எழுத்தறிவு பெறும் திட்டத்தில் தமிழகத்தில் 5 லட்சம் பேர் தேர்ச்சி: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் 

சென்னை: “முற்றிலும் எழுத, படிக்கத் தெரியாத 15+ வயதினர் அனைவரும் எழுத்தறிவு பெறும் திட்டத்தில் தமிழ்நாட்டில் இருந்து பயின்ற 5 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 100% தேர்ச்சி விழுக்காட்டோடு தமிழ்நாடு இந்தியாவிலேயே ‘நம்பர் ஒன்’ இடத்தைப் பிடித்துள்ளது,” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுதொடர்பாக தமிழக முதல்வர் தனது சமூகவலைதளப் பக்கத்தில், “முற்றிலும் எழுத, படிக்கத் தெரியாத 15+ வயதினர் அனைவரும் எழுத்தறிவு பெறும் திட்டத்தில் தமிழ்நாட்டில் இருந்து பயின்ற 5 லட்சம் பேர் … Read more

கேரளா பருவமழை: வயநாடு, மலப்புரம் உள்ளிட 5 மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் ரெட் அலர்ட்

திருவனந்தபுரம்: கேரளாவில் மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய வடக்கு மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் இந்த ஆண்டு மே 24 அன்று தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியதைத் தொடர்ந்து, அடுத்தடுத்த நாட்களில் கடுமையான மழை பெய்தது. அதையடுத்து சிறிது நாட்கள் ஓய்ந்திருந்த மழை இப்போது மீண்டும் தீவிரமடைந்துள்ளது. இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) இன்று காலை (ஜூன் 14, 2025) வெளியிட்ட வானிலை அறிவிப்பின்படி, கேரளாவின் … Read more

அகமதாபாத் விமான விபத்து: நடந்தது என்ன?; அடுத்தது என்ன? – மத்திய அமைச்சர் முழு விளக்கம்

Ahmedabad Plane Crash: அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து குறித்து ஒன்றிய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு இன்று விரிவாக விளக்கம் அளித்தார்.

மொய் விருந்தில் வெற்றி பெறுவாளா தமிழ்செல்வி? பரபரக்கும் திருப்பங்களுடன் சின்ன மருமகள் நெடுந்தொடர்

தமிழ்செல்வி தன் கனவை வெல்ல 1 லட்சம் திரட்டுவாளா ?–விஜய் டிவி “சின்ன மருமகள்” தொடரின் நெஞ்சைத் தொடும் கதை!

இந்திய அணியில் ரோகித், விராட் இல்லாத குறையை சரி செய்யப்போகும் பேட்ஸ்மேன் – யார் தெரியுமா?

India vs England Test Series 2025 : இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜூன் 20 முதல் தொடங்க உள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான தொடரின் முதல் டெஸ்ட் போட்டி ஜூன் 20 முதல் இந்திய நேரப்படி பிற்பகல் 3:30 மணிக்கு லீட்ஸில் உள்ள ஹெடிங்லி மைதானத்தில் நடைபெறும். இம்முறை இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விராட் கோலி மற்றும் ரோஹித் … Read more

'கேமராவை மெஷின்னு சொல்வாங்க!' – கொல்லங்குடி கருப்பாயி குறித்து நடிகர் ஆர்.பாண்டியராஜன்

நாட்டுப்புறப் பாடகி கொல்லங்குகுடி கருப்பாயி இன்று காலை காலமானார், வயோதிகப் பிரச்னை காரணமாக கடந்த சில நாட்களாக உடல் நலம் குன்றியிருந்த அவர் ‘ஆண் பாவம்’ மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். இந்த நிலையில் நடிகர் பாண்டிய ராஜனிடம் கருப்பாயி குறித்துக் பேசினோம். பாண்டியராஜன் வெள்ளந்தி மனுஷி  ‘’காலையில் செய்தி கேட்டதுல இருந்தே எனக்கும் மனசுக்கு ரொம்பவே கஷ்டமா இருக்குதுங்க. அப்ப அந்த அம்மா ரேடியோ, கேசட்டுகள்ள பாடிக்கிட்டிருந்தாங்க. ‘ஆண்பாவம்’ படம் என்னுடைய இரண்டாவது படம். படத்துல … Read more

