துபாயில் 67மாடிகள் கொண்ட மெரினா அடுக்குமாடி கட்டித்தில் பயங்கர தீவிபத்து – 3800 பேர் மீட்பு…

துபாய்: துபாயில் உள்ள  67 மாடிகளைக்கொண்ட மெரினா கட்டிடத்தில்  இன்று திடீரென பயங்கர  தீ விபத்து  ஏற்பட்டது. இந்த தீவிபத்தில் இருந்து சுமார் 3800 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. துபாயில் 67 மாடிக் கட்டடத்தில் தீ விபத்துக்குள்ளானது.  இதையடுத்து, அங்கு உடனடியாக குளிரூட்டும் பணி தொடங்கியது. இதனால் தீ பரவல் கட்டுப்படுத்தப்பட்டது. மேலும் தீயணைப்பு துறையினர் உள்பட பேரிடர் மீட்பு படையினர் விரைந்து பணியாற்றி சுமார் 6மணி நேரம் போராடி தீ … Read more

Gene therapy: வைரஸ் மூலம் மரபணு சிகிச்சை; பார்வையை மீட்ட குழந்தைகள்.. மருத்துவ உலகில் முக்கிய சாதனை!

பரம்பரை மரபணு நோயால் கண்பார்வை இழந்த குழந்தைக்கு இங்கிலாந்தில் மரபணு சிகிச்சை (Gene therapy) மூலம் கண்பார்வை கிடைக்கச் செய்துள்ளனர். இந்த சாதனை எப்படி நடந்தது என்பதை இந்தக் கட்டுரையில் பார்ப்போம். ஒவ்வொரு உயிரிகளின் உடலமைப்பும் மற்றும் செயல்பாடும் வித்தியாசமானவை. இந்த வித்யாசத்திற்குத் தேவையான அனைத்துத் தகவல்களும் உயிரிகளின் மரபணுத் தொகுப்பில்தான் (Genome) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்தத் தகவல்களின் அடிப்படையிலேயே அனைத்து உயிரிகளும் இயக்குகின்றன. மனித மரபணுத் தொகுப்பு மனித மரபணுத் தொகுப்பு சுமார் 320 கோடி … Read more

நீலகிரிக்கு நாளை ‘ரெட் அலர்ட்’ – 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

சென்னை: நீலகிரி மாவட்டத்தில் நாளை (ஜூன் 15) ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழையும், கோவை மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், தேனி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஈரோடு, சேலம், தருமபுரி, திருப்பூர், திண்டுக்கல், மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: … Read more

அகமதாபாத் விமான விபத்து விசாரணைக்கு 3 மாதங்கள் அவகாசம்: மத்திய அரசு

புதுடெல்லி: “அகமதாபாத் விமான விபத்து குறித்த விசாரணைக்காக உயர் மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் உள்துறைச் செயலாளர் தலைவராக இருப்பார். இந்தக் குழு அறிக்கை சமர்ப்பிக்க மூன்று மாத காலம் அவகாசம் வழங்கப்படும்” என சிவில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்துள்ளார் இது குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம்மோகன் நாயுடு, “கடந்த இரண்டு நாட்கள் மிகவும் கடினமாக இருந்தன. குறிப்பாக அமைச்சகத்துக்கும், மற்ற அனைவருக்கும் … Read more

'மேலும் ஏவுகணைகளை வீசினால் தெஹ்ரான் எரியும்' – ஈரானுக்கு இஸ்ரேல் கடும் எச்சரிக்கை

டெல் அவிவ்: தங்கள் நாட்டின் மீது மேலும் ஏவுகணைகளை வீசினால் தெஹ்ரான் எரியும்’ என்று ஈரானுக்கு இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து பேசிய இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ், “ஈரானிய சர்வாதிகாரி தனது மக்களை அவர்கள் விரும்பாத ஒரு யதார்த்தத்துக்கு பிணைக் கைதிகளாக வைத்துள்ளார். இஸ்ரேலிய பொதுமக்கள் மீதான குற்றவியல் தாக்குதலுக்கு அவர்கள் பெரும் விலை கொடுப்பார்கள். அயதுல்லா அலி கமேனி இஸ்ரேலை நோக்கி மேலும் ஏவுகணைகளை வீசினால் தெஹ்ரான் … Read more

நீட் ரிசல்ட் வந்தாச்சு… இனி மருத்துவ சீட் வாங்குவது எப்படி? கவுன்சிலிங் எப்படி நடக்கும்?

