ.325.96 கோடி மதிப்பிலான 2,461 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தார். ரூ.309.48 கோடி மதிப்பிலான 4,127 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். 2.25 லட்சம் பேருக்கு ரூ.558.43 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை … Read more

குஜராத் விமான விபத்து வீடியோவை தற்செயலாக வீடியோ எடுத்த சிறுவன் அதிர்ச்சி

அகமதாபாத்: குஜராத் விமான விபத்து காட்சியை செல்போனில் தற்செயலாக படம் பிடித்த சிறுவன் தீப்பிழம்பை பார்த்து அதிர்ச்சியடைந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையம் அருகே ஏர் இந்தியாவின் போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விமானம் தாழ்வாக பறந்து விழுந்து தீப்பிழப்பு ஏற்பட்ட வீடியோ காட்சி உலகம் முழவதும் வைரலாக பரவியது. அந்த வீடியோவை செல்போனில் எடுத்தது அகமதாபாத் விமான நிலையம் அருகே வாடகை வீட்டில் குடியிருக்கும் 17 வயது சிறுவன் … Read more

ஈரான் அரசு தொலைக்காட்சி அலுவலகம் மீது இஸ்ரேல் தாக்குதல் – நேரலையில் அதிர்ந்த கட்டிடம்

டெல் அவிவ் / தெஹ்ரான்: ஈரான் மீது தீவிர தாக்குதலை மேற்கொண்டுள்ளது இஸ்ரேல் ராணுவம். இதில், ஈரான் நாட்டின் அரசு தொலைக்காட்சி ஊடக நிறுவனமான ஈரானின் இஸ்லாமிய குடியரசு நியூஸ் நெட்வொர்க் அலுவலகம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலின்போது கட்டிடம் அதிர்ந்து கரும்புகை எழுந்தது, அந்த தொலைகாட்சி நிறுவனத்தின் ஸடூடியோவில் நேரலை நிகழ்ச்சியில் பதிவானது. முன்னதாக, இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், ஈரானின் அரசு ஊடகத்துக்கு சொந்தமான தொலைகாட்சி, வானொலி நிலையம் … Read more

அடுத்த நிதியாண்டில் 24 பெட்டிகளுடன் ஸ்லீப்பர் வந்தே பாரத் ரயில் தயாரிக்கப்படும்: ஐசிஎஃப் அதிகாரிகள் தகவல்

அடுத்த நிதியாண்டில், 24 பெட்டிகளை கொண்ட தூங்கும் வசதி (ஸ்லீப்பர்) வந்தே பாரத் ரயில்கள் தயாரிப்பு பணியைத் தொடங்க சென்னை ஐசிஎஃப் திட்டமிட்டுள்ளது. உலகப் புகழ்பெற்ற ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலைகளில் ஒன்றாக சென்னை பெரம்பூர் ஐ.சி.எஃப். தொழிற்சாலை திகழ்கிறது. இங்கு பல்வேறு வகைகளில் 73 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரயில் பெட்டிகள் தயாரித்து வழங்கப்பட்டுள்ளன. இந்திய ரயில்வேக்கு மட்டுமின்றி பல்வேறு வெளிநாடுகளுக்கும் ரயில் பெட்டிகள் தயாரித்து வழங்கப்படுகின்றன. சில ஆண்டுகளாக அதிநவீன வந்தே பாரத் ரயில் தயாரிப்பில் … Read more

ஜம்மு காஷ்மீரில் 2 மாதங்களுக்கு பிறகு சுற்றுலா தலங்கள் நாளை முதல் திறக்கப்படும்: ஆளுநர் மனோஜ் சின்ஹா தகவல்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் 2 மாதங்களுக்கு பிறகு சுற்றுலா தலங்கள் நாளை முதல் திறக்கப்படும் என துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். இதையடுத்து, மாநிலம் முழுவதும் உள்ள சுற்றுலா தலங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தற்காலிகமாக மூடப்பட்டன. இதனால், காஷ்மீருக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டிருந்தவர்கள் தங்கள் பயணத்தை ரத்து செய்தனர். இதனால் அம்மநில சுற்றுலாத் துறை கடுமையாக … Read more

“இஸ்ரேல் உடனான போரில் ஈரான் வெற்றிபெறாது” – டொனால்ட் ட்ரம்ப் உறுதி

இஸ்ரேல் உடனான போரில் ஈரான் வெற்றிபெறாது என்று ஜி7 உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஜி7 உச்சி மாநாடு 2025 கனடாவில் நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். ட்ரம்ப் இஸ்ரேல் நாட்டுக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர், “இந்தப் போரில் ஈரான் வெற்றி பெறாது என்று நான் உறுதியாக கூறுகிறேன். அவர்கள் பேச்சுவார்த்தை … Read more

டாஸ்மாக் கடைக்கு எதிரான போராட்டத்தை குற்றச் செயலாக கருத முடியாது! வழக்கை ரத்து செய்தது உயர் நீதிமன்றம்

மதுரை: டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தை குற்றச்செயலாக கருத முடியாது என்று கூறி. போராட்டத்தில் ஈடுபட்ட  ‘மக்கள் அதிகாரம்’ அமைப்பினர் மீதான வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடலுர் மாவட்டம் சிதம்பரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி கடந்த 2016-ம் ஆண்டு மே மாதம் ‘மக்கள் அதிகாரம்’ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போரட்டம் உரிய அனுமதியின்றி நடத்தப்பட்டதாவும் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்ததாகவும் கூறி மக்கள் அதிகாரம் … Read more

இன்றைய ராசிபலன் | Indraya Rasi palan | June 17 | Today Rasi palan | Astrology | Bharathi Sridhar

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் பாரதி ஶ்ரீதர். Source link

கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு

கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் அதிகபட்சமாக 29 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று (ஜூன் 17) இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் மணிக்கு 30-40 … Read more