ராஜேந்திர பாலாஜி மீதான ஊழல் வழக்கில் ஜூலை 16 முதல் விசாரணை தொடக்கம்

ஶ்ரீவில்லிபுத்தூர்: ஆவினில் வேலை வாங்கித் தருவதாக ரூ.3 கோடி மோசடி செய்ததாக முன்னாள்அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்கு விசாரணை, மாவட்ட ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டது. ஜூலை 16-ம் தேதி முதல் வழக்கு விசாரணை தொடங்க உள்ளது. விருதுநகர் மாவட்டம் சாத்தூரைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி ரவீந்திரன் என்பவர், தனது உறவினருக்கு ஆவினில் வேலை வாங்கி தருவதாக ரூ.30 லட்சம் பணம் பெற்று ஏமாற்றியதாக அளித்த புகாரின் பேரில் விருதுநகர் குற்றப்பிரிவு போலீஸார் … Read more

குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானிக்கு அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு

அகமதாபாத்: அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியின் இறுதி சடங்கு இன்று அரசு மரியாதையுடன் நடைபெறவுள்ளது. மேலும், குஜராத் அரசு இன்று (திங்கட்கிழமை) மாநிலத்தில் துக்கம் அனுசரிக்கப்படுவதாக அறிவித்துள்ளது. 242 பயணிகள் மற்றும் பணியாளர்களுடன் அகமதாபாத்திலிருந்து லண்டனுக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் வியாழக்கிழமை (ஜூன் 12) பிற்பகல் விபத்துக்குள்ளானது. விமானத்தில் இருந்த குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உட்பட 241 பேர் இறந்துவிட்டதை ஏர் இந்தியா உறுதிப்படுத்தியது. மேலும், … Read more

அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தை கைவிட ஈரான் திட்டம்: அணு ஆயுதப் போர் மூளும் அச்சமா?

தெஹ்ரான்: ஈரான் நாடாளுமன்றம் அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து (NPT) வெளியேறுவதற்கான மசோதாவைத் தயாரித்து வருவதாக ஈரானிய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால் அணு ஆயுதப் போர் மூளுமா என்ற அச்சம் எழுந்துள்ளது. ஈரான் நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேறும்போது, அந்நாடு அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து (NPT) வெளியேறக்கூடும். அதே நேரத்தில் அமைதியான அணுசக்திக்கான அதன் உரிமையை நிலைநிறுத்த உறுதியுடன் உள்ளதாகவும் ஈரான் தெரிவித்துள்ளது. முன்னதாக, ஈரானிய அதிபர் மசூத் பெஷேஷ்கியன், … Read more

அகமதாபாத் விமான விபத்து: முன்னாள் விமானி கூறும் ஷாக் தகவல்!

ஏர் இந்தியா விமான விபத்து குறித்து பலரும் பல தகவல்களை கூறி வரும் நிலையில், முன்னாள் அமெரிக்க கடற்படை விமானி கேப்டன் ஸ்டீவ் ஷீப்னர் சில முக்கிய காரணங்களை தெரிவித்துள்ளார். 

ஹும் படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

 ‘ஹும்’ எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. 

அமித்ஷா சொல்வதே கட்சியின் நிலைப்பாடு, அண்ணாமலை சொல்வது… தமிழிசை தடாலடி!

Tamizhisai Soundararajan: அமித்ஷா சொல்வதுதான் கட்சியின் நிலைப்பாடு என்றும் அண்ணாமலை சொல்வது தனிப்பட்ட கருத்து என்றும் தமிழிசை சௌந்தரராஜன் பேசி உள்ளார். 

ஜியோ பயனர்களுக்கு குட் நியூஸ்.. வெறும் ரூ749 ரீசார்ஜ் செய்தால் போதும்

Reliance Jio Recharge Plan In Tamil: ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு விலை வரம்புகளில் பல ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வருகிறது. இந்த திட்டங்களில் ஒன்று தான் ரூ.749 ஆகும். நீண்ட செல்லுபடியாகும், போதுமான டேட்டா மற்றும் பொழுதுபோக்கு மற்றும் கிளவுட் ஸ்டோரேஜ் ஆகியவற்றை விரும்பும் பயனர்களுக்கு இந்த ரீசார்ஜ் திட்டம் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். இந்த திட்டத்தில் என்ன பலன் வழங்கப்படுகிறது என்பதை இப்போது அறிந்து கொள்வோம். ரூ.749 திட்டத்தின் நன்மைகள் என்னென்ன?ஜியோவின் … Read more

16வது மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகாரபூர்வ அறிவிப்பு… இந்திய சமூகத்தை மறுவரையரை செய்ய பிரிட்டிஷார் பயன்படுத்திய சாதி என்ற வார்த்தை எங்கிருந்து வந்தது ?

மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்துவதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை மத்திய அரசு இன்று வெளியிட்டது. 1871ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு செயல்முறை தொடங்கியதிலிருந்து இது 16வது மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் சுதந்திரத்திற்குப் பிறகு இது 8வது மக்கள் தொகை கணக்கெடுப்பு என்று அந்த அறிக்கை தெரிவித்துள்ளது. லடாக், ஜம்மு காஷ்மீர் மற்றும் உத்தரகண்ட் போன்ற பனி மூடிய பகுதிகளில் அக்டோபர் 1, 2026 முதல் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றும், மார்ச் 1, 2027 முதல் நாட்டின் … Read more

உயர்கல்வி சேர்க்கையில் இந்தியாவிற்கே வழிகாட்டும் விருதுநகர்; அனுபவம் பகிரும் ஆட்சியர்!

இந்த ஆண்டு தொடர்ச்சியாக, விருதுநகர் மாவட்டத்தில் அரசுப் பள்ளி மாணவர்கள் பலர் IIT, NIT, IIIT, CLAT, AIIMS நர்சிங்‌ என நாட்டின் முக்கிய கல்வி நிறுவனங்களில் சேர்வதற்குரிய நுழைவுத் தேர்வுகளில் வெற்றி பெற்று வருகிறார்கள். பன்னிரெண்டாம் வகுப்பு முடித்துவிட்டு உயர்கல்விக்குச் சேரும் மாணவர்களின் விகிதம் நூற்றுக்கு 95 விழுக்காடுக்கு மேல் என்ற உயரிய அளவு இந்தியாவிலேயே வேறு எந்த மாவட்டமும் இதுவரை எட்டவில்லை.‌ இந்த ஆச்சரியமான தகவல்கள் வந்ததால், இது குறித்து அறிந்து கொள்வதற்காக மாவட்ட … Read more

“கும்பகோணம் கலைஞர் பல்கலை.க்கு இதுவரை ஆளுநர் அனுமதி தரவில்லை” – முதல்வர் ஸ்டாலின் ஆவேச பேச்சு

தஞ்சாவூர்: “கும்பகோணத்தில் கலைஞர் பெயரால் அமையவிருக்கும் பல்கலைகழகத்துக்கு இதுவரை ஆளுநர் அனுமதி தரவில்லை. பொறுத்திருப்போம். பொறுத்தது போதும் என்று பொங்கி எழுந்தால் அதற்கு பிறகு ஆளுநருக்கு பணியவேண்டிய ஒரு கட்டாயத்தை ஏற்படுத்துவோம்” என தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 16) தஞ்சாவூரில் நடைபெற்ற அரசு விழாவில்,முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கி ஆற்றிய உரையில், “மாமன்னர் இராசராசன் ஆட்சி … Read more