இஸ்ரேல் தாக்குதலில் 78 பேர் உயிரிழப்பு; 320 பேர் காயம்: ஈரானுக்கான ஐ.நா தூதர் தகவல்

தெஹ்ரான்: ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 78 பேர் கொல்லப்பட்டதாகவும், 320-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் அந்நாட்டுக்கான ஐ.நா.தூதர் அமீர் சயீத் இரவானி தெரிவித்தார். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அவசரக் கூட்டத்தில் பேசிய அமீர் சயீத் இரவானி, “இஸ்ரேலின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்கள் மற்றும் படுகொலைகள் மூத்த ராணுவ அதிகாரிகள் மற்றும் அணு விஞ்ஞானிகளுக்கு எதிரானவை. ஆனால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பொதுமக்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர். இஸ்ரேல் பல ஈரானிய நகரங்களில் உள்ள பல பொதுமக்கள் மற்றும் … Read more

NEET UG: வெளியான நீட் தேர்வு முடிவுகள்… ரிசல்ட், Answer Key டவுன்லோட் செய்வது எப்படி?

NEET UG 2025 Result: 2025ஆம் ஆண்டுக்கான இளநிலை நீட் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை இன்று வெளியிட்டது. நீட் தேர்வு முடிவுகளை எப்படி பார்ப்பது என்பதை இங்கு பார்க்கலாம்.

"எல்லா இயக்குநருக்கும் என்னுடைய ஒரு கோரிக்கை..!" – சிம்ரன் | Ananda Vikatan Cinema Awards 2024

கடந்தாண்டு தமிழ் சினிமாவில் வெளியான நல்ல படைப்புகளின் மூலமாக நமக்குத் திறமையான பல நடிகர்களும், இயக்குநர்களும், தொழில்நுட்பக் கலைஞர்களும் கிடைத்திருக்கிறார்கள். மேலும், பல மூத்த கலைஞர்களும் கடந்தாண்டு வெளியான படைப்புகளில் ஜொலித்திருந்தனர். அப்படியான கலைஞர்களை அங்கீகரிக்கும் வகையில், வருடந்தோறும் ஆனந்த விகடன் சினிமா விருதுகள் விழா நடைபெறும். அந்த வரிசையில், கடந்த 2024-ம் ஆண்டுக்கான ஆனந்த விகடன் சினிமா விருதுகள் சென்னையில் நடைபெற்றது. சிம்ரன் 2024-ம் ஆண்டுக்கான ஆனந்த விகடன் சினிமா விருதுகள் விழாவில் சிறந்த வில்லன் … Read more

Samsung Galaxy S24 Ultra ஸ்மார்ட்போனில் Amazon அளிக்கும் அட்டகாசமான தள்ளுபடி

Samsung Galaxy S24 Ultra 5G: Samsung Galaxy S24 Ultra 5G வாங்க விரும்பும் வாடிக்கையாளரா நீங்கள்? அதிக விலை காரணமாக அதை வாங்க முடியவில்லையா? அப்படியென்றால் உங்களுக்கு ஒரு நல்ல செய்தி இருக்கிறது. இந்த சிறந்த ஸ்மார்ட்போன் வாங்க வழக்கமாக ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் செலவாகும். ஆனால் இப்போது ஆன்லைன் விற்பனை தளமான Amazon வழங்கும் மிகப்பெரிய தள்ளுபடிகள் காரணமாக, இந்த அற்புதமான ஸ்மார்ட்பொனை மிகக் குறைந்த விலையில் வாங்கலாம். இந்த போனில் … Read more

ஸ்பேஸ் ஆக்ஸ்- 4: ஜூன் 19ல் விண்வெளிக்கு பயணமாகிறார்கள் சுபான்ஷு சுக்லா உள்பட 4 விண்வெளி வீரர்கள்…

புளோரிடா: சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உள்பட 4 பேர்  வரும் 19ந்தேதி  பயணமாகிறார்கள் என நாசா அறிவித்துஉள்ளது. ஏற்கனவே ஸ்பேஸ் ஆக்ஸ்- 4 பயணம் 5 முறை தொழில்நுட்ப கோளாறுகளால் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், ஜூன் 19ல் விண்வெளிக்கு பயணமாகிறார்கள்  என அறிவிக்கப்பட்டு உள்ளது.  இதை இஸ்ரோவும் உறுதி செய்துள்ளது. அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான  நாசா மற்றும் ஆக்சியம் ஸ்பேஸ் நிறுவனங்களின் கூட்டு முயற்சியாக , சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு … Read more

“டிக்கெட் வாங்காமல் விமானத்தில் 120 தடவை பயணம்'' – மோசடி ஆசாமி செய்த வேலை..