Medical College Seat Couselling: நீட் 2025 தேர்வு முடிவுகள் வெளியாகி இருக்கும் சூழலில், மருத்துவ சீட்டை பெறுவது எப்படி, கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பிப்பது எப்படி என்பது குறித்து இங்கு விரிவாக காணலாம்.

லட்சங்களில் மாத வீட்டு வாடகை.. கொடிகட்டிப் பறக்கும் ஷாருக் கான் வீட்டு பணியாளர்

பாலிவுட் சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகர் ஷாரூக்கான் வீட்டில் வேலை செய்யும் நபர் தனது வீட்டிற்கு பல லட்சமாக வாடகையை கொடுப்பதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

`46 வருடங்கள் சினிமாத்துறையில் பயணித்திருக்கிறேன்; ஆனால்..!' – ராதிகா சரத்குமார் | Vikatan Awards

திறமையான திரைக்கலைஞர்களை அங்கீகரிக்கும் வகையில் வருடந்தோறும் ஆனந்த விகடன் சினிமா விருதுகள் விழா நடைபெற்று வருகிறது. அந்தவகையில் 2024-ம் ஆண்டிற்கான ஆனந்த விகடன் சினிமா விருதுகள் இன்று( ஜூன் 13) சென்னை டிரேட் சென்டரில் நடைபெற்று வருகிறது. இதில் 2024 ஆனந்த விகடன் சினிமா விருதுகள் விழாவில் சிறந்த வெப்சீரிஸ்க்கான (தலைமைச் செயலகம்) விருதை ராதிகா, வசந்த பாலன் இருவரும் பெற்றனர். அவருக்கு இந்த விருதினை இயக்குநர் விக்ரமன் வழங்கினார். விருதைப் பெற்றுக்கொண்ட ராதிகா, “இந்த விருது … Read more

ரூ.2100 கோடி மதுபான ஊழல்: காங்கிரஸ் கட்சி அலுவலகம் மற்றும் முன்னாள் அமைச்சரின் சொத்துக்கள் முடக்கம்…

ராஞ்சி: சத்திஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற ரூ.2,100 கோடி மதுபான ஊழல் வழக்கில், மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகம் மற்றும் முன்னாள் அமைச்சரின் ரூ.6கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது.  இது பா.ஜ.க-வின் அரசியல் சதி என்று சத்தீஸ்கர் காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. சத்தீஸ்கரில் முந்தைய காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில்ரூ.2,100 கோடி மதிப்பிலான மதுபான ஊழல்  நடைபெற்றதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இதன்மீதான பணமோசடி வழக்கின் முக்கிய நடவடிக்கையாக, சத்திஷ்கர் … Read more

Israel: 'இந்தியாவிடம் மன்னிப்பு கேட்ட இஸ்ரேல் ராணுவம்' – ஏன்?

இந்தியாவின் எல்லைகளைத் தவறாக காட்டியதற்காக மன்னிப்பு கேட்டுள்ளது இஸ்ரேல் ராணுவம். இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே கடுமையான மோதல்கள் எழுந்துள்ளன. ஈரானின் அணு ஆயுத மையம் உட்பட பல இடங்களில் இஸ்ரேல் நாடந்திய தாக்குதலில், அந்த நாட்டின் தலைமை ராணுவ அதிகாரி உயிரிழந்துள்ளார். ஈரான் இஸ்ரேல் மீது நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியுள்ளது. குறிப்பாக இஸ்ரேல் தலைநகர் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறது. Range of iran missiles இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் எப்போது வேண்டுமானாலும் முழுமையான … Read more