இன்று தங்கம் விலை மேலும் சரிவு

  சென்னை இன்று தங்கம் விலை மேலும் சரிந்துள்ளது.   சில நாட்களாகவே தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடனேயே காணப்பட்டு வரும் நிலையில், நேற்று முன் தினம் தங்கம் விலை அதிரடியாக குறைந்தது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,200 குறைந்து ரூ.71,840-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.150 குறைந்து ரூ.8,980-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.3 அதிகரித்து ரூ.117-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,17,000-க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று … Read more

கேரளா: பேப்பூர் கடற்கரையில் சரக்குக் கப்பலில் தீ விபத்து; 22 பணியாளர்களின் நிலை என்ன?

கேரள மாநிலம், கோழிக்கோட்டில் உள்ள பேப்பூர் கடற்கரையில் சரக்கு கப்பல் தீப்பிடித்துள்ளது. தீ பிடித்த சரக்கு கப்பலிலிருந்து சுமார் 22 பணியாளர்களை மீட்கும் பணியில் இந்திய கடலோர காவல் படை இறங்கியுள்ளது. 650க்கும் மேற்பட்ட கொள்கலன்கள் உடன் கொழும்பிலிருந்து மும்பை நோக்கி இந்த சரக்கு கப்பல் சென்று கொண்டிருந்ததாக கடலோர காவல் படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விபத்துக்கான காரணம் கண்டறியப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர் கொடியுடன் அடையாளம் காணப்பட்ட அந்த கப்பலில் இருந்து 20 கொள்கலன்கள் கடலில் விழுந்ததாக … Read more

ராமநாதபுரம் அருகே காரும் வேனும் மோதி விபத்து – சிறுமி உள்பட இருவர் உயிரிழப்பு

ராமநாதபுரம்: ராமேசுவரத்துக்கு தரிசனத்திற்காக சென்ற காரும் வேனும் மோதிக்கொண்ட விபத்தில் ஐடி ஊழியர் மற்றும் சிறுமி ஆகிய இருவர் உயிரிழந்தனர். மேலும் 18 பேர் காயமடைந்தனர். கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் இருந்து ராமேசுவரத்துக்கு சாமி தரிசனம் செய்வதற்காக வந்த சுற்றுலா வேனும், ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் இருந்து ராமேசுவரம் சென்ற காரும் இன்று அதிகாலை ஒன்றை ஒன்று முந்த முயன்ற போது ராமநாதபுரத்தை அடுத்த நதிப்பாலம் பகுதியில் திடீரென கட்டுப்பாட்டை இழந்து மோதிக்கொண்டன. இதில் வேனில் வந்த … Read more

சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் வைத்த ஐஇடி குண்டு வெடித்ததில் ஏஎஸ்பி உயிரிழப்பு

ராய்பூர்: சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் இன்று (ஜூன் 9, 2025) மாவோயிஸ்டுகளால் வைக்கப்பட்டிருந்த ஐஇடி குண்டு வெடித்ததில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆகாஷ் ராவ் கிரிபுஞ்சே உயிரிழந்தார். மேலும் பல அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் காயமடைந்தனர். சத்தீஸ்கர் துணை முதல்வர் விஜய் சர்மா, ஏஎஸ்பி ஆகாஷ் ராவ் கிரிபுஞ்சே கொல்லப்பட்டதை உறுதிப்படுத்தி, அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார். முன்னதாக, குண்டுவெடிப்பில் கிரிபுஞ்சே படுகாயமடைந்ததாக காவல்துறை தெரிவித்திருந்தது. இதுகுறித்து பேசிய துணை முதல்வர் விஜய் சர்மா, “கோண்டா-எர்ரபோரா சாலையில் … Read more

தமிழ்நாட்டில் எங்குமே பெண்கள் பாதுகாப்பாக வாழ முடியாத நிலை.. இதுதான் திமுக அரசின் சாதனையா? – அன்புமணி ராமதாஸ்

Tambaram sexual assualt: தமிழ்நாட்டில் மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என்றால் இந்த அரசு அகற்றப்பட வேண்டும். அதற்கான முயற்சிகளை பாட்டாளி மக்கள் கட்சி தீவிரமாக முன்னெடுக்கும் என அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

ரிஷப் பண்டுக்கு காயம்… இந்திய அணிக்கு பெரிய அப்செட்… ஆனால் இந்த வீரருக்கு சூப்பர் வாய்ப்பு

England vs India Test Series: இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் – டெண்டுல்கர் டெஸ்ட் தொடர் (Anderson Tendulkar Series) மீது தற்போது பலத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.  கௌதம் கம்பீர் (Gautam Gambhir) தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்ற பின்னர் உள்நாட்டில் நியூசிலாந்து அணிக்கு எதிராகவும், ஆஸ்திரேலியாவில் நடந்த பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரிலும் இந்திய அணி மிக மோசமான தோல்வியை பதிவு செய்தது. அதன் பிறகு விராட் … Read more

JEE தேர்வு எழுதிய ChatGPT: மார்க் பார்த்து மயங்கிய மாணவர்கள், AIR எவ்வளவு தெரியுமா?

