புதுச்சேரியில் நடிகர்களின் அரசியல் தாக்கம் எடுபடாது : சபாநாயகர் செல்வம்

காரைக்கால் புதுச்சேரியில் நடுஜர்களின் அர்சியல் எடுபடாது என அம்மாநில சபாநாயகர் செல்வம் கூறியுள்ளார். இன்று காரைக்காலில் புதுச்சேரி சபாநாயகர் செல்வம் செய்தியாளர்களிடம்.  ”புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி தொடர்ந்து 2026 ல் தேர்தலிலும் தொடரும். முதலமைச்சர் ரங்கசாமி தான் மீண்டும் முதல்வர் வேட்பாளர். அவரது தலைமையில் உள்ள கூட்டணி மீண்டும் ஆட்சியை கைப்பற்றும். புதுச்சேரியை பொருத்தவரை எந்த நடிகருடைய தாக்கமும் எடுபடாது. புதுச்சேரியைச் சார்ந்த மண்ணின் மைந்தர்களுக்கே இங்கு வாய்ப்பு. எந்த நடிகர் அரசியல் வேலையும் எடுபடாது.  … Read more

“மனித மூளையை மிஞ்சும் நுண்ணறிவு AI'' – சூப்பர் இன்டெலிஜென்ஸ் குழுவை அமைத்த மார்க் ஜுக்கர்பெர்க்!

மெட்டா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் புதிய ”சூப்பர் இன்டெலிஜென்ஸ்” குழுவை உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தி நியூயார்க் டைம்ஸ் கூற்றுப்படி, மார்க் ஜுக்கர்பெர்க் தனிப்பட்ட முறையில் இந்த புதிய குழுவை உருவாக்கி வருவதாகவும் இதற்கென 50 நிபுணர்களை இந்த குழுவில் சேர்த்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மெட்டா சமீபத்தில் ஒரு பெரிய மொழி மாதிரி (Large Language Model – LLM) ‘லாமா 4’ என கொண்டுவந்தது. AI இது எதிர்பார்த்த அளவுக்கு … Read more

சாதி சங்கங்களுக்கு தடை கோரி வழக்கு – தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

சாதி சங்களுக்கு தடை விதிக்கக் கோரிய மனுவுக்கு, தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை மானகிரியைச் சேர்ந்த செல்வகுமார், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த பொதுநல மனு: தமிழகத்தில் பட்டியல் சமூகத்தினருக்கு எதிரான குற்றங்களை தடுக்க மாநில அளவில் முதல்வர், டிஜிபி அடங்கிய குழுவும், மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் கொண்ட குழுவும் உள்ளன. மாவட்டக் குழு பட்டியல் சமூகத்தினருக்கு எதிரான குற்றங்கள் குறித்து விசாரித்து, மாநில குழுவுக்கு அறிக்கை … Read more

“பஹல்காம் தாக்குதல் பற்றி நாங்கள் எழுப்பும் 4 கேள்விகளுக்கு பிரதமர் பதில் அளிப்பாரா?” – காங்கிரஸ்

புதுடெல்லி: பஹல்காம் பயங்கரவாதம் தொடர்பாக நாங்கள் எழுப்பும் 4 கேள்விகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி பதில் அளிப்பாரா என்று ஜெயராம் ரமேஷ் கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பாக காங்கிரஸ் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “32 நாடுகளுக்கு அனுப்பப்பட்ட 7 நாடாளுமன்றக் குழுக்களின் உறுப்பினர்களை பிரதமரே இப்போது சந்தித்துவிட்டதால், குறைந்தபட்சம் இப்போதாவது அவர் நாங்கள் முன்வைத்து வரும் இந்த 4 கேள்விகளுக்கு பதில் அளிப்பாரா? 1. … Read more

ட்ரம்ப் குறித்த பதிவுகள்: வருத்தம் தெரிவித்தார் எலான் மஸ்க்

நியூயார்க்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உடனான தொடர்ச்சியான மோதல் போக்குக்கு மத்தியில் பில்லியனர் எலான் மஸ்க், “ட்ரம்ப் குறித்த எனது சில பதிவுகளுக்கு நான் வருந்துகிறேன், அவை மிகைப்படுத்தப்பட்டன.” என்று தெரிவித்திருக்கிறார். பில்லியனர் எலான் மஸ்க், கடந்த வாரம் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்-க்கு எதிராக வெளியிட்ட தனது சில பதிவுகளுக்காக வருத்தம் தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கடந்த வாரம் அதிபர் டொனால்டு ட்ரம்ப் பற்றிய எனது சில பதிவுகளுக்கு நான் … Read more

புத்தம் புதிய பொலிவுடன் உள்ளத்தில் ஒருவராய் உங்கள் Z தமிழ்.!

Zee Tamil Entertainment Logo Changed :ஒற்றுமையாக ஒன்றிணைந்தால் உலகமே கொண்டாட்டமாகும்.. புத்தம் புதிய பொலிவுடன் உள்ளத்தில் ஒருவராய் உங்கள் Z தமிழ்.  

என்னிடம் சொல்லிவிட்டு தான் நயினார் பாஜகவில் இணைந்தார் – டிடிவி தினகரன்!

தமிழகத்தில் பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகள் வளர்ந்துள்ளது, தேவைப்படும் போது தான் ஒரு மாநாடு நடைபெறும். தற்போது முருகன் மாநாட்டிற்கு தேவை உள்ளது என்று டிடிவி தினகரன் பேட்டி.

Aamir Khan: `என்னுடைய கதாபாத்திரம் சுவாரஸ்யமாக இருக்கும்' – கூலியில் நடிப்பதை உறுதி செய்த அமீர் கான்

‘வேட்டையன்’ திரைப்படத்திற்குப் பிறகு ரஜினி நடிப்பில் `கூலி’ திரைப்படம் வெளியாக இருக்கிறது. ‘லியோ’ படத்திற்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தில் நாகர்ஜூனா, சத்யராஜ், உபேந்திரா, செளபின் சாஹிர், ஸ்ருதி ஹாசன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். ரஜினி – லோகேஷ் கனகராஜ் – கூலி அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். ஆகஸ்ட் 14 ஆம் தேதி இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. ‘கூலி’ திரைப்படத்தில் பாலிவுட் நடிகர் ஆமீர் கான் நடிப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருந்தன. … Read more

சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இன்றைய அறிவிப்பு

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று தமிழ்கத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்புள்ளதாக அறிவித்துள்ளது. இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்., ”வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. 11-06-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் … Read more

`அவரை என்ன செய்கிறேன் பார்’ – காதலை ஏற்காத தாயாரை மிரட்டிய சோனம்; காதலனின் சகோதரி சொல்வதென்ன?

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த ராஜா ரகுவன்சி என்பவர் கடந்த மாதம் சோனம் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இத்திருமணத்தை தொடர்ந்து தனது மனைவி சோனமுடன் சேர்ந்து மேகாலயாவுக்கு தேனிலவு சென்றனர். அங்கு கடந்த 23ம் தேதி அத்தம்பதி திடீரென காணாமல் போனார்கள். 10 நாட்கள் கழித்து ராஜா ரகுவன்சி உடல் மலை பள்ளத்தாக்கில் கண்டுபிடிக்கப்பட்டது. ராஜா ரகுவன்சியின் மனைவி சோனமும், அவரது காதலன் ராஜ் குஷ்வாஹாவும் சேர்ந்து ஏற்பாடு செய்த கூலிப்படையினர் இப்படுகொலையை செய்தனர். … Read more