உளவு பார்க்க இந்திய யூடியூபர்களை வளைத்து போட்ட பாக். முன்னாள் எஸ்.ஐ. – விசாரணையில் திடுக்கிடும் தகவல்

புதுடெல்லி: ​பாகிஸ்​தானுக்கு உளவு பார்த்த குற்​றத்​துக்​காக பிரபல யூடியூபர் ஜோதி மல்​கோத்​ராவை, ஹரி​யானா போலீ​ஸார் சமீபத்​தில் கைது செய்​தனர். கடந்த வாரம் மற்​றொரு யூடியூபர் ஜஸ்​பிர் சிங் என்​பவர் கைது செய்​யப்​பட்​டார். இரு​வரும் இந்​தி​யா​வின் ராணுவ முகாம்​கள், நடமாட்​டங்​கள் குறித்த தகவல்​களை பாகிஸ்​தானின் உளவு அமைப்​பான ஐஎஸ்​ஐ.க்கு பகிர்ந்​தது தெரிய வந்​துள்​ளது. மேலும், டெல்​லி​யில் உள்ள பாகிஸ்​தான் தூதரக அதி​காரி டேனிஷ் என்​பவருடன் தொடர்​பில் இருந்​ததும், அவரது அழைப்​பின் பேரில் பாகிஸ்​தானுக்கு பல முறை சென்று வந்​ததும் … Read more

மராட்டிய தேர்தலில் முறைகேடா? மக்கள் தீர்ப்பை ராகுல்காந்தி அவமதிக்கிறார் – தேவேந்திர பட்னாவிஸ்

மும்பை, மராட்டியத்தில் கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. இதற்கிடையே மராட்டிய தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவரும் காங்கிரஸ் முன்னாள் தலைவருமான ராகுல்காந்தி குற்றம்சாட்டினார். இந்தநிலையில் மராட்டிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறியதாவது:- மக்களை சமாதானப்படுத்தமுடியாவிட்டால் அவர்களை குழப்ப வேண்டும் என்ற கொள்கையை ராகுல்காந்தி ஏற்றுக்கொண்டுள்ளார். மக்களால் காங்கிரஸ் நிராகரிக்கப்பட்டுவிட்டது. அதனால்தான் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை குறை கூறி ஜனநாயகத்தின் பிம்பத்தை அவர்கள் இப்போது கெடுக்கிறார்கள். … Read more

இந்திய ஏ அணிக்கு எதிரான டெஸ்ட்: முதல் இன்னிங்சில் இங்கிலாந்து லயன்ஸ் 327 ரன்களில் ஆல் அவுட்

நார்த்தம்டான், இந்தியா ஏ – இங்கிலாந்து லயன்ஸ் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டி (4 நாள் ஆட்டம்) நார்த்தம்டானில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 89.3 ஓவர்களில் 348 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 116 ரன்கள் அடித்தார். இங்கிலாந்து தரப்பில் கிறிஸ் வோக்ஸ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து லயன்ஸ் அணி … Read more

நிவாரண பொருட்களுடன் கடல்வழியாக காசாவுக்கு செல்லும் கிரேட்டா தன்பெர்க் – இஸ்ரேல் கண்டனம்

ஜெருசலேம், ஹமாஸ் ஆயுதக்குழுவினரை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் காசா முனையில் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் தாக்குதல்களால் காசா முற்றிலும் நிலைகுலைந்துள்ளது. இதுவரை சுமார் 54 ஆயிரத்துக்கும் அதிகமான பாலஸ்தீன் மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீட்டையும், வாழ்வாதாரத்தையும் இழந்துள்ளனர். காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என்று பல்வேறு சர்வதேச நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. இருப்பினும் ஹமாஸ் அமைப்பினர் வசம் இருக்கும் இஸ்ரேலிய பிணைக் கைதிகள் … Read more

