7 பேருடன் கேதார்நாத் சென்ற ஹெலிகாப்டர் விபத்து – உத்தராகண்டில் மீட்பு பணி தீவிரம்

டேராடூன்: உத்தராகண்ட் மாநிலத்தின் குப்தகாசியில் இருந்து 7 பேருடன் கேதார்நாத்துக்கு சென்ற ஹெலிகாப்டர் கவுரிகுந்த் வனப்பகுதியில் விபத்துக்குள்ளானது. சம்பவ இடத்தில் மீட்பு பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. ஆரியன் ஏவியேஷன் என்ற நிறுவனத்துக்கு சொந்தமான அந்த ஹெலிகாப்டரில் விமானி உடன் சேர்த்து மொத்தம் 7 பேர் பயணித்துள்ளனர். இன்று அதிகாலை 5.17 மணி அளவில் குப்தகாசியில் இருந்து கேதர்நாத்துக்கு அந்த ஹெலிகாப்டர் புறப்பட்டுள்ளது. இந்நிலையில், மோசமான வானிலை காரணமாக அந்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. இதில் 5 … Read more

'நிறையப் பிரச்னைகள்… அம்மா அழுதுட்டாங்க; அப்பா இல்லாதது…'- விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன்

அறிமுக இயக்குநர் அன்பு  இயக்கத்தில், மறைந்த நடிகர் விஜயகாந்தின் மகனான சண்முக பாண்டியன் நடிப்பில் வெளியாகி இருக்கும் திரைப்படம் ‘படைத்தலைவன்’.  இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில் சண்முக பாண்டியன் பேசிய விஷயங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. படைத்தலைவன் படத்தில் சண்முக பாண்டியன் “இப்படத்தின் முதல்காட்சியில் அப்பாவைப் பார்க்கும்போதே நான் அழுதுவிட்டேன். அப்பா எங்களுடன் இல்லாதது கஷ்டமாகத் தான் இருக்கிறது. ஆனால் அவர் மேல் இருந்து எங்களுக்கு ஆசிர்வாதத்தைத் தருகிறார் என்ற நம்பிக்கையில் … Read more

விபத்து எதிரொலி: 9 போயிங் விமானங்களில் நடத்தப்பட்ட பாதுகாப்பு சோதனை நிறைவுபெற்றதாக அறிவிப்பு…

டெல்லி : அகமதாபார் ஏர் இந்தியா விமான விபத்தைத்தொடர்ந்து, ஏர் இந்தியா தன்னிடம்  உள்ள விமானங்களில்   9 போயிங் விமானங்களில் பாதுகாப்பு சோதனை  மேற்கொள்ளப்பட்ட சோதனை நிறைவு பெற்றதாக ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் இருந்து 242 பயணிகளுடன் ஜூன்  12ம் தேதி லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட 3 நிமிடங்களிலேயே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.  இந்த  விமான  விபத்து காரணமாக  இதுவரை   274 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் … Read more

மத்தியபிரதேசம் என்கவுன்டர்: 4 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை

போபால், சத்தீஷ்கார், மராட்டியம், ஜார்க்கண்ட், ஒடிசா, மத்தியபிரதேசம் உள்பட பல்வேறு மாநிலங்களில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் உள்ளது. நக்சலைட்டுகளை ஒடுக்கும் நடவடிக்கையில் மாநில சிறப்பு போலீஸ் படையுடன், மத்திய பாதுகாப்புப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில மாதங்களாக நக்சலைட்டுகளுக்கு எதிரான நடவடிக்கையை மத்திய அரசு தீவிரப்படுத்தி வருகிறது. இந்நிலையில், மத்தியபிரதேசத்தின் பாலாகாட் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் இன்று மாலை அப்பகுதிக்கு விரைந்து சென்ற பாதுகாப்புப்படையினர் தேடுதல் … Read more

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல்; கலப்பு அணி பிரிவில் தங்கம் வென்ற இந்தியா

முனிச், உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி ஜெர்மனியின் முனிச் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில், இந்திய வீராங்கனை சுருச்சி இந்தர்சிங் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார். 19 வயதான சுருச்சி ஏற்கனவே பியூனஸ் அய்ரஸ் மற்றும் லிமாவில் நடந்த உலகக் கோப்பை போட்டிகளில் தங்கம் வென்றிருந்தார். அதன் தொடர்ச்சியாக இப்போது உலக கோப்பை போட்டியில் வெற்றி பெற்று ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்துள்ளார். இந்த நிலையில், … Read more

