மாநிலங்களவைத் தேர்தல்: கமல்ஹாசன் உள்பட 6 வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வு!

சென்னை: தமிழகத்தில் மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று (ஜூன் 10) நடைபெற்ற நிலையில், அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 6 பேரின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன என்றும், 7 சுயேச்சைகளின் வேட்புமனுக்கள் செல்லாதவை என்றும் தேர்தல் நடத்தும் அதிகாரி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக சட்டப் பேரவையின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களை வாக்காளர்களாகக் கொண்டு மாநிலங்களவைக்கு 6 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க ஜூன் 19-ல் நடைபெறும் தேர்தலுக்காக வரப்பெற்ற வேட்பு மனுக்கள் இன்று … Read more

“இந்தியப் படைகளின் வீரத்தை அரசியலாக்க மோடியும் பாஜகவும் முயற்சி” – மம்தா பானர்ஜி சாடல்

கொல்கத்தா: ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையின்போது, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியா தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்தது என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேலும், மோடியும் பாஜகவும் தேர்தல்களைக் கருத்தில் கொண்டு ஆயுதப் படைகளின் வீரத்தை அரசியலாக்க முயற்சிப்பதாக அவர் சாடினார். மேற்கு வங்க சட்டப்பேரவையில் இது தொடர்பாக பேசிய மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, “பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும். நாட்டு மக்களுக்குப் பாதுகாப்பு வழங்க மத்திய அரசு தவறியதற்காக … Read more

இந்திய மாணவருக்கு கைவிலங்கிட்ட சம்பவம்: அமெரிக்கா கூறும் விளக்கம் என்ன?

புதுடெல்லி: “எங்கள் நாட்டுக்குள் உரிய ஆவணங்களுடன் சட்டபூர்வமாக வருபவர்களை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால், விசா அத்துமீறல்கள் அனுமதிக்கப்படாது” என்று இந்தியாவுக்கான அமெரிக்க தூதரகம் எச்சரித்துள்ளது. அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பொறுப்பேற்றதிலிருந்து சட்டவிரோத குடியேற்றங்களுக்கு எதிரான நடவடிக்கையை முடுக்கிவிட்டுள்ளார். அந்த வகையில் சட்டவிரோத குடியேறிகள், பாலஸ்தீன ஆதரவு நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் மாணவர்கள் என பல்வேறு தரப்பினரும் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். சட்டவிரோதமாக குடியேறியது உள்ளிட்ட காரணங்களுக்காக 1000+ இந்தியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்நிலையில், அமெரிக்காவின் நேவார்க் விமான நிலையத்தில், இந்திய மாணவர் … Read more

சின்மயிக்கு ஆதரவாக பேசிய வைரமுத்துவின் Ex நண்பர்! என்ன சொல்லியிருக்கிறார் பாருங்க..

Gangai Amaran Stands With Singer Chinmayi : பாடகி சின்மயிக்கு ஆதரவாக வைரமுத்துவின் நண்பர் பேசியிருக்கும் விஷயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.  

14 வருட போராட்டம்… எ.வ. வேலு மீதான வழக்கு ரத்து – அடுத்த குறி இவர் தானா…?

EV Velu Case: தேர்தல் நடத்தை விதிமுறை வழக்கில் உரிய ஆதாரங்கள் இல்லாததால் , எ.வ. வேலு உள்ளிட்ட 7 பேரையும் விடுவிப்பதாக திருவண்ணாமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்திய அணியில் இடம் இல்லை.. அதனால் இங்கிலாந்து செல்லும் சிஎஸ்கே வீரர்!