அதிகார மோதல்: ராமதாஸ் தலைமையில் நாளை பாமக புதிய மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்

சென்னை: பாமகவில் தந்தை மகனுக்கு இடையே எழுந்துள்ள அதிகார மோதல் காரணமாக, பாமக நிறுவனர் ராமதாஸ் பல புதிய மாவட்டச் செயலாளர்களை நியமனம் செய்து அறிவித்துள்ள நிலையில், அவர்களுடன் நாளை ஆலோசனை மேற்கொள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. பாமகவில் எழுந்துள்ள மோதல் காரணமாக,  ராமதாஸ் இதுவரை  55 மாவட்ட செயலாளர்கள், 33 மாவட்ட தலைவர்கள் மாற்றியுள்ளார். அவர்களுடன் நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.  பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே  ஏற்பட்டு வந்த  கருத்து … Read more

Israel Vs Iran: “Operation True Promise 3-இஸ்ரேலின் 6 இடங்களை குறிவைத்து தாக்கியிருக்கிறோம்"- ஈரான்

கடந்த சில நாள்களாக, ‘ஈரானில் அணு ஆயுத தயாரிப்பு’ என்ற பேச்சு அடிப்பட்டு வந்தது. இதை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடுமையாக விமர்சித்திருந்தார். இதற்கிடையில் ஜூன் 12 அன்று ஈரானின் அணுசக்தி தளங்கள் மற்றும் இராணுவ தளங்கள் மீது இஸ்ரேல் ‘ஆபரேஷன் ரைசிங் லையன்’ என்றப் பெயரில் தாக்குதல் நடத்தியது. ஈரான் அணு ஆயுதத்தைத் தயாரித்துவிடுமோ என்கிற இஸ்ரேலின் அச்சம்தான் இந்தத் தாக்குதலின் பின்னணி என கூறப்படுகிறது. ஈரான் அதிபர் அதற்கு எதிர்வினையாற்றும் வகையில், இஸ்ரேலின் இராணுவத் … Read more

காவல் நிலையத்தையே காக்க முடியாத திமுக ஆட்சி எப்படி மக்களைக் காக்கும்? – இபிஎஸ் கண்டனம்

சென்னை: “காவல் நிலையத்தையே காக்க முடியாத இந்த திமுக ஆட்சி, எப்படி மக்களைக் காக்கும்? வாய்ப்பே இல்லை. வி.சத்திரப்பட்டி காவல் நிலையத் தாக்குதலில் ஈடுபட்டோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசை வலியுறுத்துகிறேன்” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “திமுக ஆட்சியில் காவல் நிலையத்துக்கே பாதுகாப்பு இல்லை. காவல் நிலையத்தையே காக்க முடியாத முதல்வர், தமிழ்நாட்டு மக்களை எப்படி … Read more

அகமதாபாத் விமான விபத்தில் இறந்தவர்களின் உடல்கள் டிஎன்ஏ பரிசோதனை

புதுடெல்லி: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஏர் இந்தியா விமான விபத்தில் 241 பயணிகள் தீயில் கருகி இறந்தனர். அவர்களின் உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு கருகி உள்ளன. இதையடுத்து, விபத்து நடந்த இடங்களில் சிதறி உள்ள உடல் பாகங்களை சேகரிக்கும் பணியில் தடயவியல் நிபுணர்கள் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். அந்த பாகங்களின் மரபணு (டிஎன்ஏ) பரிசோதனை தீவிரமாக நடைபெற்று வருகிறது. விபத்தில் இறந்த பயணிகளின் உறவினர்கள் பலர் தங்களது டிஎன்ஏ மாதிரிகளை வழங்கி … Read more