இங்கிலாந்தில் ஒரே இரவில் 30 ஆயிரம் முறை மின்னல் தாக்கியது

லண்டன் இங்கிலாந்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்தது. மேற்கு நகரமான சல்போல்க்கில் 30 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தியது. இது இந்த ஆண்டின் அதிகபட்ச வெயில் அளவு ஆகும்.இந்தநிலையில் தலைநகர் லண்டன், சபோல்க் ஆகிய நகரங்களில் மழை கொட்டித்தீர்த்தது. இதனால் அந்த நகரங்கள் வெள்ளக்காடாக மாறின. எனவே வெள்ளம் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியில் மீட்பு பணி நடைபெற்று வருகிறது. அதேசமயம் மழை பெய்தபோது ஒரே இரவில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறை மின்னல் தாக்கியதாக … Read more

TNPL: தொடர் தோல்வியில் கோவை அணி… ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்த சேப்பாக் அணி!

டிஎன்பிஎல் பத்தாவது லீக் போட்டி சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணியை லைக்கா கோவை கிங்ஸ் அணி எதிர்கொண்டது. முதலில் டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. கோவை அணி வீரர் முதலில் இன்னிங்ஸை தொடங்கிய லைக்கா கோவை கிங்ஸ் தொடக்கம் முதலே சேப்பாக் அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. தொடக்க வீரராக களமிறங்கிய லோகேஸ்வர் 9 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். … Read more

தமிழகம் முழுவதும் சீனியாரிட்டி பட்டியல் வெளியீடு எப்போது? – 7,000 காவல் அதிகாரிகள் காத்திருப்பு

உச்ச நீதிமன்ற தீர்ப்பு எதிரொலியாக தமிழகம் முழுவதும் புதிய சீனியாரிட்டி பட்டியலை எதிர்நோக்கி எஸ்ஐ முதல் கூடுதல் எஸ்பி வரை 7 ஆயிரம் போலீஸ் அதிகாரிகள் காத்திருக்கின்றனர். தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் 1,299 எஸ்.ஐ பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஏப்.4-ம் தேதி வெளியிட்டது. சுமார் 3 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். இவர்களில் காவல் துறையில் இரண்டாம், முதல்நிலை மற்றும் தலைமைக் காவலர்களாக பணியில் உள்ளவர்களும் விண்ணப்பித்திருந்தனர். காவல் பணியில் உள்ளவர்களுக்கு 20 சதவீத … Read more

இஸ்ரேலை கண்டிக்கும் எஸ்சிஓ அறிக்கை விவாதத்தில் இந்தியா பங்கேற்கவில்லை

ஈரானுடனான போர் தொடர்பாக இஸ்ரேலை கண்டிக்கும் ஷாங்காங் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) அறிக்கை தொடர்பான விவாதத்தில் இந்தியா பங்கேற்கவில்லை என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியுறவு அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: இஸ்ரேல் – ஈரான் இடையிலான போர் குறித்து எஸ்சிஓ ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை மீதான விவாதங்களில் இந்தியா பங்கேற்கவில்லை. பதற்றத்தை தணிக்க பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திர வழிகளை பின்பற்றுமாறு இரு தரப்பினரையும் நாங்கள் வலியுறுத்துகிறோம். சர்வதேச சமூகம் இந்த … Read more

Parthiban: 'ஆவலுடன் காத்திருக்கிறேன்!'- விரைவில் இயக்குநராகும் பார்த்திபனின் மகன்

தனது மகன் ராக்கி பார்த்திபன் விரைவில் கமர்ஷியல் திரில்லர் படம் ஒன்றை இயக்க இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார் நடிகரும், இயக்குநருமான பார்த்திபன். இதுதொடர்பாகப் பார்த்திபன் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். பார்த்திபன் அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், ” ராக்கி பார்த்திபன்! என் மகன். என் உயிருக்கு நிகர். கருப்பு வெள்ளை படங்களிலிருந்து பார்த்து பார்த்து தெளிந்தத் திரை ஞானம்,திரு ஏகாவிடம் ஒளிப்பதிவும், இயக்குனர் விஜய் அவர்களிடம் இயக்கமும் கற்று ஒரு கமர்ஷியல் திரில்லர் படத்திற்கான கதை திரைக்கதையை … Read more