காசாவில் இஸ்ரேல் படையினர் துப்பாக்கிச் சூடு: 38 பாலஸ்தீனர்கள் உயிரிழப்பு

கான் யூனிஸ்(காசா): காசாவில் உணவு விநியோக மையங்கள் அமைந்துள்ள பகுதியில் இஸ்ரேல் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 38 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காசா பிரதேசத்தின் தெற்கில் உள்ள உணவு விநியோக மையங்களில் நடந்த புதிய துப்பாக்கிச் சூடுகளில் 38 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய ராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகள் வழியாக ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் நாள்தோறும் உணவு மையங்களை நோக்கிச் செல்கின்றனர். அவர்கள் மீது இதற்கு முன்பும் பலமுறை … Read more

மீண்டும் ஒன்று சேரும் சமந்தா – நாக சைதன்யா? காரணம் இதுவாகும்

Ye Maaya Chesave Re Release: விவாகரத்துக்கு பின் மீண்டும் திரையில் ஒன்று சேரும் உள்ளனர் நடிகை சமந்தா மற்றும் நடிகர் நாக சைதன்யா. இது தொடர்பான முழு விவரத்தை இந்த கட்டுரையில் காணலாம். 

கடத்தல் வழக்கு: ஏடிஜிபி-ஐ கைது… பூவை ஜெகன்மூர்த்திக்கு உயர் நீதிமன்றம் எச்சரிக்கை

Minor Boy Kidnap Case: சிறுவனை கடத்திய வழக்கில் ஏடிஜிபி ஜெயராமனை கைது செய்ய காவல்துறைக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அவர் நீதிமன்ற வளாகத்திலேயே கைது செய்யப்பட்டார். 

ஏபிடி செய்த தவறு.. கோபத்தால் பேசாமல் இருந்த கோலி! என்ன நடந்தது?

ஏபிடி வில்லியர்ஸ் மற்றும் விராட் கோலி எந்த அளவிற்கு நெருக்கமான நண்பர்கள் என்று நாம் அனைவருக்குமே தெரிந்த ஒன்று. இந்த நிலையில் விராட் கோலி தன்னிடம் சில மாதங்கள் பேசாமல் இருந்ததாகவும் தான் செய்த செயலால் அவருக்கு மன கசப்பு ஏற்பட்டதாகவும் எபிடி வில்லியர்ஸ் கூறி உள்ளார்.  கடந்த 2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், யூடியூப் நேரலையின் போது, அனுஷ்கா சர்ம தனது இரண்டாவது குழந்தையுடன் கர்ப்பமாக இருக்கிறார் என்ற தவறான தகவலை வெளியிட்டிருந்தார். கோலி மற்றும் … Read more

Rajini: "'கண்ணப்பா' படத்தைப் பார்த்த பிறகு ரஜினிகாந்த்…." – நெகிழ்ந்த மோகன் பாபு

நாட்டாமை படத்தின் தெலுங்கு ரீமேக் ஆன ‘பெத்தராயுடு’ படம் வெளியாகி 30 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஓட்டி மோகன் பாபுவுடன் நடிகர் ரஜினிகாந்த் நேற்று (ஜூன் 16) கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார். மேலும், மோகன் பாபுவின் மகன் விஷ்ணு மஞ்சு நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘கண்ணப்பா’ படத்தையும் குடும்பத்துடன் பார்த்திருக்கிறார். இதனை மோகன் பாபு புகைப்படத்துடன் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். ரஜினிகாந்த்- மோகன் பாபு – விஷ்ணு மஞ்சு மோகன் பாபு வெளியிட்டிருக்கும் பதிவில், … Read more

இதுவரை அகமதாபாத் விமானவிபத்தில் 47 உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு

அகமதாபாத் இன்று வரை அகமதாபாத் விமான விபத்தில் மரணமடைந்தோரில் 47 பேர் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு’ கடந்த 12-ம் தேதி அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா 171 விமானம் சில நிமிடங்களில் பிஜே மருத்துவ கல்லூரி மாணவர் விடுதியில் விழுந்தது. இதில் விமானத்தில் பயணம் செய்த 241 பேரும் உயிரிழந்தனர். மேலும், விமான விபத்தில் விடுதியில் இருந்த 29 பேர் உயிரிழந்தனர். விமானத்தில் இருந்த ஒருவர் மட்டுமே காயங்களுடன் உயிர் தப்பினார். , விமான … Read more

சிறுவன் கடத்தல் வழக்கு: ஏடிஜிபி ஜெயராமனை கைது செய்ய உத்தரவு; ஜெகன்மூர்த்தி மீது நீதிபதி காட்டம்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தாலுகாவை சேர்ந்த தனுஷ் என்ற இளைஞரும், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த வித்யஸ்ரீ என்ற இளம்பெண்ணும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலம் பழகி காதலித்து பதிவுத் திருமணம் செய்து கொண்டனர். இருப்பினும், வித்யஸ்ரீயின் குடும்பத்தினர் இந்தத் திருமணத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் அவர்கள், கடந்த ஏப்ரல் மாதம், தன்னுடைய மகளைக் கடத்தி விட்டதாக தனுஷ் மீது திருவலாங்காடு காவல் நிலையத்தில் புகாரளித்தனர். வித்யஸ்ரீ, தனுஷ் இருப்பினும், போலீஸ் விசாரணையில் இருவரும் மேஜர் என்பதால் … Read more

பூவை ஜெகன்மூர்த்திக்கு ஐகோர்ட் கடும் கண்டனம்; ஏடிஜிபி ஜெயராமனை கைது செய்ய உத்தரவு

சென்னை: ஆள்கடத்தல் வழக்கில் புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான பூவை ஜெகன்மூர்த்திக்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்த உயர் நீதிமன்றம், இந்த வழக்கு விவகாரத்தில் ஏடிஜிபி ஜெயராமனை கைது செய்து விசாரிக்க உத்தரவிட்டது. திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த இளைஞர், தேனியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து பதிவுத் திருமணம் செய்துள்ளார். பெண் வீட்டாருக்கு ஆதரவாக கூலிப்படையினர் மூலம் இளைஞரின் சகோதரரை புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், கே.வி.குப்பம் தொகுதி எம்.எல்.ஏவுமான ஜெகன்மூர்த்தி கடத்தியதாக புகார் … Read more

குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உடலுக்கு முதல்வர் பூபேந்திர படேல் அஞ்சலி

அகமதாபாத்: அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியின் உடலுக்கு முதல்வர் பூபேந்திர படேல் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கீழே விழுந்து தீ பற்றி எரிந்து உருக்குலைந்தது. விமானத்தில் பயணித்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்தனர். குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியும் இந்த விபத்தில் உயிரிழந்தார். உயிரிழந்தவர்களின் உடல்களில் பல அடையாளம் காண … Read more

ஈரானுக்காக இஸ்ரேல் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்துமா?

தெஹ்ரான்: ஈரான் மீது இஸ்ரேல் அணுகுண்டு வீசினால், இஸ்ரேல் மீது பாகிஸ்தான் அணு ஆயுதத் தாக்குதல் நடத்தும் என்று ஈரான் படைகளின் உயர் அதிகாரி தெரிவித்துள்ளார். ஆனால், இந்தத் தகவலை பாகிஸ்தான் திட்டவட்டமாக மறுத்துள்ளது. ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே கடந்த சில நாட்களாக மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், இரு நாடுகளிலும் சுமார் 248 பேர் (ஈரான் 230 மற்றும் இஸ்ரேல் 18) உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் ஈரான் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் பேசிய … Read more