கரூர்: இளம்பெண் மரணம்; போராடிய உறவினர்களைத் தகாத வார்த்தையால் திட்டிய ஆய்வாளர்! – பரவும் வீடியோ

கரூர் அடுத்த வெண்ணைமலையைச் சேர்ந்தவர் முருகராஜ். இவருக்கும், திருப்பூர் மாவட்டம், பல்லடம் பகுதியைச் சேர்ந்த காவியா என்ற பெண்ணுக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், திருமணத்திற்கு பின் இருவருக்கும் சிறு சிறு பிரச்னைகள் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த சூழலில், காவியா நேற்று மதியம் திடீரென வீட்டில் யாரும் இல்லாத நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஆனால், காவியாவின் உறவினர்களுக்கு, உடல்நிலை சரியில்லாத … Read more

ஆன்மிக மாநாட்டை அரசியலுக்கு பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கலாம்: உயர் நீதிமன்ற கிளை உத்தரவு

மதுரை: ஆன்மிக மாநாட்டை அரசியலுக்கு பயன்படுத்தினால் அதற்கான சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. மதுரை பாண்டிகோயில் அருகே அம்மா திடலில் ஜூன் 22-ல் இந்து முன்னணி சார்பில் முருக பக்தர்கள் ஆன்மிக மாநாடு நடத்த 52 நிபந்தனைகளுடன் போலீஸார் அனுமதி வழங்கியுள்ளனர். மாநாட்டு வளாகத்தில் அறுபடை வீடுகளின் மாதிரி அமைத்து பூஜைகள் நடத்த போலீஸார் அனுமதி மறுத்தனர். இதையடுத்து மாநாட்டுக்கு போலீஸார் விதித்துள்ள 52 நிபந்தனைகளில், மாநாட்டுக்கு வரும் வாகனங்களுக்கு அந்தந்த உட்கோட்ட … Read more

சோகத்தில் முடிந்த சாகசம்: இமாச்சலில் ஜிப்லைன் கேபிள் அறுந்து விழுந்து சிறுமி படுகாயம்

நாக்பூர்: சுற்றுலா நிமித்தமாக இமாச்சல் மாநிலம் மணாலிக்கு பயணித்த நாக்பூரை சேர்ந்த குடும்பத்தினருக்கு அந்த பயணம் மோசமானதாக அமைந்தது. மணாலியில் ஜிப்லைன் சாகசம் மேற்கொண்ட அந்த குடும்பத்தை சேர்ந்த 10 வயது சிறுமி, கேபிள் அறுந்த காரணத்தால் கீழே விழுந்து படுகாயமடைந்தார். நாக்பூரில் வசித்து வரும் பிரஃபுல்லா பிஜ்வே தம்பதியர் மற்றும் அவர்களது 10 வயது மகள் த்ரிஷா பிஜ்வே உடன் மணாலிக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அங்கு கடந்த 8-ம் தேதி அவர்கள் தனியார் சாகச அனுபவங்களில் … Read more

‘அமெரிக்காவின் முழு பலத்தையும் உங்கள் மீது இறக்குவோம்’ – ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை!

நியூயார்க்: “ஈரான் எந்த வகையிலும் அல்லது வடிவத்திலும் நம்மைத் தாக்கினால், அமெரிக்க ஆயுதப் படைகளின் முழு பலமும் வலிமையும் இதற்கு முன் கண்டிராத அளவில் அவர்கள் மீது இறங்கும்.” என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை, இஸ்ரேலின் ராணுவம் தெஹ்ரானில் உள்ள ஈரானிய பாதுகாப்பு அமைச்சக தலைமையகத்தைத் தாக்கியதாக அறிவித்தது. மேலும், ஈரானின் அணு ஆயுதத் திட்டத்துடன் தொடர்புடைய தெஹ்ரானை சுற்றியுள்ள பல இடங்களைத் தாக்கியதாகவும் அது கூறியது. இதற்கிடையில், அமெரிக்க ஜனாதிபதி … Read more

நாளை முதல் Ola, Uber, Rapido பைக் டாக்சிகள் இயங்காது!

