உள்ளூரில் எலான் மஸ்க்கிடம் திணறும் டிரம்ப் அடுத்ததாக ரஷ்யா மீது மிகப்பெரிய நடவடிக்கைக்கு தயாராகிறார் ?

அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக பதவியேற்றுள்ள டொனால்ட் டிரம்ப் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் அனைத்தும் பூமராங் ஆகும் நிலையில் அடுத்ததாக அவர் ரஷ்யா மீது மிகப்பெரிய நடவடிக்கைக்கு தயாராவதாக அரசியல் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்றுவது, வர்த்தக வரி உயர்வு, அரசு ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பியது என்று பல்வேறு நடவடிக்கைகளில் சிக்கலை சந்தித்து வரும் டிரம்ப் மற்றொரு பக்கம் அரசியல் சீட்டாட்டத்தில் சீட்டே பிடிக்கத் தெரியாத எலான் மஸ்க்கிற்கு தனது நிர்வாகத்தில் சகல அதிகாரம் பொருந்திய … Read more

கர்நாடகா: 'அலைச்சல் இல்லை; வரிசையில் நிற்க வேண்டாம்' – கவனம் பெறும் இல்லம் தேடி மருத்துவம் திட்டம்!

அடித்தட்டு மக்களுக்கும் மருத்துவம் சென்று சேருவதை உறுதி செய்யும் வகையில் கடுமையான நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களது இல்லத்திலேயே சிகிச்சை அளிக்கும் விதமாக இலவச வெளிநோயாளர் பிரிவு (OPD) சேவைகளைத் தொடங்கவிருக்கிறது கர்நாடகா சுகாதாரத் துறை. Ambulance முதன்முறையாக சி.வி. ராமன் நகர் பொது மருத்துவமனையில் இருந்து தொடங்கப்படுகிறது இந்தத் திட்டம். முதற்கட்டமாக புற்றுநோய் நோயாளிகள், முதியவர்கள், மூளை ரத்தக்கசிவு மற்றும் இதய பிரச்னைகள் போன்ற உயிருக்கு ஆபத்தான நிலைமையில் இருப்பவர்களுக்கு இந்த வகையில் சிகிச்சை அளிக்கப்படவிருக்கிறது. இதுபோன்ற … Read more

அன்புமணிக்கு ஆதரவான பாமக வழக்கறிஞர் பாலு பதவி பறிப்பு – ராமதாஸ் நடவடிக்கை

திண்டிவனம்: பாமக தலைவர் அன்புமணிக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த வழக்கறிஞர் பாலுவை, சமூக நீதி பேரவைத் தலைவர் பதவியில் இருந்து கட்சி நிறுவனர் ராமதாஸ் நீக்கம் செய்துள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ஆகியோரிடையே இன்னும் முழுமையான சமரசம் ஏற்படவில்லை. கட்சியின் மூத்த நிர்வாகிகள், குடும்ப உறுப்பினர்களும் பலமுறை முயற்சித்தும், முழு உடன்பாடு எட்டப்படவில்லை. கடந்த 5-ம் தேதி காலை ராமதாஸை அன்புமணி சந்தித்துப் பேசியதாக கூறப்படுகிறது. அதேபோல, ஆடிட்டர் குருமூர்த்தி, அதிமுக முன்னாள் நிர்வாகி … Read more

‘தர்மா, கர்மா…’ – பஹல்காம் தாக்குதலையும், இந்திய பதிலடியையும் விவரித்த ராஜ்நாத் சிங்

டேராடூன்: “பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் மதத்தைக் கேட்டுக் கொன்றனர். நாம் அவர்களின் ‘தர்மா’வை கேட்கவில்லை. மாறாக, அவர்களின் கர்மாவை (செயல்) பார்த்து பதிலடி கொடுத்தோம்” என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், “பிரதமரின் தலைமையில், இந்தியாவின் ஒவ்வொரு பகுதி குறித்தும் நாங்கள் போதுமான கவனம் செலுத்தியிருந்தாலும், எல்லை மற்றும் மலைப்பகுதி மாநிலங்களின் வளர்ச்சியில் நாங்கள் சிறப்பு கவனம் … Read more

நந்தமுரி பாலகிருஷ்ணா நடிக்கும் 'அகண்டா 2: தாண்டவம்' படத்தின் டீஸர் வெளியீடு

‘காட் ஆஃப் மாஸஸ்’ , ‘பத்ம பூஷண்’ டாக்டர் நந்தமுரி பாலகிருஷ்ணா நடிக்கும் ‘அகண்டா 2: தாண்டவம்’ படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது.  

பெங்களூரு மக்கள் அனைத்து விளையாட்டையும் கொண்டாடுவார்கள்.. ராகுல் டிராவிட்!