தமிழகத்தில் நாளை 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் நாளை 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் நிலவும் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று (ஜூன் 9) முதல் வரும் 14-ம் தேதி வரை சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை (ஜூன் 10) கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், … Read more

சிந்து நதி ஒப்பந்தம் நிறுத்தி வைப்பு விவகாரம்: இந்தியாவுக்கு பாகிஸ்தான் தொடர்ந்து 4 கடிதம்

சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைக்கும் முடிவை மறுபரிசீலனை செய்யக் கோரி இந்தியாவுக்கு பாகிஸ்தான் தொடர்ந்து 4 முறை கடிதம் அனுப்பியுள்ளது. ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலை தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் இடையிலான சிந்து நதி நீர் பகிர்வு ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக இந்தியா அறிவித்தது. இதற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்தாலும் அதனை இந்தியா பொருட்படுத்தவில்லை. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானுக்கு எதிராக ஆபரேஷன் … Read more

பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் தமிழில் தவறாக வைக்கப்பட்ட பெயர் பலகை அகற்றம்

பொள்ளாச்சி பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் தமிழில் தவறாக வைக்கப்பட்ட பெயர் பலகை அகற்றப்பட்டுள்ளது. கடந்த 1915-ம் ஆண்dஉ பொள்ளாச்சியில் தொடங்கப்பட்ட ரயில் நிலையத்தில் தற்போது அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.6 கோடியே 33 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இங்கு பயணிகளுக்கான இருக்கைகள், காத்திருப்பு அறைகள், கழிவறை வசதிகள், மேற்கூரைகள், சுத்தமான குடிநீர், குளிரூட்டப்பட்ட பயணிகள் காத்திருப்பு அறை, ரெயில் வருகை மற்றும் புறப்பாடு குறித்த டிஜிட்டல் திரைகள் உள்ளிட்ட … Read more

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,133 ஆக உயர்வு

புதுடெல்லி, கடந்த 2019-ம் ஆண்டு சீனாவில் பரவ ஆரம்பித்த கொரோனா நோய், நாளடைவில் உலகம் முழுவதும் பரவி பல உயிரிழப்புகளை ஏற்படுத்தியது. இதனிடையே தடுப்பூசி செலுத்திய பிறகு, கொரோனா நோய்த் தொற்றின் பரவல் சற்று குறைந்தது. 2022-ம் ஆண்டு வரை உச்சத்தில் இருந்து, பின்னர் 2023 மற்றும் 2024-ம் ஆண்டுகளில் நோய்த்தொற்றின் தீவிரத்தன்மையும், இறப்பு விகிதமும் குறைந்திருந்தது. இந்நிலையில், இந்தியாவில் தற்போது மீண்டும் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. நாடு முழுவதும் தற்போது கொரோனா தொற்றால் … Read more

அமெரிக்காவில் கலவரத்தை கட்டுப்படுத்த 2 ஆயிரம் ராணுவ வீரர்கள் குவிப்பு

லாஸ் ஏஞ்சல்ஸ், அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் பொறுப்பேற்ற பிறகு நிர்வாகத்தில் பல்வேறு-அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். அதன்படி அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை என்ற கொள்கையை கடைப் பிடிக்கும் அவர் சட்ட விரோதமாக குடியேறியவர்கள் அந்நாட்டைவிட்டு வெளியேறவும் உத்தரவிட்டார். இதனையடுத்து அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர். டிரம்பின் இந்த நடவடிக்கைக்கு பல உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனாலும் ஜனாதிபதி டிரம்ப் தனது முடிவில் உறுதியாக இருக்கிறார்.இதையடுத்து நாடு முழுவதும் சட்டவிரோதமாக குடியேறியவர்களை கண்டறிய குடியேற்ற … Read more

இன்றைய ராசிபலன் | Indraya Rasi palan | June 9 | Today Rasi palan | Astrology | Bharathi Sridhar

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் பாரதி ஶ்ரீதர். Source link