அமெரிக்காவைச் சேர்ந்த 35 வயதான டைரன் அலெக்சாண்டர் என்பவர், தன்னை ஒரு விமான பணியாளராக காட்டிக்கொண்டு விமானங்களில் இலவசமாக பயணித்துள்ளார். கிட்டத்தட்ட 120-க்கும் மேற்பட்ட விமானங்களில் இவ்வாறு மோசடியில் ஈடுபட்டுள்ளார். 2018 முதல் 2024 வரை அலெக்சாண்டர் விமான குழுவினர்கள் மட்டுமே முன்பதிவு செய்ய அணுகும் முறையை பயன்படுத்தி அவர்களுக்கான சலுகைகள் மூலம் இவ்வாறு மோசடியில் ஈடுபட்டுள்ளார். Flight (Representational Image) அமெரிக்கன் ஏர்லைன்ஸ், ஸ்பிரிட், யுனைடெட், டெல்டா போன்ற முக்கிய அமெரிக்க விமான நிறுவனங்களில் டிக்கெட் … Read more

அமராவதி அணையின் நீர்மட்டம் உயர்வு: கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை 

உடுமலை: அமராவதி அணையின் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. அமராவதி ஆற்றில் உபரி நீர் திறக்க வாய்ப்பிருப்பதால், கரையோர கிராமங்களில் வசிக்கும் பொது மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருப்பூர் ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டம், அமராவதி அணையின் நீர் மட்டம் இன்று (ஜூன் 14) காலை 7 மணியளவில் 85.11 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அமராவதி அணையின் பாதுகாப்பை … Read more

கனவுகள் கலைந்து சோகத்தில் மூழ்கிய குடும்பங்கள் – அகமதாபாத் விமான விபத்து பெருந்துயர்

அகமதாபாத்: அகம​தா​பாத்​தில் நடந்த 241 உயிர்​களை இழந்த பயங்​கர​மான விமான விபத்​தில் பல குடும்​பங்​களின் கனவு​கள் கலைந்து போயுள்​ளன. குஜ​ராத் மாநிலம் அகம​தா​பாத்​தில் நேற்று முன்​தினம் ஏர் இந்​தியா விமானம் விபத்​துக்​குள்​ளானது. இதில் பயணித்த 242 பேரில் 241 பேர் உயி​ரிழந்​தனர். ஒரு​வர் மட்​டுமே உயிர்​பிழைத்​தார். இதில் பயணம் செய்தவர்களின் கனவு​கள் கலைந்து அவர்​களது குடும்​பத்​தைச் சேர்ந்​தவர்​கள் மீள முடி​யாத சோகத்​துக்​குச் சென்​றுள்​ளனர். விபத்​தில் ராஜஸ்​தானைச் சேர்ந்த 10 பேர் இறந்​தனர். அதில் 5 பேர் ஒரே … Read more

இஸ்ரேலுக்கு ஈரான் பதிலடி: மத்திய கிழக்கில் பதற்றம்; மோதலை கைவிட ஐ.நா கோரிக்கை

தங்கள் நாட்டின் மீதான இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரான் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது. வெள்ளிக்கிழமை இரவு தொடங்கி விடியவிடிய இடைவிடாது நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல் நடத்தியதில் மத்திய இஸ்ரேலில் இருவர் உயிரிழந்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில் இஸ்ரேல் – ஈரான் மோதலைக் கைவிட வேண்டும் என்று ஐ.நா. வலியுறுத்தியுள்ளது. ஐரோப்பிய நாடுகள் பலவும் அதிகரிக்கும் மோதல் தொடர்பாக கவலை தெரிவித்துள்ளது. முன்னதாக, நேற்று ஈரானின் 4 அணுசக்தி தளங்​கள், 2 ராணுவ முகாம்​களை இஸ்ரேல் … Read more

பட்டதாரி மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசு கொடுத்திருக்கும் முக்கிய செய்தி

TN Government : தொழில்முனைவோராக ஆர்வமுள்ள இளைஞர்கள் தொழில்முனைவோர் மற்றும் புத்தாக்கத்திற்கான சான்றிதழ் படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம்