அமெரிக்காவில் கைதான இன்ஸ்டா பிரபலம் Khaby Lame; "விசா விதிமுறை மீறில்" – அதிகாரிகள் சொல்வது என்ன?

கபே லேம் கைது உலகளவில் சமூக ஊடகத்தின் மூலம் வைரலான கபே லேம் ஜூன் 6ஆம் தேதி அமெரிக்க குடியேற்றம் மற்றும் சுங்க அமலாக்கப் பிரிவால் (ICE) கைது செய்யப்பட்டார். இந்தச் செய்தி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்தக் கைது குறித்து அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கப் பிரிவு விளக்கமளித்திருக்கிறது. இது தொடர்பாக அது வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “அமெரிக்க குடியேற்றம் மற்றும் சுங்க அமலாக்கப் பிரிவு ஜூன் 6-ம் தேதி நெவாடாவின் லாஸ் வேகாஸில் உள்ள … Read more

“2026 சட்டப்பேரவை தேர்தலில் சிபிஎம் கூடுதல் இடங்களில் போட்டியிட வேண்டும்” – பெ.சண்முகம்

சென்னை: “2026 சட்டப்பேரவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூடுதல் இடங்களில் போட்டியிட வேண்டும். சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை பலத்தை அதிகரிக்க வேண்டும். 2021 தேர்தலில் திமுக ஒதுக்கிய குறைந்த தொகுதிகளை ஏற்றுக்கொண்டோம். அது மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டது கிடையாது. அத்தகைய அணுகுமுறை இந்த தேர்தலில் தொடரக்கூடாது.” என அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார். திமுக கூட்டணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தீர்மானங்கள், 2026 தேர்தல் எனப் பல்வேறு விஷயங்கள் குறித்தும் அவர் அளித்த ஊடகப் பேட்டியில் … Read more

70 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்த பின் 90 வயதில் திருமணம் செய்து கொண்ட ஜோடி

துங்கர்பூர்: ராஜஸ்தான் மாநிலம் துங்கர்பூர் மாவட்டத்தில் கலந்தூர் என்ற பழங்குடியின கிராமம் உள்ளது. இங்கு வசிக்கும் பழங்குடியின மக்களின் வழக்கப்படி வயது வந்த ஆணும், பெண்ணும் அவர்கள் விருப்பப்படி வாழ்க்கைத் துணையை தேர்வு செய்து கொள்ளலாம். முறைப்படி திருமணம் செய்து கொள்வது கட்டாயம் அல்ல. அதனால் இந்த கிராமத்தைச் சேர்ந்த ராமா பாய் கராரி (95) என்பவரும், ஜீவாலி தேவி (90) கடந்த 70 ஆண்டுகளாக திருமணம் செய்து கொள்ளாமலேயே வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு 8 குழந்தைகள், … Read more

‘கிரேட்டா தன்பெர்க் கோப மேலாண்மை வகுப்புக்குச் செல்ல வேண்டும்’ – ட்ரம்ப் அறிவுரை

நியூயார்க்: இஸ்ரேல் ராணுவத்தால் கடத்தப்பட்டதாக கிரேட்டா தன்பர்க் குற்றஞ்சாட்டிய நிலையில், ‘தன்பர்க் கோப மேலாண்மை வகுப்புகளுக்கு செல்ல வேண்டும்’ என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவுரை வழங்கியுள்ளார். காசாவை நோக்கி நிவாரண கப்பலில் சென்ற தனது குழுவினருடன் கடத்தப்பட்டதாக சமூக செயற்பாட்டாளர் கிரேட்டா தன்பெர்க் நேற்று சமூக ஊடகங்களில் ஒரு வீடியோவை வெளியிட்டார். இதனை இஸ்ரேல் உடனடியாக மறுத்தது. நேற்று (திங்கள்கிழமை) அதிகாலை காசாவை நோக்கிச் சென்றபோது, ​​மேட்லீன் நிவாரணக் கப்பலை இஸ்ரேலியப் படைகள் இடைமறித்தன. … Read more

அதுக்குள்ள ஓடிடியில் வெளியாகும் தக் லைஃப்? எந்த தளத்தில் எப்போது பார்க்கலாம்?

