ஆந்திர அரசின் ‘ஸ்வர்னாந்திரா’ தொலைநோக்கு திட்டம் 2047: பொருளாதார வளர்ச்சிக்கான வழிகளை காண முதல்வர் தலைமையில் சிறப்பு பணிக் குழு

ஹதராபாத்: ஸ்வர்னாந்திரா தொலைநோக்கு திட்டம் 2047-ன் கீழ் பொருளாதார வளர்ச்சிக்கான வழியைக் காண முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் சிறப்பு பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் முக்கிய தொழிலதிபர்கள் இடம் பெற்றுள்ளனர். ஆந்திராவின் விரைவான வளர்ச்சிக்காக ஸ்வர்னாந்திரா தொலை நோக்கு திட்டம் 2047, மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவால் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் பொருளாதார வளர்ச்சிக்கு விவசாயம், பால்வளம், மீன்வளம், தோட்டக்கலை, தொழில்துறை, வர்த்தகம், சரக்கு போக்குவரத்து, சேவைத் துறைகள் மற்றும் தகவல் தொழில்நுட்பம், சுகாதாரம் மற்றும் மருத்துவ … Read more

இன்று சித்தராமையா ராகுல் காந்தியுடன் சந்திப்பு

டெல்லி இன்று கர்நாடக முதல்வர் சித்தராமையா காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்துள்ளார். இந்த வருட ஐ.பி.எல். சாம்பியன் கோப்பையை வென்ற பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் கடந்த 4-ந்தேதி பாராட்டு விழா நடந்தது.இதில் கலந்துகொள்ள லட்சக்கணக்கானோர் திரண்டு வந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. ஒருவர் மீது ஒருவர் விழுந்து சிலர் கீழே விழுந்தவர்கள் மீது ஏறிச் சென்றனர். இந்த சம்பவத்தில் 11 பேர் உயிரிழந்தனர். இ்தர்கு அரசின் பாதுகாப்பு குறைபாடே … Read more

பாதுகாப்புத்துறையில் தன்னிறைவு: பிரதமர் மோடி பெருமிதம்

புதுடெல்லி, பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்து 11 வருடங்கள் நிறைவடைந்துள்ளன. கடந்த வருடம் ஜூன் மாதம் 9ஆம் தேதி குடியரசுத் தலைவர் மாளிகையில் அவர் பிரதமராக மூன்றாவது முறையாகப் பதவியேற்றார். நேற்றுடன் மூன்றாவது முறை பதவியேற்று ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. இதையடுத்து, தனது எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி, ஆட்சி நிர்வாகம் குறித்து, பல்வேறு துறைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் தொடர்பாகவும் பதிவிட்டுள்ளர். பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது: – கடந்த 11 ஆண்டுகளில் … Read more

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் – 2 பேர் பலி

கீவ், உக்ரைன், ரஷியா இடையேயான போர் இன்று 1 ஆயிரத்து 202வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகள் முயற்சித்தன. ஆனால் அது தோல்வியில் முடிந்தது. அதேபோல், போர் நிறுத்தம் தொடர்பாக ரஷியாவும், உக்ரைனும் நேரடி பேச்சுவார்த்தை நடத்தின. ஆனால், அந்த பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்தது. இதனால் போர் நீடித்து வருகிறது. இதனிடையே, கடந்த 1ம் தேதி ரஷியா மீது உக்ரைன் மிகப்பெரிய அளவில் டிரோன் … Read more

இன்றைய ராசிபலன் | Indraya Rasi palan | June 11 | Today Rasi palan | Astrology | Bharathi Sridhar

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் பாரதி ஶ்ரீதர். Source link

தமிழகத்தில் ஜூன் 16-ம் தேதி வரை சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் இன்று முதல் வரும் 16-ம் தேதி வரை சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் இன்றும் (ஜூன் 11), நாளையும் பெரும்பாலான இடங்களிலும், வரும் 13, 14-ம் தேதிகளில் சில இடங்களிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கி.மீ. வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை … Read more

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ 2034-ல் அமல்படுத்த திட்டம்: நாடாளுமன்றக் கூட்டுக்குழு தலைவர் அறிவிப்பால் சர்ச்சை

புதுடெல்லி: 2034-ம் ஆண்டில் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை மத்திய அரசு அமலுக்கு கொண்டு வரும் என்று நாடாளுமன்றக் கூட்டுக் குழுத் தலைவர் பி.பி.சவுத்ரி அறிவித்துள்ளார். அவரது அறிவிப்பு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது மத்திய அரசு கொண்டு வரவுள்ள திட்டமாகும். இதன்படி, நாட்டில் உள்ள அனைத்து தேர்தல்களையும் ஒரே நாளில் அல்லது ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் நடத்துவதாகும். நாட்டில் உள்ள 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்களின் மக்களவை மற்றும் … Read more

ஸ்டார்லிங்க் நிறுவனம் இந்தியாவில் ஒரு மாத இலவச சேவை வழங்க திட்டம்

டெல்லி ஸ்டார்லிங்க் நிறுவனம் இந்தியாவில் ஒரு மாதம் இலவச சேவை வழங்க திட்டமிட்டுள்ளது.   உலகின் பல்வேறு நாடுகளில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம் செயற்கைக்கோள் அடிப்படையிலான இணைய சேவையை வழங்கி வருகிறது.. இது செயற்கைக்கோள் வழியாக இணைய சேவை அளிக்கப்படுவதால், நகரம், கிராமம் என பாகுபாடு இன்றி அனைத்து பகுதிகளுக்கும் ஒரே சீரான வேகத்தில் கிடைக்கும். கடந்த வாரம் ஸ்டார்லிங்க் நிறுவனத்திற்கு, இந்தியாவில் செயற்கைக்கோள் இணைய சேவைகளை வழங்குவதற்காக, தொலைத்தொடர்புத் துறையிடமிருந்து குளோபல் மொபைல் பெர்சனல் … Read more

பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதிக்குள் தேர் செல்ல முடியுமா? – சாலையை ஆய்வு செய்ய ஐகோர்ட் உத்தரவு

சென்னை: பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை கிராமத்தில் உள்ள ஶ்ரீ வேத மாரியம்மன் கோயில் தேர், பட்டியலின மக்கள் வசிக்கும் தெருக்களில் செல்ல முடியுமா என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை கிராமத்தில் உள்ள ஶ்ரீ வேத மாரியம்மன் கோயிலின் தேர் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதிக்குள் செல்வதற்கு மற்றொரு தரப்பு எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறி, அந்த கிராமத்தை சேர்ந்த வினோத்குமார் … Read more