“இனி வேண்டாம் போர்கள்!” – இஸ்ரேலுக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

சென்னை: ஈரான் மீதான தாக்குதல் தொடுத்து வரும் இஸ்ரேலின் வன்முறைப் பாதை கண்டிக்கத்தக்கது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட சமூக வலைதள பதிவில், “ஈரான் மீது இஸ்ரேல் தொடுத்து வரும் தாக்குதல்கள் பெரும் போரை மூளச் செய்யும் பொறுப்பற்ற செயலாகும். ஏற்கெனவே காசாவில் தொடர்ந்து குண்டுகளை வீசி, பாலஸ்தீன மக்கள் அல்லலுற்று வரும் வேளையில் இஸ்ரேலின் இந்த வன்முறைப் பாதை கண்டிக்கத்தக்கது. உலக நாடுகள் அனைத்தும் இதை கட்டுப்படுத்தவும், நீதிக்கும், பொருள் பொதிந்த … Read more

அகமதாபாத் விமான விபத்து: பலி எண்ணிக்கை 270 ஆக அதிகரிப்பு

அகமதாபாத் : அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து நடந்த இடத்தில் இருந்து, மேலும் ஒரு உடல் விமானத்தின் வால் பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் இந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 270 ஆக அதிகரித்துள்ளது. பிஜி மருத்துவக் கல்லூரியில், இளநிலை மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் தவால் கமேட்டி இன்று (சனிக்கிழமை) செய்தியாளர்களை சந்திக்கையில், “இன்றைய நிலவரப்படி விமான விபத்துப் பகுதியிலிருந்து 270 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.” என்று தெரிவித்தார். மேலும், விமான விபத்து … Read more

WTC பட்டத்தை வென்ற தென்னாப்பிரிக்காவுக்கு எவ்வளவு கோடி பரிசு தெரியுமா?

ICC World Test Championship Final 2025: ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி கடந்த ஜூன் 11ஆம் தேதி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்த இறுதிப்போட்டியில் நான்காம் நாளான இன்று (ஜூன் 14), தென்னாப்பிரிக்கா 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. எய்டன் மார்க்ரம் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.  South Africa WTC: ஆஸ்திரேலியாவை அடக்கிய தென்னாப்பிரிக்கா   2வது இன்னிங்ஸில் ஆஸ்திரேலியாவில் அதிகபட்சமாக ஸ்டார்க் 58 ரன்களை அடித்தார். தென்னாப்பிரிக்கா … Read more

மலிவான விலையில் Samsung Galaxy S24 Ultra வாங்கலாம்.. மிகப்பெரிய டிகவுண்ட் பெறலாம்

Samsung Galaxy S24 Ultra Bumper Discount: நீங்கள் Samsung Galaxy S24 Ultra 5G ஸ்மார்ட்ஃபோன் வாங்க விரும்பினால், அதிக விலை காரணமாக அதை வாங்க முடியவில்லை என்றால், உங்களுக்கு ஒரு நல்ல செய்தி இருக்கிறது. இந்த சிறந்த ஸ்மார்ட்போன் வழக்கமாக ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் இப்போது Amazon தளத்தில் வழங்கப்படும் மிகப்பெரிய தள்ளுபடிகள் காரணமாக, இந்த அற்புதமான ஸ்மார்ட்போனை மிகக் குறைந்த விலையில் வாங்கலாம். இந்த ஸ்மார்ட்போனில் கிடைக்கும் … Read more

நாட்டுப்புற பாடகியும், நடிகையுமான கொல்லங்குடி கருப்பாயி காலமானார்…

சென்னை: நாட்டுப்புற பாடகியும், நடிகையுமான கொல்லங்குடி கருப்பாயி  காமானார். இவருக்கு வயது 99. பல்வேறு படங்களில் நடித்து புகழ்பெற்றவர்  கொல்லங்குடி கருப்பாயி. இவருக்கு தமிழ்நாடு அரசு கலைமாமணி பட்டம் கொடுத்து கவுரவித்துள்ளது. இவர் வயது முதிர்வு காரணமாக சொந்த ஊரில் இருந்து வந்த நிலையில், இன்று அதிகாலை காலமானதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 99 வயதாகும் நாட்டுப்புற பாடகியும், நடிகையுமான கொல்லங்குடி கருப்பாயி  சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடியில் உள்ள இல்லத்தில் வசித்தவந்த நிலையில்,   வயது மூப்பால் காலமானார் … Read more