Thug Life Movie OTT Release : மணிரத்னம்-கமல் கூட்டணியில் உருவான தக் லைஃப் திரைப்படம்,  விரைவில் ஓடிடியில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

அருணாசலேஸ்வரர் கோவிலில் அதிர்ச்சி சம்பவம்! அசைவம் சாப்பிட தம்பதி கைது?

திருவண்ணாமலையில் கோவில் வளாகத்தில் அசைவம் சாப்பிட்ட தம்பதி. கோவில் முழுக்க புனித நீர் தெளிக்கப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க நடைபெற்ற பிராயச்சித்த பூஜை.

சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்ட புத்தகப் பூங்காவை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

சென்னை:  சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்ட புத்தகப் பூங்காவைமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இந்த புத்தக பூங்காவில்,   10 ஆயிரம் புத்தகங்கள் இடம்பெறும் வகையில்  ரூ.1.85 கோடி செலவில்  அமைக்கப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில்நிலையத்தில் புத்தகப் பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பள்ளிக்கல்வித் துறை சார்பில் ரூ.1.85 கோடியில் கட்டப்பட்டுள்ள  இந்த  புத்தகப் பூங்காவை  இன்று பயனர்கள் பயன்படுத்தும் வகையில்,  முதல்வர் திறந்து வைத்தார். இதையடுத்து தமிழ்நாடு பாடநூல், … Read more

Gold Price Today: 'தொடர்ந்து குறையும் தங்கம் விலை!' – இன்றைய விலை நிலவரம்!

நேற்றை விட… இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.10-உம், பவுனுக்கு ரூ.80-உம் குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்துள்ளது. தங்கம் விலை கடந்த நான்கு நாள்களாக குறைந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு கிராம் தங்கம் இன்று ஒரு கிராம் தங்கம் (22K) ரூ.8,945-க்கு விற்பனையாகி வருகிறது. ஒரு பவுன் தங்கம்… இன்று ஒரு பவுன் தங்கம் (22K) ரூ.71,560-க்கு விற்பனையாகி வருகிறது. ஒரு கிராம் வெள்ளி விலை இன்று ஒரு கிராம் வெள்ளியின் விலை … Read more

சென்னை | ஆட்டோவில் பயணி தவறவிட்ட நகையை ஒப்படைத்த ஓட்டுநர்

சென்னை: பயணி தவறவிட்ட தங்க நகைகளை, ஆட்டோ ஓட்டுநர் நேர்மையுடன் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அந்த நகைகள் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டன. சென்னை அரும்பாக்கம், எம்எம்டிஏ காலனியில் வசிப்பவர் சக்திவேல் (53). இவர், குடும்பத்துடன் அவர் திருப்பூர் சென்றுவிட்டு கடந்த 5-ம் தேதி இரவு பேருந்தில் சென்னைக்கு வந்தார். சாலிகிராமம் அருகே 100 அடி சாலையில் இறங்கி 3 பைகளுடன் அங்கிருந்த ஓர் ஆட்டோவில் ஏறி எம்எம்டிஏ காலனியில் உள்ள அவரது வீட்டினருகே இறங்கி, வீட்டுக்கு சென்று பார்த்தபோது … Read more

உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பல் விழிஞ்சம் துறைமுகம் வருகை

கொச்சி: உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பல் எம்எஸ்சி ஐரினா, கேரளாவின் விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்துக்கு நேற்று வந்தடைந்தது. . உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பல்களில் ஒன்று எம்எஸ்சி ஐரினா. இது 24,346 டிஇயு (20 அடிக்கு சமமானது) திறன் கொண்டது. 26 அடுக்குகளைக் கொண்ட இந்த பிரம்மாண்ட கப்பல் நேற்று காலை 8 மணியளவில் கேரளாவில் உள்ள விழிஞ்சம் சர்வதேச துறைமுகம் வந்தடைந்தது. அப்போது பாரம்பரிய முறைப்படி தண்ணீரை பீய்ச்சி அடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. இது இன்று … Read more