வால்மீகி ஊழல் வழக்கு: பல்லாரி எம்.பி, 2 எம்எல்ஏக்களின் வீடுகளில் அமலாக்கத் துறை சோதனை

பெங்களூரு: கர்நாடகா மாநிலம் பல்லாரி எம்.பி துக்காராம், பல்லாரி நகர எம்எல்ஏ நாரா பாரத் ரெட்டி, காம்ப்ளி எம்எல்ஏ ஜே.என்.கணேஷ் மற்றும் பல்லாரி கிராமப்புற எம்எல்ஏ நாகேந்திராவின் நெருங்கிய கூட்டாளி கோவர்தன் ரெட்டி ஆகியோரின் வீடுகளில் அமலாக்கத் துறை இன்று (ஜூன் 11) சோதனை நடத்தி வருகிறது. வால்மீகி ஊழல் வழக்கு தொடர்பாக இந்த சோதனைகள் நடைபெறலாம் எனக் கூறப்படுகிறது. பல்லாரி மாவட்டத்தில் உள்ள எம்.பி, எம்எல்ஏக்களின் வீடுகளில் அமலாக்கத் துறை இன்று காலை முதல் ஒரே … Read more

ஏற்றுமதி கட்டுப்பாடுகளை தளர்த்த அமெரிக்கா – சீனா இடையே உடன்பாடு

லண்டன்: இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடந்த வர்த்தகப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு ஏற்றுமதி கட்டுப்பாடுகளை தளர்த்த அமெரிக்காவும் சீனாவும் உடன்பட்டுள்ளன. அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிடையே வரிவிதிப்புகளை மேற்கொண்டார். சீனா மீது 34 சதவீத வரியை விதித்தார். இதனையடுத்து, அமெரிக்கா மீது சீனாவும் வரியை விதித்தது. இந்த வரிப்போரானது, சீனா மீது அமெரிக்கா 145 சதவீதமும், அமெரிக்கா மீது சீனா 125 சதவீத வரியும் உயர்த்தும் அளவுக்கு கொண்டு … Read more

இந்த மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும்.. வானிலை மையம் அலர்ட்!

தமிழகத்தில் தற்போது பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், அடுத்த சில தினங்கள் மேற்கு தொடர்ச்சி மலைகளை ஒட்டி இருக்கும் மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வும் மையம் எச்சரித்துள்ளது. 

MR.Consistent! ஒரு பக்கம் விக்கெட் சரிந்தாலும், மறுபக்கம் தூணாய் நிற்கும் ஸ்மித்!

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி இன்று லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கி உள்ளது. இப்போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியும் ஆஸ்திரேலியா அணியும் மோதி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா கேப்டன் புவுமா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். வானம் மேகமூட்டத்துடன் இருப்பதால், பந்து நன்றாக ஸ்விங் ஆகும் என கூறி அவர் அந்த முடிவை எடுத்ததாக தெரிவித்தார்.  இந்த நிலையில், கேப்டன் பவுமா நினைத்து போல் பந்தும் ஸ்விங் ஆனது. நல்ல தொடக்கமும் … Read more

உங்கள் பான் கார்டு செயலில் உள்ளதா? இல்லையா? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்

PAN card status check : பான் எண் மற்றும் TAN (வரி விலக்கு மற்றும் வசூல் கணக்கு எண்) தொடர்பான சேவைகளை ஒரே போர்ட்டலில் ஒருங்கிணைக்கும் நோக்கத்துடன் மத்திய அரசு சமீபத்தில் பான் 2.0-ஐ அறிமுகப்படுத்தியது. அதேநேரத்தில் பழைய பான் கார்டுகள் செல்லுபடியாகும் மற்றும் செயல்பாட்டுடன் இருக்கும். மேலும் திருத்தம் அல்லது அப்டேட் இல்லாவிட்டால் பழைய பான் கார்டுதாரர்கள் பான் 2.0 இன் கீழ் புதிய பான் கார்டுக்கு விண்ணப்பிக்க வேண்டியதில்லை. இருப்பினும், உங்கள் பான் … Read more