பைக் டாக்சிகளை கர்நாடகாவில் தடை செய்தால் 6 லட்சத்துக்கும் அதிகமானோரின் வாழ்வாதாரங்களைப் பாதிக்கும் என்று ரேபிடோ நிறுவனம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

தந்தையர் தினம்: மனதை நெகிழ வைக்கும் சூப்பர்ஹிட் அப்பா பாடல்கள்

Fathers Day 2025 Special Tamil Songs: தமிழ் சினிமாவில் என்றென்றும் கொண்டப்படும் அப்பா மகன், மகளின் பாடல்களின் பட்டியலை இந்த பதிவில் காணலாம்.

கோயிலை இவர்கள்தான் பயன்படுத்துவார்கள்… முருகப் பக்தர்கள் மாநாட்டை விமர்சித்த கனிமொழி!

Tamil Nadu News: போர் என்பதோ, தீவிரவாதம் என்பதோ நிச்சயமாக ஆரோக்கியமான எதிர்காலத்தை உருவாக்கக் கூடிய ஒன்றாக இருக்க முடியாது என கனிமொழி பேசி உள்ளார். 

ஐசிசி கொண்டு வந்த அதிரடி மாற்றம்! இந்த இந்த விதிகள் இல்லை!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) கிரிக்கெட்டில் சில வீதிகளில் அதிரடி மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் என மூன்று பார்மட்டுகளிலும் மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. இதில் ஒரு வீரருக்கு அடிபட்டால் மாற்று வீரர்களை கொண்டு வருவது, ஒரு நாள் போட்டிகளில் புதிய பந்துகளை பயன்படுத்துவது போன்ற விதிகளில் மாற்றங்களை கொண்டு வந்துள்ளது ஐசிசி. பேட்டிங் மற்றும் பௌலிங் என இரு அணிகளுக்கும் போட்டி சாதகமாக இருக்க வேண்டும் என்பதற்காக ஐசிசி இந்த விதிகளை … Read more

Tourist Family: 'அவருடைய அந்த ஒரு புன்னகை என்னை…'- ரஜினியின் பாராட்டு குறித்து நெகிழும் இயக்குநர்

அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில், நடிகர் சசிகுமார், நடிகை சிம்ரன், மிதுன் ஜெய் சங்கர், கமலேஷ், யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், ரமேஷ் திலக், பகவதி பெருமாள், இளங்கோ குமாரவேல், ஸ்ரீஜா ரவி எனப் பலர் நடிப்பில் வெளியான படம் `டூரிஸ்ட் ஃபேமிலி’. இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. திரைத்துறையைச் சேர்ந்தப் பலர் இப்படத்தைப் பாராட்டி இருந்தனர். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் `டூரிஸ்ட் ஃபேமிலி’ படக்குழுவை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார். டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில்… … Read more

76181 பேர் தகுதி: நீட் தேர்வு பொய் பிரசாரங்களை நிறுத்துங்கள்! அண்ணாமலை

சென்னை: நீட் தேர்வில்   இதுவரை இல்லாத அளவில் தமிழக மாணவர்கள்  76,181 பேர் தகுதி பெற்றுள்ளது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதை சுட்டிக்காட்டி,  நீட் தேர்வுக்கு எதிரான பொய் பிரசாரங்களை நிறுத்துங்கள் என திமுக அரசை முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை அறிவுறுத்தி உள்ளார். நீட் தேர்வில், தமிழகத்தில் தேர்வெழுதிய மாணவர்களில், 76,181 மாணவர்கள், தகுதி மதிப்பெண்கள் பெற்றுள்ளதும், முதல் 100 இடங்களில் 6 இடங்களை, தமிழக மாணவர்கள் பிடித்துள்ளதும், மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என பாஜக … Read more