டெல்லியில் இருந்து தமிழகத்தை ஆட்சி செய்ய ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்: முதல்வர் ஸ்டாலின் 

சேலம்: “டெல்லியில் இருந்து தமிழகத்தை ஆட்சி செய்ய ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்” என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சேலத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று, ரூ.1,649 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள், புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: மதுரையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியபோது, மத்திய அரசின் திட்டங்களை, தமிழக அரசு மடைமாற்றம் செய்து விட்டதாக ஆட்சியை குறை சொல்லி, … Read more

விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்தவர்களில் 169 பேர் இந்தியர்கள், 53 பேர் பிரிட்டன் நாட்டவர்: ஏர் இந்தியா

புதுடெல்லி: அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்த 242 பேரில், 169 பேர் இந்தியர்கள், 53 பேர் பிரிட்டன் நாட்டவர்கள், 7 பேர் போர்ச்சுக்கீசிய நாட்டவர்கள், ஒருவர் கனடாவைச் சேர்ந்தவர் என ஏர் இந்தியா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஏர் இந்தியா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “அகமதாபாத்திலிருந்து லண்டன் கேட்விக் செல்ல வேண்டிய ஏர் இந்தியா 171 விமானம் புறப்பட்ட பிறகு விபத்தில் சிக்கியதை ஏர் இந்தியா உறுதிப்படுத்துகிறது. அகமதாபாத்திலிருந்து மதியம் 13.38 மணிக்கு புறப்பட்ட இந்த போயிங் … Read more

Ahmedabad Plane Crash: விமான விபத்திற்கு முன் நடந்தது என்ன… விசாரணையில் முக்கியத்துவம் பெறும் Black Box

குஜராத்தில் உள்ள அகமதாபாத் விமான விபத்தில், மீட்புக் குழுக்கள் உயிர் பிழைத்தவர்களைத் தொடர்ந்து தேடி வரும் நிலையில், விமான விபத்தின் கடைசி நிமிடத்தில் நடந்தது என்ன என்பது குறித்து யாரும் அறியாத நிலையில், அதனை அறிய விமானத்தின் கருப்புப் பெட்டி தான் உதவும்.

பாமக தலைவர் நானே, கூட்டணி முடிவு என் கையில்.. ராமதாஸ் பரபரப்பு பேட்டி!

Ramadoss Press Meet: சட்டமன்ற தேர்தல் வரை பாமகவில் நான்தான் தலைவராக நீடிப்பேன் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறி உள்ளார். 

WTC இறுதிப் போட்டி 2025: பல பெரிய சாதனைகளை படைத்து காகிசோ ரபாடா!

WTC Final 2025 Latest Update: இங்கிலாந்தின் லார்ட்ஸில் நடைபெற்று வரும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025 இன் இறுதிப் போட்டியின் முதல் இன்னிங்ஸில், தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் காகிசோ ரபாடாவின் அசத்தலான பந்துவீச்சுக்கு முன்னால், நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா 212 ரன்களுக்கு சுருண்டது. மறுபுறம் தென்னாப்பிரிக்கா அணியும் நல்ல தொடக்கத்தை பெறவில்லை. ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025 தொடர் பற்றி பார்ப்போம். சாதனை பதிவு செய்த காகிசோ ரபாடா முதல் நாள் ஆட்டத்தின் … Read more

அகமதாபாத் விமான விபத்து – மாலை 4மணி வரை 110 பேரின் உடல்கள் மீட்பு – அவசர கால உதவி எண் அறிவிப்பு

அகமதாபாத்:  இன்று மதியம் குஜராத்தில் விபத்துக்குள்ளான ஏர்இந்தியா விமான விபத்தில் இறந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு வருகிறது. இதுவரை 110 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.  குஜராத் முன்னாள் முதல்வர் விஜய்ரூபானி பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. Ahmedabad plane crash – Emergency helpline announced. control room at phone number 079-232-51900 & mobile number 9978405304. 242 பயணிகளுடன சென்ற ஏர் இந்தியா விமானம் குஜராத் மாநிலத்தில் … Read more

Vedan: "பூமி நான் வாழும் இடம்.." – பல்கலைக் கழக பாடத்தில் சேர்க்கப்பட்ட வேடன் பாடல் எதைப் பேசுகிறது?

2020-ம் ஆண்டு, “நான் பாணன் அல்ல; பறையன் அல்ல; புலையன் அல்ல…” என்பது போன்ற சாதி, வர்க்க, மத அடக்குமுறைகளுக்கு எதிராக `வாய்ஸ் ஆஃப் தி வாய்ஸ்லெஸ்’ என்ற தலைப்பில் தனியிசைப்பாடலை வெளியிட்டார் ராப் பாடகர் வேடன். அவரின் இசையும், குரலும், உணர்ச்சி கொந்தளிக்கும் வார்த்தைகளும் மலையாள உலகைத் திரும்பிப் பார்க்க வைத்தது. அப்போது முதல் வேடனின் பாடல்கள் ரசிகர்களால் பெரிதும் வரவேற்பட்டன. குறிப்பாக வேடனின் பாடல்களில் புரட்சிகரக் கருத்துகள் நிறைந்திருந்தன. வேடன் பாலஸ்தீனம் முதல் அமெரிக்காவில் … Read more

நாய்கள் துரத்தி கடித்ததில் காங். கவுன்சிலர் காயம் – நாய் தொல்லைக்கு எதிராக குரல் எழுப்பியவருக்கு நேர்ந்த துயரம்

கும்பகோணத்தில் தனது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் நேற்று ஆய்வுக்கு சென்ற கவுன்சிலரை நாய்கள் விரட்டி கடித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கும்பகோணம் மாநகராட்சி 14-வது வார்டு கவுன்சிலராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அய்யப்பன்(73) உள்ளார். தாராசுரத்தில் வசித்து வரும் இவர், நாள்தோறும் தனது வார்டு பகுதியில் ஆய்வு மேற்கொள்வது வழக்கம். அதன்படி, அய்யப்பன் தனது வார்டுக்கு உட்பட்ட கணபதி நகரில் நேற்று காலை வழக்கம்போல ஆய்வுக்காக சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்தப் பகுதியில் சுற்றித் திரிந்த 10-க்கும் … Read more

அகமதாபாத்தில் 240+ பயணிகளுடன் புறப்பட்ட விமானம் விபத்து – மீட்புப் பணிகள் தீவிரம்

அகமதாபாத்: குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து 242 பேருடன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. இதனை ஏர் இந்தியா நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. ஏஐ171 (AI)171 என்ற எண் கொண்ட விமானம் விபத்துக்குள்ளானது என்று எக்ஸ் பக்கத்தில் ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பிரிட்டன் தலைநகர் லண்டன் நோக்கி இன்று (வியாழக்கிழமை) மதியம் 1.10 மணி அளவில் புறப்பட்ட ஏர் இந்தியாவுக்குச் சொந்தமான போயிங் … Read more

அகமதாபாத் விமான விபத்து: குஜராத் முன்னாள் முதல்வர் விமானத்தில் இருந்தாரா?

Ahmedabad Plane Crash: அகமதாபாத் விமான நிலையத்தில் ஒரு பெரிய விபத்து ஏற்பட்டுள்ளது. ஒரு ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட உடனேயே விபத்துக்குள்ளானதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.