மணமகனின் கை நடுக்கம் : திருமணத்தை நிறுத்திய மணைப்பெண்

கைமூர் மணமகளின் நெற்றியில் குங்குமம் இடும் போது மணமகன் கை நடுங்கியதால் ம்ன்ப்பெண்  திருமணத்தை நிறுத்தி உள்ளார். பீகார் மாநிலம் கைமூர் மாவட்டத்தில் நடந்த ஒரு திருமண விழாவில், மணமகனுக்கு ஏற்பட்ட கை நடுக்கத்தால் கல்யாணம் நின்று போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இத்திருமணத்தில் மணமகளுக்கு நெற்றியில் குங்குமம் வைக்கும் சிந்தூர் தானம் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வின்போது மணமகன், மணமகளின் நெற்றியில் குங்குமம் வைக்கும் நேரத்தில் திடீரென அவரது கை விரல்களில் நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதைப் … Read more

TVK: "அவர் எனக்கு வாக்களித்தவர்…" – தவெக நிர்வாகி இல்ல விழாவில் பங்கேற்றது குறித்து எ.வ.வேலு

தமிழ்நாடு அரசு சார்பில் கோவை காந்திபுரம் பகுதியில் பெரியார்  நூலகம் மற்றும் அறிவு சார் மையம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதேபோல அவிநாசி சாலையில் 10 கி.மீ தொலைவில் மேம்பாலம் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார். எ.வ. வேலு அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “ரூ.300 கோடி மதிப்பில் உருவாகி வரும் இந்த நூலகத்தின் கட்டுமான பணிகள் வருகிற டிசம்பர் மாதத்துக்குள் நிறைவு செய்யத் திட்டமிட்டுள்ளோம். … Read more

“வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றுவதே அரசின் எண்ணம்” – புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரி: சட்டப்பேரவையில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்பதே அரசின் எண்ணம் என முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரி சட்டப்பேரவை உறுதிமொழிக்குழு கூட்டம் சட்டசபையில் உள்ள பேரவைத் தலைவர் அறையில் இன்று நடைபெற்றது. குழுவின் புதிய தலைவர் பாஸ்கர் (எ) தட்சிணாமூர்த்தி தலைமை தாங்கினார். கூட்டத்தை முதல்வர் ரங்கசாமி தொடங்கி வைத்து புதிதாக பொறுப்பேற்றுள்ள உறுதிமொழிக்குழு கூட்டத்தின் தலைவர் பாஸ்கர் (எ) தட்சிணாமூர்த்திக்கு வாழ்த்துகளை தெரிவித்தார். பின்னர் அவர் பேசும்போது, “அனைத்து துறைகளிலும் சட்டப்பேரவையில் கொடுக்கப்பட்ட … Read more

“அன்று ‘தீண்டத்தகாதவர்கள்’ என்று அழைக்கப்பட்டோர் இன்று…” – ஆக்ஸ்போர்டு யூனியனில் தலைமை நீதிபதி கவாய் உரை

புதுடெல்லி: “பல ஆண்டுகளுக்கு முன்பு, லட்சக்கணக்கான இந்திய குடிமக்கள் ‘தீண்டத்தகாதவர்கள்’ என்று அழைக்கப்பட்டனர். ஆனால் இன்று, அந்த மக்களைச் சேர்ந்த ஒருவர் நாட்டின் நீதித்துறையில் மிக உயர்ந்த பதவியை வகிப்பவராக வெளிப்படையாகப் பேசும் இடத்தில் இருக்கிறோம்” என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் கூறினார். இந்தியாவின் மிக உயர்ந்த நீதித் துறைப் பதவியை வகிக்கும் இரண்டாவது பட்டியலினத்தவர் மற்றும் முதல் பவுத்தரான தலைமை நீதிபதி கவாய், ஆக்ஸ்போர்டு யூனியனில் ஆற்றிய உரையில், “பல தசாப்தங்களுக்கு முன்பு, … Read more

லாஸ் ஏஞ்சல்ஸில் தொடரும் பதற்றம்: ஊரடங்கு உத்தரவு அமல்

லாஸ் ஏஞ்சல்ஸ்: டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் குடியேற்ற சோதனைகள் எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில நாட்களாக நீடிக்கும் வன்முறை போராட்டங்கள், தீ வைப்பு சம்பவங்களுக்குப் பிறகு, கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் பல பகுதிகளில் வரையறுக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என்று அந்நகரத்தின் மேயர் கரென் பாஸ் அறிவித்துள்ளார். இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருக்கும் எனவும், இன்னும் பல நாட்கள் இந்த உத்தரவு அமலில் … Read more