11 A சீட்: அகமதாபாத் போல் தாய்லாந்திலும் உயிர்தப்பிய ஒருவர் – ராசியா? மர்மமா?

11 A Seat Mystery: அகமதாபாத் விமான விபத்தில் 11A சீட்டில் இருந்த ஒரு நபர் மட்டும் உயிர் பிழைத்திருக்கும் நிலையில், தற்போது அவரை போலவே உயிர் பிழைத்தவர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

இ-காமர்ஸ் பிசினஸ் தொடங்க ஒரு லேப்டாப், வைஃபை வசதி போதும்! – வழிகாட்டும் நிகழ்ச்சி

எந்தவித முன் அனுபவமும் இல்லாமல் வீட்டிலிருந்தே அமேசான் விற்பனை தளத்தில் பிசினஸ் தொடங்குவது பற்றிய நிகழ்ச்சி சென்னையில் ஜூன் 22 ஆம் தேதி(ஞாயிறு) நடைபெற உள்ளது. இ-காமர்ஸ் எக்ஸ்பெர்டும் நியூஜென்மேக்ஸ் நிறுவனருமான நிவேதா முரளிதரன் நடத்தும் ‘அமேசான் தமிழ் ஸ்டார்ட் அப் ஹேக்கத்தான்’ நிகழ்ச்சி  சென்னையில் நடைபெறும். முன் அனுபவமும் இல்லாமல்  அமேசானில் தொழில் தொடங்குவது எப்படி,  அதிகம் விற்பனையாகும் தயாரிப்புகளைக் கண்டறிதல், சொந்த பிராண்டை உருவாக்குதல், நாள் ஒன்றுக்கு 20-க்கும் மேற்பட்ட பொருள்களை விற்பனை செய்வது உள்ளிட்டவை … Read more

“தமிழகத்தில் காவல் துறையினருக்கே பாதுகாப்பு இல்லாத அவலம்” – செல்லூர் ராஜூ

மதுரை: தமிழகத்தில் காவல் துறையினருக்கே பாதுகாப்பு இல்லாத அவல நிலை உள்ளது என முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார். மதுரை திருமங்கலம் அருகே சூறையாடப்பட்ட வி.சத்திரப்பட்டி காவல் நிலையத்தை பார்வையிட சென்ற முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை போலீஸார் கைது செய்து, கல்லுப்பட்டி – பேரையூர் சாலையிலுள்ள மண்டபத்தில் அடைத்து வைத்தனர். அவரை முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு சந்தித்தார். பின்னர், செய்தியாளர்களிடம் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறியது: “திருமங்கலம் தொகுதியிலுள்ள வி.சத்திரப்பட்டி காவல் நிலையத்தை … Read more

“பணம் ஓர் உயிரை திரும்பத் தராது” – அகமதாபாத் விபத்தில் தந்தையை இழந்த மகள் கண்ணீர்!

அகம​தா​பாத்: “ரூ.1 கோடி இழப்பீடு வழங்குவதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது. ஆனால், இழப்பீடு என் தந்தையை திரும்பக் கொண்டுவரப் போவதில்லை. பணம் ஓர் உயிரை திரும்பக் கொடுக்கப் போவதில்லை.” என்று அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவரின் மகள் உருக்கமாகப் பேசியுள்ளார். அகமதாபாத் விமான விபத்து பல குடும்​பங்​களின் கனவு​களை கலைந்து சுக்குநூறாக்கிய நிலையில், தனது தந்தையை இழந்த மகள் பகிர்ந்த வீடியோ கண்களை கனக்கச் செய்கிறது. அகமதாபாத் விமான விபத்து, பிரிட்டனில் பணியாற்றி வந்த கேரள நர்ஸ், … Read more

நீட் தேர்வு முடிவுகள் 2025: டாப் 100-ல் இடம் பெற்ற தமிழக மாணவர்கள்! எத்தனை பேர் தெரியுமா?

NEET UG Results 2025 TN Candidates Top 100 : நீட் இளநிலை தேர்வு முடிவுகள் வெளியாகி இருக்கிறது. இதில், முதல் இடத்தை மகேஷ் குமார் என்பவர் பிடித்திருக்கிறார். இவரை தொடர்ந்து தமிழக மாணவர்கள் யாரெல்லாம் டாப் 100ல் இடம் பெற்றுள்ளனர் என்பதை இங்கு பார்ப்போம்.