லோக் அதாலத்தில் 1.12 லட்சம் வழக்குகள் தீர்வு: பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.632 கோடி இழப்பீடு

சென்னை: தமிழகம் முழு​வதும் நேற்று நடந்த லோக் அதாலத் வாயி​லாக 1.12 லட்​சம் வழக்​கு​களுக்​குத் தீர்வு காணப்​பட்​டு, பாதிக்​கப்​பட்​ட​வர்​களுக்கு ரூ.631 கோடியே 80 லட்​சத்து 27,703 நிவாரணம் கிடைத்​துள்​ளது. நாடு முழு​வதும் உள்ள நீதி​மன்​றங்​களில் நிலு​வை​யில் உள்ள வழக்​கு​களை விரை​வாக முடிவுக்கு கொண்​டு​வரும் வகை​யில், ஆண்​டுக்கு நான்கு முறை தேசிய லோக் அதாலத் என்ற மக்​கள் நீதி​மன்​றம் நடத்​தப்​படு​கிறது. அதன்​படி, தமிழகத்​தில் சென்னை உயர்​நீ​தி​மன்ற தலைமை நீதிபதி கே.ஆர்​.ராம் மேற்​பார்​வை​யில், தமிழ்​நாடு சட்​டப்​பணி ஆணைக்​குழு தலை​வர் நீதிபதி … Read more

கேரள நர்ஸ் ரஞ்சிதா முதல் மருத்துவ மாணவி வரை – அகமதாபாத் விமான விபத்து துயரம்

பிரிட்டனில் பணியாற்றி வந்த கேரள நர்ஸ் ரஞ்சிதா கோபக்குமார் (39) அங்கு வேலையை விட்டு விட்டு கேரளாவில் நிரந்தரமாக தங்க முடிவு செய்திருந்தார். அதற்கான வேலைகளை முடிப்பதற்காக ரஞ்சிதா, லண்டனுக்கு மீண்டும் செல்ல முடிவு செய்திருந்தார். துரதிர்ஷ்டவசமாக அவர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அவரது நெருங்கிய உறவினர் ஒருவர் கூறும்போது, “லண்டன் வேலையை விட்டு விட்டு தென் கேரளாவில் உள்ள தனது சொந்த கிராமமான புல்லாட்டில் அவர் குடியேற முடிவு செய்திருந்தார். இதற்கா அங்கு புதிதாக வீடு … Read more

அகமதாபாத் விமான விபத்து: காரணங்களை ஆய்வு செய்ய உயர்மட்ட பல்துறை குழு அமைப்பு

டெல்லி: 274 பேரை பலி கொண்டுள்ள அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்துக்கான காரணங்களை ஆய்வு செய்ய உயர்மட்ட பல்துறை குழு அமைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய உள்துறை செயலாளர் தலைமையிலான இந்த குழுவினர்,  விபத்துக்கான காரணங்கள் குறித்தும், இனிமேல் இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுப்பது குறித்தும் ஆய்வு செய்யும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் இருந்து 242 பயணிகளுடன் லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட 3 நிமிடங்களிலேயே  … Read more

Israel – Iran Conflict: பின்னணியில் America? | Ahmedabad Plane CrashTRUMP |Imperfect Show 14.6.2025

* இஸ்ரேலின் தாக்குதல் ஈரான் மக்களுக்கு எதிரானது அல்ல – பெஞ்சமின் நெதன்யாகு – வருண் * இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 78 பேர் உயிரிழப்பு – சிபி * உலக நாடுகளின் தலைவர்களுடன் நெதயான்கு பேச்சு? – சிபி * Israel Vs Iran: “Operation True Promise 3-இஸ்ரேலின் 6 இடங்களைக் குறிவைத்துத் தாக்கியிருக்கிறோம்”- ஈரான் – வருண் * Plane crash: அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 274 ஆக உயர்வு … Read more

