சித்தராமையா மீதான நில முறைகேடு வழக்கு: ரூ.100 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்

புதுடெல்லி / பெங்களூரு: கர்நாடக முதல்வர் சித்தராமையா மீதான நில முறைகேடு வழக்கில் தொடர்புடைய ரூ.100 கோடி மதிப்பிலான 92 அசையா சொத்துகளை முடக்கி அமலாக்கத் துறை அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்குச் சொந்தமான நிலத்தை கையகப்படுத்தியதற்காக, மைசூரு மாநகர மேம்பாட்டுக் கழகம் அவருக்கு மாற்று நிலம் ஒதுக்கியது. கையகப்படுத்திய நிலத்தின் மதிப்பை விட, மாற்றாக வழங்கப்பட்ட நிலத்தின் மதிப்பு அதிகமாக இருந்ததால் சர்ச்சை ஏற்பட்டது. இதையடுத்து, சித்தராமையா, அவரது மனைவி பார்வதி … Read more

இந்த பிரச்சனை இருந்தால் முக கவசம் கட்டாயம் – அமைச்சர் மா. சுப்பிரமணியம்!

கடந்த நான்கு ஆண்டுகளில் 29 ஆயிரத்து 200 மருத்துவர்கள் மருத்துவ பணியாளர்கள் எம்ஆர்பி மூலமாகவும் டிஎன்பிஎஸ்சி மூலமாகவும் காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியில் வாய்ப்பு இல்லை! வேறு நாட்டிற்கு விளையாடும் ருதுராஜ்!

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. வரும் ஜூன் 20 ஆம் தேதி தொடங்கும் இந்த தொடரில் முதல் முறையாக இந்திய அணி சுப்மான் கில் தலைமையில் விளையாட உள்ளது. கிட்டத்தட்ட அனைத்து சீனியர் வீரர்களும் ஓய்வை அறிவித்துள்ள நிலையில், இளம் இந்திய அணி விளையாட உள்ளது. கடந்த இரண்டு வாரங்களாக இந்தியா ஏ அணி இங்கிலாந்தில் பயிற்சி போட்டிகளில் விளையாடி வருகிறது. இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு … Read more

இன்று பெருந்துறை அருகே முதல்வர் தொடங்கி வைக்கும் வேளாண் கண்காட்சி

பெருந்துறை இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பெருந்துறை அருகே வேளாண் கண்காட்சியை தொடங்கி வைக்க உள்ளார். ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே விஜயமங்கலம் சுங்கச்சாவடி பகுதியில் தமிழக அரசின் வேளாண்மை -உழவர் நலத்துறை சார்பில் வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் 2 நாட்கள் நடக்கிறது.இதன் தொடக்க விழா இன்று (புதன்கிழமை) மதியம் 12.30 மணிக்கு நடைபெற உள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்காட்சி அரங்கை திறந்து வைத்து பார்வையிட்டு விவசாயிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கி … Read more

மந்திரி பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும்; கோவா டாக்டர் அதிரடி

பனாஜி, கோவா மாநிலம் பாம்போலிம் நகரில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு டாக்டர் ருத்ரேஷ் நோயாளிக்கு சரிவர சிகிச்சை அளிக்கவில்லை என்று சுகாதாரத்துறை மந்திரி விஷ்வஜித் ரானாவுக்கு செல்போன் மூலம் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த சனிக்கிழமை மருத்துவமனைக்கு சென்ற மந்திரி விஷ்வஜித் ரானா பணியில் இருந்த டாக்டர் ருத்ரேசை கடுமையாக சாடினார். நீங்கள் உங்கள் நாவை அடக்க வேண்டும். நீங்கள் ஒரு டாக்டர். நான் பொதுவாக கோபப்படுவதில்லை. ஆனால் … Read more

ஹரி நிஷாந்த் அபாரம் : திருச்சி அணிக்கு 180 ரன்கள் வெற்றி இலக்கு

கோவை, 9-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரி ஸ்டேடியத்தில் 5-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், கோவை கிங்ஸ் உள்பட 8 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய பிளே-ஆப் … Read more

காசாவில் நிவாரண உதவி மையம் அருகே இஸ்ரேல் தாக்குதல் – 25 பேர் உயிரிழப்பு

காசா முனை, காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இதையடுத்து, ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் காசா முனையில் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. அதேவேளை, பணய கைதிகளில் பலரை ஒப்பந்த அடிப்படையிலும், … Read more

தமிழகத்தில் ஜூலை முதல் வாக்குச்சாவடி சீரமைப்பு பணி: தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

சென்னை: தமிழகத்தில் வாக்குச்சாவடிகள் சீரமைப்பு பணிகள் ஜூலை மாதம் முதல் தொடங்க உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கூறினார். தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் உள்ள நிலையில், அடிப்படை பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக, இந்திய தேர்தல் ஆணைய ஊடகப் பிரிவு துணை இயக்குநர் பி.பவன், சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள தேர்தல் துறையில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதைத்தொடர்ந்து, … Read more

‘கணவரின் கொலையை நேரில் பார்த்த சோனம்’ – கைதானவர்கள் வாக்குமூலம் | மேகாலயா தேனிலவு கொலை

இந்தூர்: மேகாலயாவில் தேனிலவுக்கு சென்று ராஜா ரகுவன்சி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் அவரது மனைவி சோனம் மற்றும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், தன் கணவர் ராஜா ரகுவன்சி கொலையை சோனம் நேரில் பார்த்ததாக கொலையாளிகள் வாக்குமூலம் தந்துள்ளனர். இதை இந்தூர் குற்றப்பிரிவு காவல் துறை ஏசிபி பூனம் சந்த் யாதவ் தெரிவித்துள்ளார். தனியார் ஊடகம் ஒன்றுக்கு இது குறித்து பூனம் சந்த் யாதவ் கூறியுள்ளார். “ராஜா ரகுவன்சியை கொலை செய்ததாக கைது … Read more

கீழடி ஆய்வு முடிவுகளை அங்கீகரிக்காதது குறித்து மத்திய அமைச்சர் விளக்கம்

சென்னை மத்திய அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத் கீழடி ஆய்வு முடிவுகளை அரசு அங்கீகரிக்காதது குறித்து விளக்கம் அளித்துள்ளார். மத்திய அரசு கீழடி ஆய்வு முடிவுகளை அங்கீகரிக்கவில்லை என்றும், போதிய ஆய்வு முடிவுகள் வந்தபோதும் அதனை மத்திய அரசு அங்கீகரிக்க மறுப்பதாகவும் அரசியல் தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் தொடர்ந்து மத்திய அரசின் மீது குற்றஞ்சாட்டி வருகின்றனர். மத்திய கலாசாரத் துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம், “கீழடி ஆய்வுகள் குறித்து இன்னும் அதிகமான … Read more