இந்திய அணியின் வீரரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு இந்திய டெஸ்ட் அணியில் இடம் கிடைக்கவில்லை. இந்த நிலையில், அவர் இங்கிலாந்தில் நடக்கும் கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் விளையாட உள்ளார்.  அவர் கவுண்ட் டெஸ்ட் போட்டிகளுக்கும் ஒருநாள் கோப்பைக்கும் யார்க்ஷயர் அணியுடன் இணைய உள்ளார். அவர் வரும் ஜூலை மாதம் ஸ்கார்பரோவில் சர்ரேக்கு எதிரான கவுண்டி போட்டிக்கு முன்பாக யார்க்ஷயர் … Read more

21 வயது விடலைப் பயனுடனான காதலால் அறிவிழந்த 25 வயது பெண்… 30 வயது கணவனை தேனிலவுக்கு அழைத்துச் சென்று கொலை…

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த ராஜா ரகுவன்ஷி (வயது 30) – சோனம் (வயது 25) ஆகிய இருவருக்கும் மே 11ம் தேதி திருமணம் நடைபெற்ற நிலையில் மே மாதம் 20ம் தேதி இந்த இளம்ஜோடி தேனிலவுக்குச் சென்றது. அசாம் மாநிலத்தில் உள்ள காமாக்யா கோயிலுக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டுச் சென்ற இவர்கள் பின்னர் அங்கிருந்து திடீரென மேகாலயா மாநிலம் ஷில்லாங் சென்றுள்ளனர். இந்த நிலையில் அவர்கள் இருவரையும் மே 23க்குப் பிறகு தொடர்பு கொள்ள … Read more

"ஒவ்வொரு கேப்டனும் தோனியைப் போல இருக்க விரும்புகிறார்கள்; ஆனால்…" – ஆஸி., முன்னாள் கோச் புகழாரம்!

உலக கிரிக்கெட் அரங்கில் இந்திய அணியை உச்சத்துக்குக் கொண்டுசென்ற கேப்டன்களில் முக்கியமானவரான தோனியை, தங்களின் ‘Hall of Fame’ வீரர்களின் பட்டியலில் சேர்த்து கவுரப்படுத்தியிருக்கிறது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC). ஐ.சி.சி-யின் Hall of Fame பட்டியலில் இணையும் 11-வது இந்திய வீரரான தோனிக்குப் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். தோனி – ICC Hall of Fame அந்த வரிசையில், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரும், முன்னாள் பயிற்சியாளருமான ஜஸ்டின் லாங்கர் தோனியைப் புகழ்ந்திருக்கிறார். ஐ.சி.சி … Read more

“தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சி மலரும்” – தினகரன்

சிவகங்கை: “தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சியை கொண்டு வருவோம்,” என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். சிவகங்கை அருகே நகரம்பட்டியில் சுதந்திர போராட்ட வீரர் வாளுக்குவேலி அம்பலம் பிறந்ததினத்தை யொட்டி, இன்று (ஜூன் 10) அவரது சிலைக்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இந்திய அளவில் பாஜக முக்கியமான கட்சி. தமிழகத்தில் … Read more

“மக்களவை துணை சபாநாயகரை தேர்ந்தெடுக்கும் நடைமுறையை தொடங்குவீர்” – பிரதமருக்கு கார்கே கடிதம்

புதுடெல்லி: மக்களவை துணை சபாநாயகரைத் தேர்ந்தெடுப்பதற்கான நடைமுறையை விரைவாக தொடங்குமாறு பிரதமர் மோடியை, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு கார்கே எழுதியுள்ள கடிதத்தில், “மக்களவையில் துணை சபாநாயகர் பதவி காலியாக இருப்பது தொடர்பாக நிலவும் கவலைக்குரிய விஷயத்தை உங்கள் கவனத்துக்குக் கொண்டுவருவதற்காக எழுதுகிறேன். அரசியலமைப்பு ரீதியாக துணை சபாநாயகர், சபாநாயகருக்குப் பிறகு அவையின் இரண்டாவது மிக உயர்ந்த தலைமை அதிகாரி ஆவார். அரசியலமைப்பின் 93-வது பிரிவின்படி, மக்களவை சபாநாயகர் மற்றும் … Read more