இலங்கையில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் அகதிகளாக தனுஷ்கோடி வருகை

ராமேஸ்வரம்: இலங்கையிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தனுஷ்கோடிக்கு அகதிகளாக வந்தனர். அவர்கள் அனைவரும் மண்டபம் முகாமில் தங்கவைக்கப்பட்டனர். இலங்கையில் உள்ள கண்டி மாவட்டம், கம்பளை பகுதியைச் சேர்ந்த முகம்மது கியாஸ் (43), மனைவி பாத்திமா பர்ஹானா (34) இவர்களின் குழந்தைகள் முகம்மது யஹ்யா (12), அலிஷா (4), அமிரா (4) ஆகிய 5 பேர் இலங்கையில் உள்ள தலைமன்னாரிலிருந்து பைபர் படகில் புறப்பட்டு தனுஷ்கோடி கடல் பகுதியில் இன்று (ஜூன் 9) அதிகாலை வந்து … Read more

அசாமில் கால்நடை பாதுகாப்பு சட்டத்தை மீறி இறைச்சி கூடங்கள் நடத்திய 16 பேர் கைது

புதுடெல்லி: அசாமில் கடந்த 2021-ம் ஆண்டு கால்நடை பாதுகாப்பு சட்டம் கொண்டு வரப்பட்டது. அதன்படி, மாநிலத்தில் இறைச்சிக்காக சட்டவிரோதமாக கால்நடைகள் வெட்டப்படுவது தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், பொது இடங்கள், ஓட்டல்கள், பொது நிகழ்ச்சிகளில் மாட்டிறைச்சிக்கு முழு தடையும் கடந்த ஆண்டு கொண்டு வரப்பட்டது. இந்நிலையில், 2 நாட்களுக்கு முன்னர் பக்ரித் பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. அப்போது அசாம் மாநிலத்தில் பல இடங்களில் சட்டவிரோதமாக இறைச்சி கூடங்கள் செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். … Read more

அடுத்த  7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை: தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. 09-06-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் … Read more

'11 ஆண்டுகளில் இந்தியாவின் அரசியல் கலாசாரத்தை பிரதமர் மோடி மாற்றிவிட்டார்' – ஜே.பி.நட்டா

புதுடெல்லி, கடந்த ஆண்டு ஜூன் 9-ந்தேதி நரேந்திர மோடி 3-வது முறை இந்தியாவின் பிரதமராக பதவியேற்றார். இதன்படி இன்றைய தினம் மோடி பிரதமராக பதவியேற்று ஓராண்டு நிறைவடைந்துள்ளது. அதே போல், ஒட்டுமொத்தமாக மோடி பிரதமராக பதவியேற்று 11 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்நிலையில், 11 ஆண்டுகளில் இந்தியாவின் அரசியல் கலாசாரத்தை பிரதமர் மோடி மாற்றிவிட்டார் என மத்திய மந்திரி ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார். இது குறித்து டெல்லி பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது அவர் கூறியதாவது;- “பிரதமர் … Read more

டி.என்.பி.எல். கிரிக்கெட்; சேலம் ஸ்பார்டன்ஸ் – திருச்சி அணிகள் நாளை மோதல்

கோவை, 9-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் முதற்கட்ட லீக் சுற்று ஆட்டங்கள் கோவையில் உள்ள எஸ்.என்.ஆர். கல்லூரி மைதானத்தில் நடந்து வருகிறது. இதில பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும். இந்நிலையில், இந்த தொடரில் நாளை நடைபெறும் 7வது லீக் ஆட்டத்தில் சேலம் ஸ்பார்டன்ஸ் – திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் மோத உள்ளன. சேலம் … Read more

காசாவில் உணவு வாங்க சென்றவர்கள் மீது துப்பாக்கி சூடு- 6 பேர் பலியானதாக தகவல்

இஸ்ரேல் மீது கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கொடூர தாக்குதல் நடத்தியது. இதில் 1200 பேரை கொன்று குவித்தது. 251 பேரை பணய கைதிகளாக சிறை பிடித்து சென்றது. இதனை தொடர்ந்து காசாவுக்கு எதிரான போரை இஸ்ரேல் தொடங்கியது. ஓராண்டுக்கு மேலாக நடந்து வரும் இந்த தாக்குதலில், இதுவரை 54,900 பாலஸ்தீனர்கள் உயிரிழந்து உள்ளதாகவும், 1.25 லட்சம் பேர் காயமடைந்திருப்பதாகவும் காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது. இடையில் போர் நிறுத்த … Read more

வேளாண் தொழிலுக்கான கடன்களில் சிபில் ஸ்கோர் முறையை கைவிட நடவடிக்கை தேவை: விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

சென்னை: வேளாண் தொழிலுக்கான கடன்களில் சிபில் ஸ்கோர் முறையை கைவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் எஸ்.குணசேகரன், பொதுச்செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி ஆகியோர் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக நேற்று இருவரும் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: விவசாயிகளுக்கு வணிக வங்கிகள் பின்பற்றுகிற நடைமுறையின்படி, இனி கூட்டுறவு கடன் பெறுவோர்களின் சிபில் ஸ்கோர் பார்த்து தகுதி உள்ளோருக்கு மட்டும் கடன் வழங்கிட வேண்டும் என்ற உத்தரவை தமிழ்நாடு கூட்டுறவுத்துறை பதிவாளர் கடந்த மாதம் 26-ம் தேதி … Read more

நானும் சமாதியில் தங்கி விடுகிறேன்: பெங்களூரு கூட்டநெரிசலில் ஒரே மகனை இழந்த தந்தை வேதனை

பெங்களூரு: பெங்களூரு கூட்ட நெரிசலில் ஒரே மகனை இழந்த தந்தை, மகனின் சமாதியில் கண்ணீர் சிந்தி கதறி அழும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி (ஆர்சிபி) வெற்றி பெற்றது. இதன் வெற்றி விழா கடந்த 4-ம் தேதி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்தது. அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பெண்கள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர். இதில் பூமிக் லட்சுமணனும் (21) … Read more

மதுரையில் பேருந்து ஓட்டுனருக்கு மெமோ கொடுக்க ஆபீஸ் ரூமுக்கு இழுத்துச் சென்று செருப்பால் அடித்த உதவி மேலாளர் சஸ்பெண்டு… வீடியோ…

மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்து ஓட்டுனரை செருப்பால் அடித்த ஆரப்பாளையம் பேருந்து நிலைய உதவி மேலாளர் மாரிமுத்து தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மே 7ம் தேதி பக்ரீத் விடுமுறையை மற்றும் வார இறுதி விடுமுறையை அடுத்து தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் இருந்து ஏராளமான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று திரும்பினர். தவிர, முகூர்த்த நாளாக இருந்ததால் கூட்டம் அலைமோதிய நிலையில் கடந்த 5 நாட்களில் மட்டும் தமிழகம் முழுவதும் 6 லட்சம் பேர் … Read more