விருதுநகர் அருகே வெடி விபத்து.. 3 பேர் பலி.. நிவாரணம் அறிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்!

விருதுநகரில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார். 

DNA: "பரியேறும் பெருமாள் கதையை முதல்ல அதர்வாகிட்ட சொன்னேன்; அப்போ ஃபீல் பண்ணேன்" – மாரி செல்வராஜ்

அதர்வா நடித்திருக்கும் ‘DNA’ திரைப்படம் இம்மாதம் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அதர்வாவுடன் மலையாள நடிகை நிமிஷா சஜயனும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தை ‘மான்ஸ்டர்’, ‘பர்ஹானா’ படங்களை இயக்கிய இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கியிருக்கிறார். DNA திரைப்படத்தில்… இந்தப் படத்திற்கு மொத்தமாக ஐந்து இசையமைப்பாளர்கள் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் மாரி செல்வராஜ் பேசுகையில், “நான் முதன் முதலில் ‘பரியேறும் பெருமாள்’ கதையை அதர்வா ப்ரோவிடம்தான் … Read more

ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு மிகப்பெரிய குட்நியூஸ்..! ஆன்லைன் மோசடிகளில் சிக்கமாட்டீர்கள்

Airtel Tamil Nadu : பாரதி ஏர்டெல் (“ஏர்டெல்”) தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் ஆன்லைன் மோசடிகளில் இருந்து வாடிக்கையாளர்களைப் பாதுகாக்கும் பணியில் குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றம் அடைந்துள்ளதாக அறிவித்துள்ளது. அதன் ஏஐ-யால் இயக்கப்படும் மோசடி கண்டறிதல் அமைப்பின் நாடு தழுவிய செயல்பாட்டின் ஒரு பகுதியாக அதன் மேம்பட்ட மோசடி-கண்டறிதல் அமைப்பை அறிமுகப்படுத்திய வெறும் 25 நாட்களுக்குள் ஏர்டெல் 180,000 க்கும் மேற்பட்ட தீங்கிழைக்கும் இணைப்புகளைத் தடுத்து, மாநிலம் முழுவதும் 30 லட்சத்திற்கும் (3 மில்லியன்) மேற்பட்ட பயனர்களைப் … Read more

ஜூலை 1 முதல் தட்கல் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய ஆதார் சரிபார்ப்பு கட்டாயம்

ஆதார் அங்கீகரிக்கப்பட்ட பயனர்கள் மட்டுமே இனி தட்கல் திட்டத்தின் கீழ் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியும். இந்த விதி ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் என்று ரயில்வே அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஜூன் 10 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பில், தட்கல் திட்டத்தின் பலன்கள் சாதாரண பயனர்களுக்கும் கிடைப்பதை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஜூலை 1 முதல், இந்திய ரயில்வேயின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்கள் ஆதார் எண்ணை அங்கீகரிக்க … Read more

Li Qingzhao: 'வன அன்னத்தின் பாதை' – லி சிங் சோவ் | கடல் தாண்டிய சொற்கள் – பகுதி 13

சமீபத்தில் இணையத்தில் எதையோ தேடிக்கொண்டிருந்தபோது, லி சிங்சோவ் (Li QingZhao) இடைச்செருகலாக வந்தாள். அப்போது  பெயரை மட்டுமே குறித்து வைத்துக்கொண்டேன். பிறகொரு நாள் சிங்கப்பூர் தேசிய நூலகத்திற்குச் சென்றபோது எதேச்சையாக மீண்டும் பார்வைக்குள் சிக்கினாள்; கடந்த ஆயிரமாண்டுகளில் சீனாவின் சொங் வம்சத்தைச் சேர்ந்த முதல் பெண் கவிஞராக அறியப்படுபவர். புராதன சீனாவில் டாங் வம்சத்தின் வீழ்ச்சிக்குப் பின் நடந்த தொடர் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஒன்றிணைத்து, சொங் வம்சம் நிறுவப்பட்டது.  சீனாவின் வர்த்தகம் செழித்து மக்கள் ஓரளவு மகிழ்வாக … Read more