“ஏழை மாணவர்களின் கல்வியோடு விளையாடாதீர்” – ஆர்டிஇ நிதியை விடுவிக்க தமிழக அரசுக்கு இபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: “தமிழகத்தில் உள்ள எழை, எளிய, நடுத்தர மாணவர்களின் கல்வியோடு விளையாடுவதை ஸ்டாலின் மாடல் அரசு உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும். மாநில நிதியில் இருந்து ஆர்டிஇ-க்கான நிதியை விடுவித்து, 25 சதவீத மாணவர் சேர்க்கையை உடனடியாகப் பூர்த்தி செய்ய வேண்டும்” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஏழை, எளிய மாணவர்கள், யாரிடமும் கையேந்தாமல் கல்வி கற்க வேண்டும் என்பதற்காக கொண்டுவரப்பட்டதுதான் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் … Read more

விஸ்வாஷ் குமாரின் ‘அதிர்ஷ்ட சீட்’ – ஐரோப்பாவில் வெறுக்கப்படும் இருக்கை எண் 11ஏ

புதுடெல்லி: குஜ​ராத் மாநிலம் அகம​தா​பாத்​திலிருந்து லண்​ட​னுக்கு நேற்று முன்​தினம் புறப்​பட்ட ஏர் இந்​தியா விமானம் விபத்​துக்​குள்​ளானது. இதில் பயணித்த 242 பேரில் 241 பேர் உயி​ரிழந்​தனர். இந்த விமான விபத்​தில் உயிர் பிழைத்​தவர் விஸ்​வாஸ் குமார் ரமேஷ் என்​பவர் ஆவார். அவர் அமர்ந்​திருந்​தது 11 ஏ என்ற எண்​ணுள்ள இருக்​கை​தான். இந்த இருக்​கை​யானது, ஐரோப்​பிய நாடு​களில் இயக்​கப்​படும் 737 வகை போயிங் விமானங்​களில் மிக​வும் வெறுக்​கப்​படும் இருக்​கை​யாகப் பார்க்​கப்​படு​கிறது. ஆனால், இந்​தி​யா​வில் இயக்​கப்​படும் 787 போயிங் விமானங்​களில் … Read more

ஈரான் பதிலடியின் தாக்கமும், இஸ்ரேல் பிரதமரின் புதிய மிரட்டலும் – நடப்பது என்ன?

டெல் அவிவ் / தெஹ்ரான்: இஸ்ரேல் மீது ஈரான் கடுமையான பதிலடி தாக்குதலை மேற்கொண்ட நிலையில், “ஈரானின் ஒவ்வொரு இலக்கையும் குறிவைத்து தாக்குவோம்” என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு புதிய மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறும்போது, “அயதுல்லா ஆட்சியின் கீழ் உள்ள ஈரான் தேசத்தின் ஒவ்வொரு ராணுவத் தளம், அணுசக்தி ஆராய்ச்சி மையம் என அங்குள்ள எங்களது ஒவ்வொரு இலக்கையும் குறிவைத்து தாக்குவோம். இதுவரை அவர்கள் எதிர்கொண்ட தாக்குதலை காட்டிலும் வரும் … Read more

'பாஜக ஆட்சி அமைக்க இது சரியான நேரமில்லை…' நயினார் நாகேந்திரன் மதுரையில் பேச்சு!

Nainar Nagendran: நாம் ஏன் ஆட்சி அமைக்க கூடாது என்று சிலர் பேசுவார்கள், அதை சிந்திக்க கூடிய நேரம் இதுவல்ல என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசி உள்ளார். 

திமுக கூட்டணியில் அதிக இடங்களை கேட்போம்! திருமாவளவன்

சென்னை: 2026 சட்டமன்ற தேர்தலின்போது, விசிகவுக்கு அதிக தொகுதிகளை கேட்போம் என திமுக கூட்டணி கட்சியான விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். மேலும், கூட்டணியில் இருந்தாலும் அரசுக்கு எதிரான கருத்துகளையும் தெரிவித்து வருகிறோம் இதனால் கூட்டணியில் எந்த குழப்பமும் ஏற்படாது என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 2026 சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள முதலமைச்சர் ஸ்டாலின், இப்போதே திமுகவினரிடம்  தேர்தல் பணிகளை  முடுக்கி விட்டுள்ளதுடன், மக்களை கவரும் வகையில் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். … Read more