Rahul Dravid grief: 2025 ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இறுதி போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தையும் வென்றது. 18 வருட காத்திருப்பு என்பதால், கோப்பையை வென்றதை அந்த அணி விமர்சையாக கொண்டாட திட்டமிட்டு பெங்களூருவில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது. ஆனால் அந்நிகழ்ச்சியில் கொண்டாட்டத்திற்கு மாறாக அசம்பாவிதமே ஏற்பட்டது.  ரசிகர்கள் அலைமோதியதால், கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 11 பேர் உயிரிழந்தனர் மற்றும் 56 பேர் காயமடைந்தனர். … Read more

Kubera: "தனுஷ் இந்தக் கதாபாத்திரத்திற்காக தன்னை முழுமையாக மாற்றிக் கொண்டார்!" – நாகர்ஜூனா

சேகர் கமுலா இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் ‘குபேரா’ திரைப்படம் இம்மாதம் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. தனுஷுடன் நாகர்ஜூனா, ராஷ்மிகா உட்பட பலரும் நடித்திருக்கிறார்கள். படத்தின் ரிலீஸையொட்டி ப்ரோமோட் செய்ய அடுத்தடுத்து நிகழ்வுகளை ‘குபேரா’ படக்குழுவினர் நடத்தி வருகின்றனர். ‘குபேரா’வில்.. இன்று மும்பையில் படத்தின் மூன்றாவது பாடல் வெளியீட்டு விழா நடந்தது. ‘தேரே இஷ்க் மெயின்’ படத்தின் படப்பிடிப்பில் தற்போது பங்கேற்று வரும் தனுஷ் படப்பிடிப்பின் இடைவெளியில் வந்து இந்த நிகழ்வில் கலந்துக் கொண்டார். உடனடியாக நடிப்பதற்கு … Read more

வெறும் 100 ரூபாய் போதும்.. OTT தளத்தில் புது படங்களை பார்க்கலாம்

Jio, Airtel and Vi OTT Plan: ஜியோ, ஏர்டெல் மற்றும் விஐ நிறுவனங்கள் பல ரீசார்ஜ் திட்டங்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிரியது. இந்த ரீசார்ஜ் திட்டங்களை நாம் நமது தேவைக்கேற்ப பயன்படுத்தலாம். அந்தவகையில் நீங்கள் ஓடிடியில் வலைத் தொடர்கள் அல்லது திரைப்படங்களைப் பார்க்க விரும்பினால், அதற்கு நீங்கள் தனித்தனி சந்தா எடுக்கத் தேவையில்லை. இந்நிலையில் தற்போது, ஜியோ, ஏர்டெல் மற்றும் விஐ ஆகிய மூன்று நிறுவனங்களும் தங்கள் பயனர்களுக்கு வெறும் ரூ.100க்கு OTT இன் பலனை … Read more

அணு ஆயுதங்கள் தொடர்புடைய இடங்கள் மீதான உக்ரைன் தாக்குதலுக்கு ‘மிகப்பெரிய பதிலடி’ கொடுக்க ரஷ்யா திட்டம் : பெபே எஸ்கோபர்

ரஷ்யாவின் அணு ஆயுத தொடர்புடைய இடங்கள் மீது உக்ரைன் நடத்திய தாக்குதலுக்கு ‘மிகப்பெரிய பதிலடி’ கொடுக்க ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக புவிசார் அரசியல் ஆய்வாளர் பெபே எஸ்கோபர் கூறியுள்ளார். கடந்த வாரம் ரஷ்யாவின் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதலில் ரஷ்யா விமானங்கள் சேதமடைந்தது இந்த தாக்குதலை உக்ரைன் மேற்கொண்டதாகத் தெரிவித்தது. இந்த நிலையில், ரஷ்யா மீதான தாக்குதலில் CIA மற்றும் MI6 – அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து உளவுத்துறை நிறுவனங்களின் நேரடி தொடர்பு இருப்பதாக ரஷ்யா சந்தேகிப்பதாக எஸ்கோபர் … Read more

TVK : 'விஜய்யை 14 ஆண்டுகளாகத் தெரியும்…' – தவெக-வில் இணைந்த முன்னாள் IRS அருண் ராஜ் பேட்டி

தமிழக வெற்றிக் கழகத்தில் புதிதாக இணைந்திருக்கிறார் விருப்ப ஓய்வு பெற்ற ஐ.ஆர்.எஸ் அதிகாரி அருண் ராஜ். இணைப்பு நிகழ்விலேயே அவருக்கு கொள்கைப் பரப்புப் பொதுச்செயலாளர் பதவியை கொடுத்து அலங்கரித்திருக்கிறார் விஜய். யார் இந்த அருண் ராஜ்? அவரின் பின்னணி என்ன? அவரைச் சுற்றி வட்டமடிக்கும் கேள்விகளோடு பேட்டிக்காக அணுகினோம். நிறையவே பேசினார். TVK Arun Raj ஐ.ஆர்.எஸ் பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்று விஜய்யின் கட்சியில் இணைந்திருக்கிறீர்கள். யார் இந்த அருண் ராஜ்? உங்களைப் பற்றிய பின்னணியை … Read more