“மழைக் காலத்தில் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மின்துறை செயல்படும்” – அமைச்சர் சிவசங்கர் 

அரியலூர்: “தமிழகத்தில் இப்போது பருவமழை முன்கூட்டியே துவங்கி இருக்கிற சூழலில் தமிழக முதல்வர் அனைத்து பணிகளுக்கும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என ஆய்வுக்கூட்டத்தில் அறிவுறுத்தியுள்ளார். எனவே பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாமல் எல்லா வகையிலும் மின்துறை செயல்படும்,” என்று அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சன்னதி தெருவில் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஜெயங்கொண்டம் கோட்டம் புதிய செயற்பொறியாளர் அலுவலக திறப்பு விழா இன்று (ஜூன் 11) நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட … Read more

“மோடியை போல பொய் சொல்லும் பிரதமரை நான் பார்த்ததே இல்லை” – கார்கே விமர்சனம்

கலபுராகி: “கடந்த 65 ஆண்டுகளாக நான் அரசியலில் இருக்கிறேன். ஆனால், இவ்வளவு பொய் சொல்லி மக்களை ஏமாற்றும் பிரதமரை நான் பார்த்ததில்லை. அவர் எல்லாவற்றுக்கும் பொய் சொல்கிறார். அவர் தனது தவறை ஒப்புக்கொள்வதே இல்லை” என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார். கர்நாடகாவின் கலபுராகியில் செய்தியாளர்களிடம் பேசிய மல்லிகார்ஜுன கார்கே, பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது அவர், “மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்து 11 ஆண்டுகள் … Read more

பெண்கள் இறுக்கமான ஆடை அணிய சிரியாவில் கட்டுப்பாடு

டமாஸ்கஸ்: பொது இடங்களில் பெண்கள் தளர்வான ஆடைகளை அணிய வேண்டும், கடற்கரைகள் மற்றும் நீச்சல்குளங்களுக்குச் செல்லும்போது புர்கா அல்லது முழு உடலையும் மறைக்கும் நீச்சலுடைகளை அணிய வேண்டும் என்று சிரியாவின் புதிய இஸ்லாமிய அரசு உத்தரவிட்டுள்ளது. சிரியாவில் ஆட்சியில் இருந்த பஷார் அல் அசாத் தலைமையிலான அரசு கடந்த ஆண்டு முடிவுக்கு வந்தது. இதை அடுத்து அஹமது அல் ஷரா தலைமையிலான இடைக்கால இஸ்லாமிய அரசு கடந்த டிசம்பரில் ஆட்சிப் பொறுப்பேற்றது. இடைக்கால அரசு ஆட்சிக்கு வந்து … Read more

ஹனிமூன் கொலை: நரபலி கொடுக்கப்பட்ட ராஜா ரகுவன்ஷி? வெளியான திடுக்கிடும் பின்னணி

Meghalaya Honeymoon Murder Case Latest Update : இந்தூரை சேர்ந்த தம்பதி, மேகாலாயாவிற்கு தேனிலவுக்கு சென்ற நிலையில், கணவர் மட்டும் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இவரை அவரது மனைவியே கொன்றதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் முக்கிய புள்ளியாக உயிரிழந்தவரின் தாயார் கூறுவது பார்க்கப்படுகிறது.  

கூட்டுறவு வங்கிகளில் சிபில் ஸ்கோர் அடிப்படையில் விவசாயிகளுக்கு கடன்? சீமான் கண்டனம்

கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளுக்கு நுகர்வோர் கடன் மதிப்பெண் (சிபில் ஸ்கோர்) அடிப்படையில் மட்டுமே இனி வேளாண் கடன் வழங்கப்படும் என்ற உத்தரவை தமிழ்நாடு அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் என சீமான் வலியுறுத்தி உள்ளார்.