ChatGPT Latest News: ஐஐடி மற்றும் இன்னும் சில இந்திய பொறியியல் கல்லூரிகளுக்கான நுழைவுத் தேர்வான JEE தேர்வு, உலகின் மிக கடினமான தேர்வுகளில் ஒன்றாக கருதப்படுகின்றது. ChatGPT JEE தேர்வு எழுதினால் என்ன நடக்கும்? இதை பலர் கற்பனை செய்து பார்த்திருப்பார்கள். ஆனால், இப்போது இதை ஒரு மாணவர் சோதித்தே பார்த்துவிட்டார். அவரது சோதனையின் முடிவு பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. CHatGPT பற்றிய இந்த லேட்டஸ்ட் அப்டேட் கல்வி உலகில் அதிர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. OpenAI … Read more

மேகாலயாவுக்கு தேனிலவு சென்ற புது ஜோடி… கணவரை கொன்றதாக மனைவி கைது…

மேகாலயா மாநிலம் சிரபுஞ்சி அருகே உள்ள பள்ளத்தாக்கு ஒன்றில் கடந்த வாரம் ஆணின் சடலம் ஒன்று மீட்கப்பட்ட வழக்கில் கணவரை கொன்றதாக மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். மேகாலயாவின் கிழக்கு காசி ஹில்ஸ் மாவட்டத்தில் நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து அம்மாநில போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். அதேவேளையில், மத்திய பிரதேச மாநில இந்தூரில் இருந்து மேகாலயாவுக்கு தேனிலவு சென்ற ராஜா ரகுவன்ஷி மற்றும் சோனம் தம்பதியர் காணாமல் போனதாக புகாரளிக்கப்பட்டது. சோனம் மற்றும் ராஜா … Read more

நயன்தாரா – விக்னேஷ் சிவன்: "என் ஆன்மா விரும்பிய அனைத்தும் நீ தான்" – திருமண நாள் பகிர்வு!

நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியினர் இன்று தங்களது திருமண நாளை கொண்டாடி வருகின்றனர். திருமண நாள் ஸ்பெஷலாக கணவர் மற்றும் குழந்தைகள் இருக்கும் புகைப்படங்களை நெகிழ்ச்சியான வரிகளுடன் பகிர்ந்துள்ளார் நயன்தாரா. அந்த கேப்ஷன்… “எங்களை வேறு எப்படி விவரிப்பது என்று தெரியவில்லை ♥️ என் ஆன்மா விரும்பிய அனைத்தும் நீ தான்.. நாம் இருவரில் இருந்து நான்கு பேராக இருக்கிறோம், வேறு என்ன வேண்டும்… காதல் எப்படி இருக்க வேண்டும் என்பதை நீங்கள் எனக்குக் காட்டினீர்கள்! … Read more

சென்னை பல்கலைக்கழகத்தில் 10,000 பூர்வீக மரக்கன்றுகள் நடல்

உலக சுற்றுச்சூழல் தினத்தைக் கொண்டாடும் விதமாக கரூர் வைஸ்யா வங்கி (KVB), சென்னைப் பல்கலைக்கழகம் – கம்யூனிட்ரீ தொண்டு நிறுவனம் இணைந்து பல்கலைக்கழக வளாகத்தில் 10,000 பூர்வீக மரக்கன்றுகளை நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னை நகரின் பசுமையை மேம்படுத்துவதையும், நீண்டகால பல்லுயிர் பெருக்கத்தையும் இந்நிகழ்வு நோக்கமாகக் கொண்டுள்ளது. வரலாற்று சிறப்புமிக்க சென்னைப் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள், சமூக தன்னார்வலர்கள், பிற சமூக உறுப்பினர்கள் உற்சாகமாகப் பங்கேற்றனர். நிகழ்வில் கரூர் வைஸ்யா … Read more