மராட்டியத்தில் புலி தாக்கி மேலும் ஒரு பெண் பலி

மும்பை, மராட்டிய மாநிலம் சந்திராப்பூர் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் ஏராளமான புலிகள் உள்ளன. இந்த நிலையில் நேற்று முன்தினம் சந்திராப்பூர் மாவட்டம் சிந்தேவாகி வனப்பகுதியில் புகையிலை சேகரிக்க சென்ற மாமியார், மருமகள் உள்பட 3 பெண்களை புலி தாக்கி கொன்றது. இந்த நிலையில் மேலும் ஒரு பெண் சந்திராப்பூரில் புலி தாக்கி உயிரிழந்து உள்ளார். சந்திராப்பூர் முல் தாலுகா நாகலா கிராமத்தை சேர்ந்தவர் விமலா ஷிண்டே (வயது 65). இவர் நேற்று பீடி இலை சேகரிக்க வீட்டருகே … Read more

அமெரிக்கா – சீனா இடையே உறுதி செய்யப்பட்ட வர்த்தக ஒப்பந்தம்

வாஷிங்டன், அமெரிக்க ஜனாதிபதியாக இரண்டாவது முறையாக டொனால்டு டிரம்ப் பதவியேற்ற பிறகு, சீனா உள்பட பல்வேறு நாடுகளிடையே வரிவிதிப்புகளை மேற்கொண்டார். இதன்படி சீனா மீது 34 சதவிகித வரியை விதித்தார். இதனையடுத்து, அமெரிக்கா மீது சீனாவும் வரியை விதித்தது. இந்த வரிப்போரானது, சீனா மீது அமெரிக்கா 145 சதவிதமும், அமெரிக்கா மீது சீனா 125 சதவிகித வரியும் உயர்த்தும் அளவுக்கு கொண்டு சென்றது. இதனால், உலகளாவிய பங்குச்சந்தைகள் வெகுவாக பாதிக்கப்பட்டன. இறுதியாக, இரு நாடுகளும் 90 நாட்களுக்கு … Read more

கோவை, நீலகிரியில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் தாக்கத்தால் இன்று தமிழகத்தில் சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் … Read more

இந்திய மக்கள்தொகை 146 கோடியாக உயரும்: ஐ.நா. அறிக்கையில் தகவல்

புதுடெல்லி: ஐ.நா. மக்கள் தொகை நிதியம் (யுஎன்எப்பிஏ) 2025-ம் ஆண்டுக்கான உலக மக்கள் தொகை நிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: இந்த ஆண்டில் இந்தியாவின் மக்கள் தொகை 146 கோடியாகவும் சீனாவின் மக்கள் தொகை 141 கோடியாகவும் அதிகரிக்கும் என கூறப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இந்தியாவின் மக்கள் தொகை 144 கோடியாக இருந்தது. ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு மக்கள் தொகை அளவை பராமரிக்க, ஒரு பெண் சராசரியாக 2.1 என்ற விகிதத்தில் குழந்தை பெற்றுக் … Read more

கப்பலில் இருந்து மாலுமிகள் மீட்பு: இந்தியாவுக்கு சீனா நன்றி

பெய்ஜிங்: இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து கடந்த 7-ம் தேதி புறப்பட்ட சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட சீன நிறுவனத்தின் எம்வி வான் ஹை 503 என்ற பெயர் கொண்ட சரக்கு கப்பல் மும்பைக்கு சென்று கொண்டு இருந்தது. இந்தக் கப்பல் கேரள மாநிலம் கோழிக்கோடு – கண்ணூர் துறைமுகங்களுக்கு நடுவே நடுக்கடலில் வந்து கொண்டிருந்தபோது திடீரென தீப்பிடித்து எரிந்தது. பேய்பூர் கடல் பகுதியில் இருந்து வடக்கே 70 கடல் மைல் தொலைவில் இந்த சம்பவம் நடந்தது. இது … Read more

அமெரிக்கா – சீனா இடையேயான வர்த்தக மோதலைத் தீர்ப்பதற்கான நடவடிக்கையில் முன்னேற்றம்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சீனா மீதான பரஸ்பர வரியை உயர்த்திய கையோடு அதை 90 நாட்களுக்கு செயல்படுத்தப் போவதில்லை என்றும் அறிவித்திருந்தார். சீனாவுக்காக அமெரிக்க சந்தையை திறந்து விடுவது குறித்து வெள்ளை மாளிகை அதிகாரிகளிடம் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப் அப்படி செய்யாவிட்டால் நம்மால் எதுவும் முடியாது என்றும் கூறியுள்ளார். இந்த நிலையில் கடந்த வாரம் சீன அதிபர் ஜி ஜிங்பிங் உடன் தொலைபேசியில் உரையாடிய டொனால்ட் டிரம்ப் இருநாட்டு வர்த்தகம் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சனைகளைத் … Read more

சாதி, மதம் குறிப்பிட விரும்பாதோருக்கு சான்றிதழ் வழங்கும் வகையில் அரசாணை பிறப்பிக்க அரசுக்கு ஐகோர்ட் பரிந்துரை

சென்னை: சாதி, மதம் இல்லை என சான்றிதழ்கள் வழங்கும் வகையில் உரிய அரசாணையை பிறப்பிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த சந்தோஷ் என்பவர் தனக்கு சாதி, மதம் இல்லை என்று சான்றிதழ் வழங்கும்படி திருப்பத்தூர் தாசில்தாருக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அவரது மனுவில், “எனது குழந்தைகளுக்கு சாதி மற்றும் மதத்தின் அடிப்படையிலான இடஒதுக்கீடு உள்ளிட்ட அரசின் எந்த சலுகைகளையும் கேட்க போவதில்லை,” என குறிப்பிட்டிருந்தார். … Read more

கனத்த மவுனம், அழுகைக்கு பின் போலீஸ் விசாரணையில் குற்றத்தை ஒப்புக்கொண்ட சோனம் | தேனிலவு கொலை

புதுடெல்லி: மேகாலயாவுக்கு தேனிலவு சென்ற போது தனது கணவர் ராஜா ரகுவன்சியை கொலை செய்ய திட்டம் தீட்டி கொடுத்ததோடு, கொலையை நேரில் பார்த்த குற்றச்சாட்டில் சோனம் ரகுவன்சி கைதாகி உள்ளார். இந்நிலையில், போலீஸ் விசாரணையில் தனது குற்றத்தை சோனம் ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த வழக்கை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வு பிரிவு காவலர்களிடம் சோனம் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். செவ்வாய்க்கிழமை அன்று இந்த வழக்கில் கைதாகி உள்ள ராஜ் குஷ்வாகா, ஆகாஷ், விஷால், ஆனந்த் … Read more